மேற்க்கிந்தியத் தீவுகள் அணியின்  ருத்ரதாண்டவமும், ட்விட்டர் வாசிகளின் கருத்துக்களும்

Enter capti

கிரிக்கெட்டின் திருவிழா எனக் கருதப்படும் ஐசிசி உலகக் கோப்பை போட்டிகள் இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் சொந்த அணியான இங்கிலாந்து தென் ஆப்பிரிக்காவை தனது முதல் போட்டியில் வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் மேற்க்கிந்திய தீவுகள் அணி மோதின. இப்போட்டி பொருத்தமட்டில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில் இவ்விரு அணிகளும் யூகிக்க முடியாத சக்தி வாய்ந்த அணிகளாக வலம் வருகின்றன. இரண்டு அணிகளும் போட்டி எந்த திசைக்கு சென்றாலும் அதை இழுத்து தமது போக்கிற்கு மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த வீரர்களைக் கொண்டுள்ளது.

இதனிடையே டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சை தேர்வு செய்தார். எனினும் இந்த ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஏற்ற சூழலில் இல்லை எனக் கருதப்பட்டது இருப்பினும் மைதானத்தில் சிறிது நீர்ப்பசை இருந்ததால் மேற்க்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஆட்டத்தின் முதல் பகுதியிலேயே பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கரீபியன் பந்துவீச்சாளரான ஷெல்டன் காட்ரல் பாகிஸ்தானின் தொடக்க வீரரான இமாம் உல் அக்கினுடைய விக்கெட்டை வீழ்த்தினார். மேற்க்கிந்தியத் தீவுகளின் ஆல்ரவுண்டரான ரசல் பக்கர் ஸமானின் விக்கெட்டை வீழ்த்தினார். ஒரு சமயத்தில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இருப்பினும் தனது பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணியின் ஆட்டக்காரரான பாபர் அசாம் நம்பிக்கையூட்டினார். இருப்பினும் அந்த நம்பிக்கையை தாமஸ் உடைத்தெறிந்தார். தாமஸ் அவரின் விக்கெட்டை வீழ்த்திய பின் பாகிஸ்தான் அணி பரிதாபமான அணியாக காணப்பட்டது. இதனிடையே பாகிஸ்தான் அணி 105 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

கிரிக்கெட் பொருத்தமட்டில் குறைந்த ரன்கள் உடைய இருந்தா பயங்கரமான போட்டிகளாக கருதப்படுகிறது. இப்போட்டிகள் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சாயலாம் என கருதப்படுகிறது. ஆனால் மேற்க்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் இருக்கையில் 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மேற்க்கிந்திய தீவுகள் அணி களம் இறங்கியது. தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தினால் கிறிஸ் கெய்ல் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு சவால் விடுத்தார். எனினும் மேற்கு இந்திய தீவுகள் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்தது. கிறிஸ் கெயிலின் அரை சதத்துடன் கிழக்கிந்திய தீவுகள் அணி வெறும் 13 ஓவர்களில் இலக்கை எட்டி பாகிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்தியது. இப்போட்டியில் அதிகபட்ச ரன்களை கிரிஸ் கெய்ல் அடித்தார்.

இதேபோன்று 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தனது முதல் போட்டியில் இதே பாகிஸ்தான் அணி இதே மேற்க்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டது. அப்பொழுது இதேபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியது. பாகிஸ்தான் அணி 83 ரன்களுக்கு மேறக்கிந்திய தீவுகள் அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தது எனினும் 1992 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை பாகிஸ்தான் அணி வென்றது. அதனால் இப்பொழுதும் அதே போன்று நடக்கும் என பாகிஸ்தான் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

இதனிடையே பாகிஸ்தானின் இந்த தோல்வியை ட்விட்டர் உலகம் எவ்வாறு நோக்கியது என்று பார்க்கலாம்..

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now