மேற்கிந்தியத் தீவுகளிடம் 105 ரன்களில் சுருண்ட பாகிஸ்தானை டிவிட்டரில் தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்

WINDIES celebration
WINDIES celebration

2019 உலகக்கோப்பை தொடரின் 2வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் நாட்டிங்காம்ஹைரில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மோதின. இதில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஜேஸன் ஹோல்டர் டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தார். சற்று திடமான இந்த மைதானத்தில் பாகிஸ்தான் அணி 105 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெளியேறியது. மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்த மைதானத்தை தகுந்தவாறு பயன்படுத்தி கொண்டனர். பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை வைத்து அருமையாக சோதனை செய்து பார்த்தனர்.

பாகிஸ்தான் அணி மோசமான தொடக்கத்தை அளித்தது. தொடக்க ஆட்டக்காரர் இமாம்-உல்-ஹக், ஷெல்டன் கட்ரில்லா-வினால் விக்கெட் வீழ்த்தப் பட்டார். இடதுகை பேட்ஸ்மேனான இமாம்-உல்-ஹக் சாற்று தாழ்வாக இடப்பக்கமாக வந்த பந்தை பேட் கொண்டு தட்டிவிட்டதில், அது கேட்சாக ஷை ஹோப்பிடம் சென்றது. இமாம்-உல்-ஹக் 11 பத்துகளை எதிர்கொண்டு 2 ரன்கள் மட்டுமே அடித்தார்.

அடுத்தாக ஃபக்கர் ஜமான், ஆன்ரிவ் ரஸலின் பந்தை நேராக எதிர்கொள்ள நினைத்து பேட்டை சுழற்ற பந்து பேட்டில் பட்டு ஸ்டம்பில் அடித்ததது. ஹாரிஸ் சோஹாய்ல் ஷார்ட் பந்தை சரியாக கணிக்காமல் விளையாடிய காரணத்தால் பந்து ஷை ஹோப்பிடம் சென்றது. இதன்மூலம் ஷை ஹோப் தனது இரண்டாவது கேட்சை பிடித்தார்.

பாபர் அஜாம் மற்றும் கேப்டன் சஃப்ரஸ் அகமது ஆகியோரிடம் பேட்டிங் பொறுப்பு வந்தது. அஜாம் இடப்பக்கமாக வந்த பந்தை விளாச பந்து ஆடுகளத்தின் நடுமையத்தில் விள சென்ற போது ஷீம்ரன் ஹட்மைர் கேட்ச் பிடிக்க முயன்று தவறவிட்டார். இருப்பினும் பாபர் அஜாம் தனக்கு அளிக்கப்பட்ட இரண்டாம் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளமால் வலப்புறம் வந்த பந்தை சுழற்ற முயன்றபோது விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.

கேப்டன் சஃப்ரஸ் அகமது, இமாம்-உல்-ஹக் போலவே தாழ்வாக வந்த பந்தை இடம்புறமாக பேட் கொண்டு விளாச முற்பட்டபோது ஷைய் ஹோப்பிடம் கேட்ச் ஆனார். இமாட் வாஷிம்-மும் ஜேஸன் ஹோல்டரிடம் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த கிறிஸ் கெய்ல்-டம் கேட்ச் ஆனார். ஷதாப் கான், ஓஸானே தாமஸ் வீசிய பந்தை பேட் கொண்டு தொட முயன்ற போது தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். ஹாசன் அலி, ஜேஸன் ஹோல்டர் வீசிய பந்தில் மிகப்பெரிய ஷாட்டிற்கு சென்ற போது மைதானத்தின் நடுமத்தியில் ஷெல்டன் கார்டில்லா-விடம் மிக எளிமையாக கேட்ச் ஆனார். முகமது ஹாபிஜ் சற்று நிலைத்து விளையாட முயன்ற போது ஓஸானே தாமஸ் வீசிய பவுண்ஸர் பந்தில் மீண்டும் ஷெல்டன் கட்ரேல்-ம் மிக எளிமையான முறையில் கேட்ச் ஆனார். வாஹாப் ரியாஜ் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18 ரன்களை விளாசினார். அவரும் தாமஸ் வீசிய யார்க்கரில் போல்ட் ஆகி வெளியேறினார்.

பாகிஸ்தானில் ஃபக்கர் ஜமான் மற்றும் பாபர் அஜாம் தலா 22 ரன்களை குவித்தனர்.

ஒஸானே தாமஸ் 4 விக்கெட்டுகளையும், ஜேஸன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், ஆன்ரிவ் ரஸல் 2 விக்கெட்டுகளையும், ஷெல்டன் காட்ரேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பாகிஸ்தானின் மோசமான இன்னிங்ஸிற்கு டிவிட்டரில் ரசிகர்களின் வெளிபாடு:

Quick Links

Edited by Fambeat Tamil