இலங்கையின் மோசமான ஆட்டத்தினைக் கண்டு டிவிட்டரில் தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்

New Zealand Team
New Zealand Team

2019 உலகக் கோப்பை தொடரில் இலங்கை விளையாடிய முதல் போட்டியிலேயே 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெளியேறியது. ஜீன் 1 அன்று கர்டிஃபில் உள்ள சோபியா கார்டனில் நடந்த 2019 உலகக் கோப்பை தொடரின் மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கானே வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இலங்கை அணிக்கு ஆரம்பமே மோசமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் திரமனே, மேட் ஹன்றி வீசிய இரண்டாவது பந்திலே தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். கள நடுவர் இயான் க்ளவுட் முதலில் நாட் அவுட் என்று கூறினார். இருப்பினும் கானே வில்லியம்சன் 3வது அம்பையரிடம் முறையிட்டார், பின்னர் அவுட் வழங்கப்பட்டது.

பின்னர் களமிறங்கிய குசல் பெரரா, கேப்டன் திமுத் கருணாரத்னேவுடன் இனைந்து 42 ரன்கள் சேர்த்தார். குசல் பெரரா சில சிறப்பான ஹிட்டிங் ஷாட்களை விளாசி வந்தார். இருப்பினும் மேட் ஹன்றி வீசிய பந்தை குசல் பெரரா பேட் கொண்டு தட்டிவிட்டார். பந்து சற்று மேல்நோக்கி எழும்பி காலின் டி கிரான்ட் ஹோம்-டம் கேட்ச் ஆனது.

அத்துடன் மேட் ஹன்றி வீசிய அடுத்த பந்தில் குசல் மென்டிஸ் மார்டின் கப்தில்-டம் கேட்ச் ஆனார். இலங்கை அணியின் இன்னிங்ஸ் கிட்டத்தட்ட முடிவிற்கு வந்தது. பின்னர் களமிறங்கிய தனஞ்செயா தி செல்வா, லாக்கி பெர்குசனிடம் தனது விக்கெட்டை இழந்தார்.

முன்னாள் இலங்கை கேப்டன் ஆன்ஜீலோ மேதீவ்ஸும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் காலின் டி கிரான்ட் ஹாம் வீசிய பந்தில் டாப் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் டாம் லேதமிடம் கேட்ச் ஆனார். லாக்கி பெர்குசனின் வேகத்தை எதிர்கொண்ட ஜீவன் மென்டிஸ் பேட் கொண்டு விளாசிய போது பந்து பேட்டில் சிறிது பட்டு ஜேம்ஸ் நிஸாமிடம் கேட்ச் ஆனார். நியூசிலாந்து பௌலர்களுக்கு இந்த மைதானம் சரியாக உதவியது. நன்றாக பந்து பவுண்ஸராகச் இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு சென்றது. களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சிறிது நேரம் மட்டுமே நின்று விளையாடினர் .

பின்னர் களமிறங்கிய திஸாரா பெராரா சற்று அதிரடி ஆட்டத்தை சிறிது நேரம் விளையாடினார். இவர் 2 சிக்ஸர்களுடன் 27 ரன்களை எடுத்தார். பின்னர் சான்டனர் வீசிய சுழலில் டிரென்ட் போல்ட்-டம் கேட்ச் ஆகி வெளியேறினார் திஸாரா பெராரா. அதன்பின் களமிறங்கிய சுரங்கா லக்மல், ஸ்ரூ உடனா, லாசித் மலிங்கா அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். தொடர் விக்கெட்டுகள் சரிவிற்கு இடையில் திமுத் கருணாரத்னே மட்டும் கேப்டனாக ஆரம்பத்திலிருந்து இறுதி வரை விளையாடி அரைசதம் விளாசினார்.

இலங்கை அணி 29.2 ஓவர்களை எதிர்கொண்டு 136 ரன்களை அடித்தது. நியூசிலாந்து அணியில் லாக்கி பெர்குசன், மேட் ஹன்றி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். டிரென்ட் போல்ட், மிட்செல் சான்ட்னர், காலின் டி கிரான்ட் ஹாம், ஜேம்ஸ் நிஸாம் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

நாம் இங்கு இலங்கை அணியின் மோசமான இன்னிங்ஸிற்கு டிவிட்டரில் நெட்டிசன்கள் வெளிபடுத்திய வெளிபாட்டைப் பற்றி காண்போம்:

Quick Links

Edited by Fambeat Tamil