வங்கதேசத்தின் சிறப்பான பேட்டிங்கை கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்த டிவிட்டர் வாசிகள்

Rahim & Shakip
Rahim & Shakip

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தனது முதல் போட்டியில் வங்கதேசம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 330 ரன்களை இலக்காக நிர்ணயித்ததுள்ளது. 2019 உலகக் கோப்பை தொடரின் 5வது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் மோதியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் ஃபேப் டுயுபிளஸ்ஸி ஆச்சரியமளிக்கும் விதமாக பௌலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த வங்கதேச தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். தமீம் இக்பால் மற்றும் சௌம்யா சர்கர் ஆகியோர் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 60 ரன்கள் தங்களது பார்ட்னர் ஷிப்பில் குவித்தனர்.

சௌம்யா சர்கர் பந்தை நன்றாக கணித்து விளையாடி பவுண்டரிகளை பறக்க விட்டுக் கொண்டிருந்தார். மறுமுனையில் தமீம் இக்பால் மிகவும் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தனர். தென்னாப்பிரிக்க அணிக்கு முதல் விக்கெட் ஆன்டில் பெஹில்க்வாயோ வீசிய பந்தை தமீம் இக்பால் எதிர்கொண்ட போது பேட்டில் பட்டு ஸ்டம்பில் அடித்தது.

சௌம்யா சர்கரின் இரு கேட்சுகளை ஃபேப் டுயுபிளஸ்ஸி மற்றும் எய்டன் மக்ரம் தவறவிட்டனர். சௌம்யா சர்கர் அடித்த 42 ரன்களில் 36 ரன்கள் பவுண்டரிகளின் மூலம் வந்ததது. இந்த அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் மோரிஸ் வீசிய வேகத்தில் ஷார்ட பிட்ச் பந்தாக வீசியதில் கேட்ச் ஆனார்.

பின்னர் களமிறங்கிய வங்கதேச பேட்ஸ்மேன்களான முஷ்டஃபிசுர் ரஹீம் மற்றும் ஷகிப் அல் ஹாசன் சிறப்பாக பார்ட்னர் ஷிப் செய்து விளையாடி 142 ரன்களை இருவரும் குவித்தனர். இரண்டு அனுபவ பேட்ஸ்மேன்களும் தங்களது முழு ஆட்டத்திறனை வெளிக்கொண்டு வந்து வங்கதேசத்தின் ரன்களை உயர்த்தினர். ரஹீம் மற்றும் ஷகிப் அல் ஹாசன் இருவருமே சிறப்பான பந்துவீச்சில் பொறுமையாகவும், சற்று மோசமான பந்துவீச்சில் அதிரடியாகவும் விளையாடினர். இதற்கிடையில் லுங்கி நிகிடிக்கு முதுகுவலி ஏற்பட்ட காரணத்தால் அவரால் 4 ஓவர்களுக்கு மேல் பந்து வீச இயலவில்லை.

ஷகிப் அல் ஹாசன் ஸ்விப் ஷாட் விளாச முற்பட்ட போது இம்ரான் தாஹீர் வீசிய பந்து பேட்டில் படாமல் ஸ்டம்பில் அடித்தது. பின்னர் களமிறங்கிய முகமது மிதுன் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். இருப்பினும் இம்ரான் தாஹீர் சுழலை சரியாக எதிர்கொள்ளாத காரணத்தால் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

நன்றாக நிலைத்து விளையாடி வந்த ரஹீம், ஆன்டில் பெலுக்வாயோ வீசிய பந்தை சரியாக எதிர்கொள்ளத காரணமாக வென் டேர் துஸனிடம் கேட்ச் ஆனார். கடைசி கட்டத்தில் வங்கதேசத்தின் பேட்டிங்கை கட்டுபடுத்தும் முயற்சியில் தென்னாப்பிரிக்க பௌலர்கள் பந்துவீச்சை மேற்கொள்ள தயராகினர்.

ஆனால் மொஷதீக் ஹைசைன் மற்றும் மெக்மதுல்லா இனைந்து கடைநிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தை முடித்து வைத்தனர். உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக வங்கதேசம் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.

வங்கதேசத்தின் சார்பாக ரஹீம் 78 ரன்களும், ஷகிப் அல் ஹாசன் 75 ரன்கள் மற்றும் மெக்மதுல்லா 41 ரன்களையும் விளாசினர். பௌலிங்கில் இம்ரான் தாஹீர், ஆன்டில் பெலுக்வாயோ மற்றும் கிறிஸ் மோரிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

நாம் இங்கு வங்கதேசத்தின் அதிரடி பேட்டிங்கிற்கு டிவிட்டர் வாசிகள் வெளிபடுத்திய வெளிபாட்டை காண்போம்.

Quick Links

App download animated image Get the free App now