பாகிஸ்தான் அணி ஒரு கணிக்க முடியாத அணி என்பது நமக்கு தெரியும். 2019 உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் போட்டியில் 105 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இருப்பினும் பாகிஸ்தான் அணி தகுந்த பயிற்சியை மேற்கொண்டு உலகக் கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக திகழும் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் 348 ரன்களை குவித்தது. நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பௌலிங்கை தேர்வு செய்தார்.
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இமாம் உல் ஹக் மற்றும் ஃபக்கர் ஜமான் இனைந்து முதல் விக்கெட்டிற்கு 82 ரன்களை விளாசினர். அதிரடி ஆட்டக்காரர் ஃபக்கர் ஜமான் 6 பவுண்டரிகளுடன் 36 ரன்களை குவித்தார். இருப்பினும் இடதுகை பேட்ஸ்மேன் ஃபக்கர் ஜமான் மொய்ன் அலி வீசிய பந்தை எதிர்கொண்ட போது ஜாஸ் பட்லரின் நுணுக்கமான ஸ்டம்பிங் மூலம் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
மேலும், இமாம் உல் ஹக், இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழும் கிறிஸ் வோக்ஸ் ஓவரை சரியாக எதிர்கொண்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மொய்ன் அலி சுழலில் வீழ்ந்தார். பின்னர் களமிறங்கிய பாபர் அஜாம் மற்றும் முகமது ஹபீஜ் தொடக்க ஆட்டக்காரர்கள் வெளிபடுத்திய ஆட்டத்தைப் போலவே சிறப்பான ஆட்டத்தை மேற்கொண்டனர்.
பாபர் அஜாம் தனது அரைசதத்தை விளாசினார். அத்துடன் ஹபிஜ் பந்தை சரியாக கணித்து விளையாடி அரைசதத்தை அடித்தார். இரு ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன்களும் 3வது விக்கெட்டிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 88 ரன்களை குவித்தனர். மொய்ன் அலி வீசிய பந்தை பாபர் அஜாம் பெரிய ஷாட் விளாச முற்பட்ட போது கிறிஸ் வோக்ஸ்-டம் கேட்ச் ஆனார்.
முகமது ஹபீஜ் 14 ரன்கள் எடுத்திருந்த போது தவறான ஷாட் விளாசிய போது பந்து ஜேஸன் ராய்-டம் சென்றது. ஆனால் அந்த கேட்சை அவர் தவற விட்டார். இதனை முகமது ஹபீஜ் சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஜேஸன் ராய் ஃபீல்டிங் செய்யும்போது கண் கண்ணாடியை தொப்பி மீது வைத்திருந்த காரணத்தால் ஒரு எளிமையான கேட்சை தவறவிட்டார். முகமது ஹபீஜ் இங்கிலாந்து பௌலர்களின் பந்துவீச்சை பறக்க விட்டு 62 பந்துகளில் 82 ரன்களை விளாசினார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். சஃப்ரஸ் அகமது பேட்டிங்கில் ஒரு வரிசை முன் கூட்டியே களமிறங்கினார். ஆனால் இந்த நேரத்தில் அவர் களமிறங்கியது தவறாகும். இருப்பினும் சஃப்ரஸ் அகமது இங்கிலாந்தின் ஃபீல்டிங் இடங்களை சரியாக பயன்படுத்திக் கொண்டு பவுண்டரிகளை விளாசினார். இவர் 46 பந்துகளை எதிர்கொண்டு தனது அரைசதத்தை விளாசினார்.
கிறிஸ் வோக்ஸ், மொய்ன் அலி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மார்க் வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசி 5 வருடங்களாக பாகிஸ்தான் அணி ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது விக்கெட்டை இழக்கும். ஆனால் தற்போது அதிகம் மேம்பட்ட அணியாக பாகிஸ்தான் திகழ்கிறது.