ராயுடுவின் ஓய்விற்கு சமூக வலைதளத்தில் குவியும் முன்னாள் வீரர்களின் ஆதகங்கள்

Ambati Rayudu
Ambati Rayudu

அம்பாத்தி ராயுடு அனைத்து விதாமான கிரிக்கெட்டிலிருந்தும் ஜீன் 3 அன்று தனது ஓய்வினை திடீரென அறிவித்துள்ளார். இவர் 55 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 47.06 சராசரியுடன் 1694 ரன்களை குவித்துள்ளார். இதில் 3 சதங்கள் மற்றும் 10 அரைசதங்கள் அடங்கும். அத்துடன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 6 சர்வதேச டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். 96 முதல்தர போட்டிகளில் பங்கேற்று 6151 ரன்களை விளாசியுள்ளார். இதில் 16 சதங்கள் மற்றும் 34 அரைசதங்கள் அடங்கும்!

அம்பாத்தி ராயுடுவின் ஓய்விற்காக பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் தங்களது அனுதாபத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர். அதைப்பற்றி இங்கு காண்போம்!

சச்சின் டெண்டுல்கர்

அம்பாத்தி ராயுடு, உங்களது பங்களிப்பை இந்திய அணிக்கு அளித்ததற்கு மிக்க நன்றி! மும்பை இந்தியன்ஸ் அணியில் இருவரும் இடம்பெற்று விளையாடும் போது உங்களுடன் நிறைய நியாபகங்கள் உள்ளது. உங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸிற்கு வாழ்த்துக்கள்!

விரேந்தர் சேவாக்

அம்பாத்தி ராயுடுவை இந்திய உலகக்கோப்பை அணியில் சேர்க்காதது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் கிரிக்கெட் ஓய்விற்கு பின் உங்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது ராயுடு. வாழ்த்துக்கள்!

விராட் கோலி:

நீங்கள் முன்னேறிச் செல்ல விரும்புகிறேன் அம்பாத்தி. நீங்கள் ஒரு சிறந்த மனிதர்👊👏

கௌதம் காம்பீர்

இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு ஒரு நிறைவேறாத கொள்கையைக் கொண்டு விளங்குவது ஒரு ஆச்சரியத்தை அளிக்கிறது. அம்பாத்தி ராயுடு போன்ற திறமை மிக்க கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு சிறு வாய்ப்பை கூட அளிக்காமல் அவர்களது திறமையை வீணடிக்கின்றனர். என்ன ஒரு அவமானம்!!! வெற்றிகளை குவிப்பது முக்கியமான குறிக்கோளாக இருந்தாலும் இதயம் என்பது இருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

இர்ஃபான் பதான்

இந்திய U19 அணி, பரோடா அணிகளில் அம்பாத்தி ராயுடுவுடன் இனைந்து விளையாடிய பல நியாபகங்கள் உள்ளன. உலகக்கோப்பையில் இந்திய அணியின் நம்பர் 4 பேட்ஸ்மேனாக விளையாட விரும்பினார். உங்களது கிரிக்கெட் வாழ்விற்கு வாழ்த்துக்கள் சகோதரரே!

ரவிச்சந்திரன் அஸ்வின்

ராயுடுவுடன் பல நியாபக நிகழ்வுகள் களத்தின் உள்ளே மற்றும் வெளியே பல நினைவுகள் உள்ளன. கிரிக்கெட் ஓய்விற்கு பின் உங்களது வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகள்!

இஷாந்த் சர்மா

அம்பாத்தி ராயுடு சில சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்கு அளித்துள்ளார். உங்களது எதிர்கால்த்திற்கு வாழ்த்துக்கள் ராயுடு. நீங்கள் ஒரு சிறந்த மனிதர்!

ஆர்.பி சிங்

ராயுடு உங்களது இரண்டாவது இன்னிங்ஸ் சிறப்பாக அமைய வாழ்த்துகள்! உங்களுடனான U19 நியாபகங்கள் என்றும் மறக்க மாட்டேன். வாழ்த்துக்கள் சகோதரரே!

விவி எஸ் லக்ஷமன்

அம்பாத்தி ராயுடு, உங்களது வேதனை எனக்கு நன்றாக புரிகிறது. அவசரப்படாமல் இருந்திருந்தால் உலகக்கோப்பைக்கு பின்னர் உங்களது சிறப்பான ஆட்டம் வெளிபட்டு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருக்க அதிக வாய்ப்புண்டு. உங்களது இரண்டாவது இன்னிங்ஸில் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைய வாழ்த்துக்கள்!

சுரேஷ் ரெய்னா

நன்றி! ஆனால் இந்த ஓய்வு பெரிய இழப்பு! ராயுடுவின் அற்புதமான கிரிக்கெட் வாழ்விற்கு வாழ்த்துக்கள். ஒரு சிறந்த கிரிக்கெட் பயணம்! ஓய்வறையில் ராயுடுவின் உரையாடல்களை மிகவும் அதிகமாக மிஸ் செய்கிறேன். எப்பொழுதும் ராயுடுவுடனான நட்பு மறையாது!

மனோஜ் திவாரி

ராயுடு இம்முடிவை மேற்கொள்ள உணர்வு எனக்கு புரிகிறது மற்றும் அவரது ஓய்வு முடிவிற்கான தற்போதைய சூழ்நிலை எனக்கு தெரிகிறது. எது நல்லது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். உங்களது வாழ்க்கை பயணத்தை கடவுள் இப்படித்தான் எழுதியுள்ளார. கடவுள் ஆசீர்வாதத்துடன் வாழ்த்துக்கள் ராயுடு.

ஷீகார் தவான்

உங்களது எதிர்கால வாழ்க்கைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அம்பாத்தி ராயுடு. அனைத்தும் நன்றாக நடைபெறட்டும் சகோதரரே!

முரளி கார்த்திக்

இச்செய்தியை பார்த்த உடனே மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானேன் அத்துடன் பெரும் ஏமாற்றத்தை அடைந்தேன் அம்பாத்தி ராயுடு. நீங்கள் மிகவும் அவசரப்பட்டு விட்டதாக நான் உணர்கிறேன். உங்கள் வயது 33தான். நீங்கள் சாதிக்க இன்னும் நிறைய மைல்கல்கள் கிரிக்கெட்டில் உள்ளது. உங்களது கிரிக்கெட் வாழ்விற்கு காலம் பதில் சொல்லும். வாழ்த்துக்கள் நண்பரே.

ரிஷீ தவான்

கிரிக்கெட் வீரர்களுள் மிகவும் இலகிய மனதை கொண்டவர் அம்பாத்தி ராயுடு‌. எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. இந்தியா-ஏ அணியில் நான் அறிமுகமாகும் எனக்கு தொப்பியை அளித்து என்னை அறிமுகம் செய்தது நீங்கள் தான். உங்களது கிரிக்கெட் ஓய்விற்கு வாழ்த்துக்கள்! மிகவும் அற்புதமான வாழ்க்கை உங்கள் முன் உள்ளது! லெஜன்ட்🙏

பிரயக்யன் ஓஜா

வாழ்த்துக்கள் சகோதரரே! கிரிக்கெட் ஓய்விற்கு பின்னர் சிறந்த எதிர்காலம் உங்களுக்கு காத்துள்ளது!

வேணுகோபால் ராவ்

ராயுடு, உங்களது அற்புதமான கிரிக்கெட் வாழ்விற்கு வாழ்த்துக்கள்! உங்களை இவ்வருட உலகக்கோப்பை தொடரில் காண்பேன் என நினைத்தேன். ஆனால் எதிர்பார விதமாக உங்களது இரண்டாவது இன்னிங்ஸிற்கு சென்று விட்டீர்கள்!

Quick Links

App download animated image Get the free App now