மனோஜ் திவாரி
ராயுடு இம்முடிவை மேற்கொள்ள உணர்வு எனக்கு புரிகிறது மற்றும் அவரது ஓய்வு முடிவிற்கான தற்போதைய சூழ்நிலை எனக்கு தெரிகிறது. எது நல்லது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். உங்களது வாழ்க்கை பயணத்தை கடவுள் இப்படித்தான் எழுதியுள்ளார. கடவுள் ஆசீர்வாதத்துடன் வாழ்த்துக்கள் ராயுடு.
ஷீகார் தவான்
உங்களது எதிர்கால வாழ்க்கைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அம்பாத்தி ராயுடு. அனைத்தும் நன்றாக நடைபெறட்டும் சகோதரரே!
முரளி கார்த்திக்
இச்செய்தியை பார்த்த உடனே மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானேன் அத்துடன் பெரும் ஏமாற்றத்தை அடைந்தேன் அம்பாத்தி ராயுடு. நீங்கள் மிகவும் அவசரப்பட்டு விட்டதாக நான் உணர்கிறேன். உங்கள் வயது 33தான். நீங்கள் சாதிக்க இன்னும் நிறைய மைல்கல்கள் கிரிக்கெட்டில் உள்ளது. உங்களது கிரிக்கெட் வாழ்விற்கு காலம் பதில் சொல்லும். வாழ்த்துக்கள் நண்பரே.
ரிஷீ தவான்
கிரிக்கெட் வீரர்களுள் மிகவும் இலகிய மனதை கொண்டவர் அம்பாத்தி ராயுடு. எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. இந்தியா-ஏ அணியில் நான் அறிமுகமாகும் எனக்கு தொப்பியை அளித்து என்னை அறிமுகம் செய்தது நீங்கள் தான். உங்களது கிரிக்கெட் ஓய்விற்கு வாழ்த்துக்கள்! மிகவும் அற்புதமான வாழ்க்கை உங்கள் முன் உள்ளது! லெஜன்ட்🙏
பிரயக்யன் ஓஜா
வாழ்த்துக்கள் சகோதரரே! கிரிக்கெட் ஓய்விற்கு பின்னர் சிறந்த எதிர்காலம் உங்களுக்கு காத்துள்ளது!
வேணுகோபால் ராவ்
ராயுடு, உங்களது அற்புதமான கிரிக்கெட் வாழ்விற்கு வாழ்த்துக்கள்! உங்களை இவ்வருட உலகக்கோப்பை தொடரில் காண்பேன் என நினைத்தேன். ஆனால் எதிர்பார விதமாக உங்களது இரண்டாவது இன்னிங்ஸிற்கு சென்று விட்டீர்கள்!
Edited by Fambeat Tamil