முதல் டெஸ்ட் போட்டியிலேயே அரைசதம் அடித்த மாயங்க் அகர்வால், ட்விட்டரில் ரசிகர்கள் ஆரவாரம் !

மயங்க் அகர்வால்
மயங்க் அகர்வால்

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் தொடங்கியது. போட்டிக்கு முன்பு நடைபெற்ற டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார் இந்திய கேப்டன் விராட் கோலி. இந்த போட்டியில் இந்திய அணி மிக முக்கியமான மூன்று மாற்றங்களை செய்திருந்தது. ரவீந்திர ஜடேஜா, புதுமுக மாயங்க் அகர்வால் மற்றும் காயத்திலிருந்து மீண்ட ரோஹித் ஷர்மா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். சமீபகாலமாக தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் கே.எல் ராகுல் சொதப்பி வரும் காரணத்தால் புதுமுக வீரரான மயங்க் அகர்வாலை அறிமுகப்படுத்தியது இந்திய அணி.

இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக மாயக் அகர்வால் மற்றும் ஹனுமா விஹாரி களமிறங்கினர். பேட்டிங் வரிசையில் முதன்முதலாக தொடக்க வரிசையில் களம் கண்டிருந்தார் ஹைதெராபாத்தை சேர்ந்த ஹனுமா விஹாரி. முன்னெப்போதுமில்லாது இந்த தொடக்க இணையானது 40 ரன் பார்ட்னர்ஷிப்பை கடந்து நல்ல தொடக்கத்தை இந்திய அணிக்கு தந்தது. விஹாரி அவுட் ஆகி பெவிலியன் திரும்பவே, இந்தியாவின் புதிய சுவர் என்று அழைக்கப்படும் செதேஸ்வர் புஜாரா களமிறங்கினார். மாயங்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த புஜாரா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இருவரும் 50 ரன் பார்ட்னர்ஷிப்பை மெருகேற்றினர். தேநீர் இடைவேளையில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வலுவான நிலையில் இருந்தது இந்திய அணி.

இடைவெளிக்கு பின்பு களமிறங்கிய மாயக் அகர்வால் தனது முதல் சர்வதேச டெஸ்ட் அரை சதத்தை பூர்த்தி செய்தார். புதிய பந்தை நேர்த்தியாக ஆடுதல் மற்றும் ரன்களை தகுந்த சமயத்தில் எடுத்தல் என்று அகர்வால் சிறப்பாக விளையாடினார். குறிப்பாக இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த ஆஸ்திரேலியா சுழற்பந்துவீச்சாளர் நாதன் லியொனை சிறப்பாக எதிர்கொண்டார் மாயங்க் அகர்வால். துரதிர்ஷ்டவசமாக 76 ரன்கள் எடுத்திருந்த பொது பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் அவுட் ஆனார் அகர்வால்.

இந்தத் தொடரை பொறுத்தவரை, இன்று நடந்த போட்டியில் 50 ரன்களை கடந்த முதல் இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் அகர்வால். இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா மண்ணில் தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் களம் கண்டிருந்து 50 ரன்களை கடந்த 2வது வீரர் என்ற பெருமையும் பெற்றார் அகர்வால். இதற்கு முன்பு இந்திய வீரரான தத்து ஃபட்கர் தனது முதல் போட்டியில்(ஆஸ்திரேலியா மண்ணில்) 50 ரன்களை கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த இந்திய தொடக்க ஆட்டக்காரர்களின் ஆட்டத்தை கண்டு, இந்திய ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் வெகுவாக மகிழ்ந்தனர். தொடக்கத்தில் விஹாரியும் புது பந்தை எதிர்கொண்டு நிதானமாக ஆடி அகர்வாலுக்கு துணையாக நின்றதன் காரணமாக அவரையும் நெட்டிசன்கள் பாராட்டினர்.

பூஜாராவின் ஆட்டத்தையும் வெகுவாக பாராட்டிய ரசிகர்கள், இந்திய அணி வலுவான நிலையில் இருப்பதை கண்டு சமூக வலைத்தளங்களில் பலதரப்பட்ட கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தொலைக்காட்சி வர்ணனையாளராக இருக்கும் ஆகாஷ் சோப்ரா மற்றும் ஹர்ஷா போக்லே இந்திய அணியை பாராட்டி தங்களது பதிவுகளை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ட்விட்டர் பதிவுகள் பின்வருமாறு:

Quick Links

Edited by Fambeat Tamil