ஐ பி எல் 2019 : காயம் காரணமாக வெளியேறிய கமலேஷ் நாகர்கோட்டி மற்றும் ஷிவம் மாவி

ஷிவம் மாவி
ஷிவம் மாவி

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர் பார்த்து காத்து கிடக்கும் இந்தியன் பிரீமியர் லீக் எனபடும் ஐ.பி.எல் போட்டி மார்ச் 23 ஆம் தேதி தொடங்குகிறது.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்ப்ர் கிங்ஸ் அணியை ஒரு முறையேனும் கோப்பையை வென்றே தீர வேண்டும் எனும் முனைப்புடன் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர் கொள்கிறது. இத்தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த இரு இளம் வீரர்கள் காயம் காரணமாக வெளியேறியுள்ளனர். அதைப்பற்றி இத்தொகுப்பில் காண்போம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த இளம் வீரர் கமலேஷ் நாகர்கோட்டி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த முறையும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஐ.பி.எல் சீசனிலும் காயம் காரணமாக ஆடவில்லை, அவர் மட்டுமில்லாமல் இளம் வீரரான ஷிவம் மாவியும் முதுகு வலி காரணமாக வெளியேறியுள்ளார்.

இதை பற்றி கொல்கத்தா அணி நிர்வாகம் கூறியதாவது "இவர்களுள் ஒருவருக்கு மாற்றுதலாக சந்தீப் வாரியரை அணியில் சேர்த்துள்ளோம்". சந்தீப் வாரியர் கடந்த டிசம்பரில் நடந்த ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கபடாமல் இருந்தார்.

சந்தீப் வாரியர் கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்தவர், வேகப்பந்து வீச்சாளரான இவர் நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பையில் கேரளாவுக்கு அதிக விக்கெட்டை வீழ்த்தியவர் ஆவார். அது மட்டுமில்லாமல் ரஞ்சி கோப்பையிலும் கேரளாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர். ஆந்திராவுக்கு எதிராக நடந்த சையது முஷ்டாக் கோப்பை போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

சந்தீப் வாரியர் 2013-2015 ஐ பி எல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பெர்குசன், ப்ரித்திவி ராஜ் போன்றோடு இணைந்து கொள்வார் சந்தீப்.

மேலும் கடந்த ஆண்டு நாகர்கோட்டிக்கு பதிலாக ஆடிய பிரசித் கிருஷ்ணாவும் அணியில் சேர்க்கபட்டுள்ளார். உள்ளுர் போட்டிகளில் கொல்கத்தா மாநிலத்துக்குகாக விளையாடும் இவர் கடந்த ஆண்டு 7 மேட்சுகள் ஆடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் தன் வசப்படுத்தினார்.

19 வயதே ஆன ஷிவம் மாவி மற்றும் கமலேஷ் நாகர்கோட்டி இந்தியாவுக்கான 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் விளையாடுகின்றனர். கடந்த ஆண்டு ப்ரித்திவி ஷா தலைமையிலான இந்த அணி நான்காவது முறையாக உலககோப்பை வென்றது. கமலேஷ் நாகர்கோட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 3.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்க பட்டார்.

ஷிவம் மாவி 2018 ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல் சீசனில் கொல்கத்தா அணிக்காக அறிமுகம் ஆனார். கடந்த ஆண்டு நடந்த விஜய் ஹசாரே கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் விஜய் ஹாசாரே கோப்பையில் உத்திர பிரதேச அணிக்காக விளையாடுகிறார். சவுராஸ்டிரா அணிக்கு எதிராக விளையாடும் போது இச்சாதனையை படைத்தார்.

2019 ஆம் ஆண்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி :

தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா,க்ரிஸ் லயன், ஆண்ரே ரசல்,சுனில் நரைன், சுபம் கில்,ப்யூஸ் சாவ்லா,குல்தீப் யாதவ்,ப்ரதேஷ் கிருஷ்னா, நிதிஷ் ராணா,ரின்கு சிங், கரோலஸ் ப்ரத்வொய்ட்,லூக்கி பெர்குசன்,ஆன்ரிச்,நிகில் நாயக்,குர்னே, யரா ப்ரித்திவி ராஜ்,ஜோ டென்லி, ஸ்ரீகாந்த் முகுந்த்.

Edited by Fambeat Tamil