கிரிக்கெட் போட்டிகளில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 என மூன்று வகையான போட்டிகள் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. இதில் அனைத்து வகை போட்டிகளிலும் அவ்வப்போது புதிய சாதனைகள் படைக்கப்படும். அதில் ஒரு சில சாதனைகளை நம்மால் நம்ப முடியாத அளவிற்கு இருக்கும். அந்த வகையில் இன்று நடைபெற்ற பெண்கள் டி 20 போட்டில் நம்மால் நினைத்துகூட பார்க்க முடியாத அளவிற்கு இமாலய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது உகாண்டா பெண்கள் அணி. இதனை பற்றி விரிவாக இந்த தொகுப்பில் காணலாம்.
கவிபுகா பெண்களுக்கான டி 20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் டன்சைனா, உகாண்டா, ரவாண்டா மற்றும் மலி ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள. இதில் லீக் போட்டிகள் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறும். இதில் லீக் போட்டியின் 5 வது போட்டி இன்று கிகாலி நகரில் உள்ள மைதானத்தில் நடை பெற்றது. இதில் டாஸ் வென்ற உகாண்டா அணி கேப்டன் முசாமலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன் படி அலகோ மற்றும் நக்கிசுயி ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.துவக்கம் முதலே அதிரடியாக விளயாடி பவுண்டரிகளை விளாசி அணிக்கு இந்த ஜோடி துவக்கம் தந்தது. 5 ஓவர்களுக்கே 75 ரன்கள் குவித்து அசத்தினார். இவர்கள் இருவரும் இணைந்து அணியின் ரன் ரேட் 15-க்கு குறையாமல் வெளியாடினர். அணியின் ஸ்கோர் 82 ஆக இருந்த நிலையில் நக்கிசுயி 34 ரன்களில் கோனே பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அணியின் கேப்டன் முசாமலி களமிறங்கினர்.
இவர் அலகோ உடன் இணைந்து அதே அதிரடியை தொடர்ந்தனர். இருவரும் இணைந்து ஓவருக்கு 2 பவுண்டரிகள் வீதம் அடித்து ஸ்கோரை இமாலய அளவிற்கு உயர்த்தினார். இவர்களில் விக்கெட்டை மல்லி அணி வீராங்கனைகளால் எடுக்கவே முடியவில்லை. இருவரும் தலா 15 பவுண்டரிகளுடன் அடுத்தடுத்து சதமடித்து அசத்தினார். மகளிருக்கான டி20 போட்டியில் இரு வீராங்கனைகள் ஒரே இன்னிங்சில் சதமடிப்பது இதுவே முதல்முறை.
20 ஓவர் முடிவில் இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை 314 ஆக உயர்த்தினார். டி 20 கிரிக்கெட் போட்டியிலேயே 300 ரன்கள் குவிப்பது இதுவே முதல்முறை. இதன் மூலம் புதிய உலக சாதனையையும் படைத்தனர் உகாண்டா மகளிர் அணியினர்.
இந்த போட்டியில் உகாண்டா அணியினர் குவித்த ரன்களில் 61 ரன்கள் எக்ஸ்ட்ரா ரன்கள் ஆகும். இதன் மூலம் மல்லி பந்துவீச்சாளர்கள் டி 20 கிரிக்கெட் வரலாற்றில் மோசமான பந்து வீச்சு என்ற சாதனைக்கு சொந்தக்காரர்களாகினர். இதில் சோவ் என்ற பந்துவீச்சாளர் 3 ஓவர்கள் பந்துவீசி 84 ரன்களை வழங்கியிருந்தார்.
அதன் பின்னர் 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மல்லி அணியினர் களமிறங்கினர். ஆனால் இவர்கள் கிரிக்கெட் வீராங்கனைகள் தானா என அனைவரும் நினைக்கும் வகையில் இவர்களின் விளையாட்டு இருந்தது. அனைத்து வீராங்கனைகளுக்கு அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினார். அதிலும் மொத்தமே 4 வீராங்கனைகள் மட்டுமே ரன்கள் எடுத்தனர். மற்ற அனைவரும் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
இவர்களது அணி சார்பில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னே 4 தான். மற்ற மூன்று வீராங்கனைகள் தலா ஒரு ரன்னும் எடுத்தனர். இறுதியில் வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது மல்லி அணி.
இதுவரை டி20 ஏன் ஒருநாள் போட்டிகளில் கூட இவ்வளவு ரன் வித்தியாசத்தில் எந்த அணியும் தோல்வியடைந்தது இல்லை.
இது மட்டுமல்லாமல் இதே தொடரின் கடந்த போட்டியில் மல்லி அணியினர் வெறும் 6 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.