கிரிக்கெட் விளையாட்டானது தோன்றிய ஆரம்பம் முதல் தற்போது வரை பல்வேறு வளர்ச்சியை எட்டியுள்ளது. அதற்கேற்றவாறு கிரிக்கெட் வீரர்களும் தங்களது மனநிலையை மாற்றியமைத்து விளையாடிவருகின்றனர். ஆனால் சமீபகாலமாக உலகெங்கும் டி20 கிரிக்கெட்டின் ஆதிக்கத்தால் டெஸ்ட் கிரிக்கெட் சற்று இறங்கு முகம் கண்டுள்ளதாக கருதப்படுகிறது. இருப்பினும் கிரிக்கெட் விளையாட்டு வகையில் டெஸ்ட் போட்டிகளுக்கு எப்போதும் ஒரு தனிச் சிறப்பு இடம் உண்டு. ஒரு வீரர் திறமை மிக்க வீரரா என்பதை கணிக்க 5 நாட்கள் அடங்கிய டெஸ்ட் கிரிக்கெட் மூலம் தீர்மானிக்க முடியும். அத்தகைய டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளை தற்கால வீரர்கள் படைத்தும் முறியடித்தும் வருகின்றனர். இருந்தாலும் ஒரு சில சாதனைகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் முறியடிப்பது மிகவும் கடினமான இலக்காக தற்கால வீரர்களுக்கு உள்ளது.
நாம் இங்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் முறியடிக்க இயலாத 11 சாதனைப் புள்ளிவிவரங்களைப் பற்றி காண்போம்.
#11 ராகுல் டிராவிட் - டெஸ்ட் போட்டிகளில் ஃபீல்டராக 210 கேட்சுகள்
டெஸ்ட் கிரிக்கெட் பொறுத்த வரை ராகுல் டிராவிட் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. டெஸ்ட் போட்டிகளில் டிராவிட் ஒரு சிறந்த ஃபில்டர் என்பது ஒரு சிலர் மட்டுமே அறிந்த உண்மையாகும். முன்னாள் இந்திய கேப்டனான இவர் டெஸ்ட் போட்டிகளில் 210 கேட்சுகளை பிடித்துள்ளார்.
மஹேல்லா ஜெயவர்த்தனே மட்டுமே இவருக்கு அடுத்தபடியாக 205 டெஸ்ட் கேட்சுகளை பிடித்துள்ளார். முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரான ஜெயவர்த்தனேவிற்கு இடைபட்ட காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் ராகுல் டிராவிட்டின் இந்த சாதனையை தற்போது வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் யாராலும் முறியடிக்க இயலாத சாதனையாகவே வலம் வருகிறது.
#10 குமார் சங்கக்காரா மற்றும் மஹேல்லா ஜெயவர்த்தனேவின் 624 டெஸ்ட் பார்ட்னர்ஷீப் ரன்கள்
குமார் சங்கக்காரா மற்றும் மஹேல்லா ஜெயவர்த்தனே ஆகிய இருவரும் இலங்கை கிரிக்கெட் அணிக்காக தங்களது பெரும் பங்களிப்பை அளித்துள்ளனர். இவர்கள் இருவரும் அதிக சமயங்களில் இலங்கை அணியை அபத்தான கட்டத்திலிருந்து காப்பாற்றியுள்ளனர்.
2006ல் கொழும்புவில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 3வது விக்கெட்டிற்கு களமிறங்கிய இவர்கள் இருவரும் 624 என்ற அதிகப்படியான ரன்களை பார்டனர்ஷீப் அமைத்து விளையாடினர். தற்காலங்களில் உள்ள அதிரடி பௌலிங்கிற்கிடையில் இந்த சாதனையை முறியடிப்பது மிகவும் கடினமான விஷயமாகும். தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியின் வெற்றியை பௌலிங்கே பெரும்பாலும் தீர்மானிக்கிறது.
#9 ரிக்கி பாண்டிங் - 108 டெஸ்ட் வெற்றிகளில் பங்களிப்பு
ஆஸ்திரேலிய அணியில் சிறந்த நட்சத்திர கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர் ரிக்கி பாண்டிங். 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதே தற்போது ஒரு மிகப்பெரிய சாதனையாக உள்ள நிலையில், ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலியாவின் 108 டெஸ்ட் வெற்றிகளில் தனது பங்களிப்பை அளித்துள்ளது ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
தற்கால கிரிக்கெட்டில் அதிகபடியான போட்டிகள் நிலவிவரும் காரணத்தால் ரிக்கி பாண்டிங் படைத்துள்ள இச்சாதனையை முறியடிப்பது மிகவும் கடினமான நிகழ்வாகும். மேலும் உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதவீத வெற்றிகளை குவித்த கேப்டன் ரிக்கி பாண்டிங்.