#8 மார்க் பௌச்சேர் - விக்கெட் கீப்பராக 555 டிஸ்மிஸ்கள்
கிரிக்கெட் விளையாட்டில் ஆல்-டைம் சிறந்த விக்கெட் கீப்பராக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மார்க் பௌச்சேர் உள்ளார். மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தி தன்னை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக வடிவமைத்துக் கொண்டார் மார்க் பௌச்சேர். இவர் மொத்தமாக 998 டிஸ்மிஸ்களை மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் செய்து ஆல்-டைம் சிறந்த விக்கெட் கீப்பராக உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக 905 டிஸ்மிஸ்களுடன் முன்னாள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் உள்ளார். மூன்றாவது இடத்தில் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி 829 டிஸ்மிஸ்களுடன் 3வது இடத்தில் உள்ளார்.
மார்க் பௌச்சேர் வீழ்த்திய 998 டிஸ்மிஸ்களில் 555 டிஸ்மிஸ்கள் டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியதாகும். இதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு விக்கெட் கீப்பரின் அதிகபட்ச டிஸ்மிஸ்களாக தற்போது வரை உள்ளது. தற்காலத்தில் அணிநிர்வாகங்கள் விக்கெட் கீப்பரை பொதுவாக நல்ல பேட்ஸ்மேன்களாக இருந்தால் மட்டுமே தேர்வு செய்வதால் மார்க் பௌச்சரின் இச்சாதனையை முறியடிப்பது மிகவும் கடினமான விஷயமாகும்.
#7 ஆலன் பார்டர் - இடைவெளியின்றி தொடர்ந்து அதிக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற வீரர்
முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆலன் பார்டர் ஒரு கிரிக்கெட் வீரராக இடைவெளியின்றக தொடர்ந்து அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சாதனையை தன்வசம் வைத்துள்ளார். இவர் மொத்தமாக 153 டெஸ்ட் போட்டிகளில் எவ்வித சிறு இடைவெளியும் இன்றி ஆடும் XIல் இடம்பெற்று தன் பங்களிப்பை ஆஸ்திரேலிய அணிக்கு அளித்துள்ளார்.
தற்காலத்தில் உள்ள வீரர்களுக்கு அதிகப்படியான காயங்கள் ஏற்படுவதன் காரணத்தால் ஆலன் பார்டரின் இச்சாதனையை முறியடிக்க வாய்ப்புகள் மிகவும் குறைவாகும். இவருக்கு அடுத்தபடியாக முன்னாள் இங்கிலாந்து டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரர் ஆலஸ்டர் குக் 109 போட்டிகளில் தொடர்ச்சியாக எவ்வித இடைவெளியின்றி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.