#6 ஜீம் லேகர் - ஒரு டெஸ்ட் போட்டியில் 19 விக்கெட்டுகள்
ஜீம் லேகர் டெஸ்ட் கிரிக்கெட்டில் யாராலும் நம்ப இயலாத ஒரு அற்புதமான சாதனையை படைத்துள்ளார். 1956ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் கிரிக்கெட் வீரர் ஜீம் லேகர் தான். இவர் இரண்டாம் இன்னிங்ஸில் 53 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் எடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் 37 ரன்களை அளித்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொத்தமாக இந்தப் போட்டியில் ஜீம் லேகர் 90 ரன்களை அளித்து 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஜீம் லேகர் கீழ் இருக்கும் இந்த சாதனையை முறியடிப்பது என்பது இயலாத ஒன்றாகும். தற்கால பௌலர்கள் எவரேனும் ஒரு டெஸ்ட் போட்டியில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே இந்த சாதனையை முறியடிக்க இயலும்.
#5 கிரேம் ஸ்மித் - கேப்டனாக 109 டெஸ்ட் போட்டிகள்
முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித் 100க்கும் மேலான டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக பங்கேற்று சாதனை படைத்துள்ளார். 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதே பெரும் சாதனையாக இருக்கும் இக்காலத்தில் கிரேம் ஸ்மித் தான் விளையாடிய 117 டெஸ்ட் போட்டிகளில் 109 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்காலத்தில் ஒரு கிரிக்கெட் வீரர் 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதே கேள்விக் குறியாக உள்ள நிலையில் கிரேம் ஸ்மித்-தின் இச்சாதனையை முறியடிப்பது என்பது மிகவும் கடினமான நிகழ்வாகும்.