#4 சச்சின் டெண்டுல்கர் - 200 டெஸ்ட் போட்டிகள்
தற்போதைய தலைமுறையின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இந்திய அணியின் சிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் 20 வருடங்களில் 200 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் வலம் வருகிறார்.
டெஸ்ட் போட்டிகளில் தற்கால தலைமுறையினரிடம் அதிக நாட்டம் காணப்படாததன் காரணமாக சச்சின் டெண்டுல்கரின் 200 டெஸ்ட் போட்டிகள் சாதனையை முறியடிக்க வாய்ப்பில்லை.
#3 முத்தையா முரளிதரன் - 800 டெஸ்ட் விக்கெட்டுகள்
கிரிக்கெட்டில் ஆல்-டைம் சிறந்த பௌலராக முத்தையா முரளிதரன் உள்ளார். இவரது கிரிக்கெட் புள்ளிவிவரங்கள் முத்தையா முரளிதரனின் சிறந்த ஆட்டத்திறனை பிரதிபலிக்கிறது. முன்னாள் இலங்கை பௌலரான இவர் 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த சாதனையை முறியடிப்பதென்பது இயலாத ஒன்றாகும்.
மேலும் தற்கால கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில்தான் முதலில் ஓய்வு பெறுகிறார்கள். அனைவரது கவனமும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலே உள்ளதால் இச்சாதனை நீண்ட காலங்கள் முறியடிக்க இயலாத சாதனையாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
#2 இலங்கை அணியின் அதிகபட்ச ரன் குவிப்பு
1997ல் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 952 ரன்களை குவித்தது. இதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணியின் அதிகபட்ச ரன்களாகும். இந்த போட்டி சமனில் முடிந்தாலும், தற்போது வரை கிரிக்கெட் வரலாற்றில் முறியடிக்க இயலாத சாதனையாக இருந்து வருகிறது.
கடந்த காலங்களில் ஆசிய மைதானங்கள் முழுவதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டு அவர்களே பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர். ஆனால் தற்காலத்தில் பேட்ஸ்மேன் மற்றும் பௌலர்கள் என இருவருக்கும் சமமாக ஆடுகளம் அமைக்கப்பட்டு இருப்பதால் தற்கால கிரிக்கெட் வீரர்கள் இச்சாதனையை எட்ட வாய்ப்பில்லை.
#1 டான் பிராட் மேன் - டெஸ்ட் சராசரி 99.99
டான் பிராட் மேன் ஒரு சிறந்த கிரிக்கெட் பேட்ஸ்மேன். இவரது டெஸ்ட் சராசரி 99.99 ஆகும். இது கிரிக்கெட் வரலாற்றில் பெரும் ஆச்சரியமூட்டும் சாதனைப் புள்ளிவிவரமாகும். தற்கால கிரிக்கெட் வீரர்களுக்கு இது மிகப்பெரிய சாதனைச் சவாலாகும். இவர் உலகின் பல நாடுகளில் தனது அற்புதமான டெஸ்ட் ஆட்டத்திறனை வெளிபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
50 டெஸ்ட் போட்டிகளுக்குப் பின்னர் 99.99 என்ற பேட்டிங் சராசரியை எந்த வீரர்களும் வைத்திருந்ததில்லை.