மறக்க முடியாத போட்டிகள் (பாகம்-1)

ஹர்பாஜன் சிங் - ஒரு இந்திய பவுலரின் முதல் டெஸ்ட் ஹாட்ரிக்
ஹர்பாஜன் சிங் - ஒரு இந்திய பவுலரின் முதல் டெஸ்ட் ஹாட்ரிக்

அது ஒரு மார்ச் மாதம், 2001 ம் ஆண்டு. ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருந்தனர். அப்போதைய ஆஸ்திரேலிய அணி ஜாம்பவான்கள் மட்டுமே இருந்த அணி.

மேத்யூஹெய்டன், ஸ்டீவ்வாக், ரிக்கிபாண்டிங், கில்க்ரிஸ்ட், மெக்ராத், வார்னே, கில்லஸ்பியென எந்தப்பக்கம் திரும்பினாலும், ஒரு லெஜெண்ட் கண்ணுக்குத் தெரிவார்கள். அணியின் பலத்துக்கு ஏற்றாற் போல் இந்தியா வருவதற்கு முன்னர் தொடர்ச்சியாக 15 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தது ஆஸ்திரேலியா. இந்தியா வந்தவுடன் முதல் டெஸ்டிலும் வெற்றி பெற்று இந்தியா அணியின் நம்பிக்கைகளை அடித்துத்து வைத்திருந்தது.

இந்நிலையில் கல்கத்தாவில் ரெண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகிறது. இம்முறை டாஸ் ஜெயித்தால் போதும், முதல் பேட்டிங் எடுத்து எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்று இந்தியா ரசிகர்கள் கனவு கண்டபொழுது, ஆஸ்திரேலியா டாஸ் ஜெயித்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல்நாள் :மார்ச் 11- 2001

தன் மொத்த வாழ்நாளுக்கும் அடையாளமாக இருக்க போகும் டெஸ்டில் விளையாடிக் கொண்டிருப்பதை ஹர்பஜன்சிங் அறிந்திருக்கமாட்டார். முதல் நாள் போட்டி இந்தியா வசம் தான் இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு இந்தியா பவுலர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த நிகழ்வு நடந்தது.

212 / 4 என்ற வலுவான நிலையில் இருந்த ஆஸ்திரிலேயா அணி ஹர்பஜன்சிங்கின் ஹாட்ரிக்கில் நிலைகுலைந்தது. முதல்நாள்முடிவில் 291 / 8 என்றநிலையில்ஆட்டம்முடிந்தது.

இரண்டாம்நாள் : மார்ச் 12 - 2001

கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலியா அணிக்கும் மற்ற அணிகளுக்கும் உள்ள வித்தியாசமே, அவர்கள் அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்கமாட்டார்கள், சரணடைய மாட்டார்கள். இறுதிவரை 100 % உழைப்பை கொடுத்துப் போராடுவதை அணியின் ஒவ்வொரு வீரரும் அர்ப்பணிப்புடன் செய்வர். அப்படியான போராட்டத்தை மீண்டும் ஒருமுறை நிகழ்த்திக் காட்டினர் ஆஸ்திரேலியா அணியினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் 29 ரன்களுடன் களத்தில் இருந்த ஸ்டீவ்வாக் இரண்டு டெயிலேண்டர் பேட்ஸ்மேன்களை துணைக்கு வைத்துக் கொண்டு சதமடித்து அணியை மீட்டார்.

ஒன்பதாவது விக்கெட்டுக்கு 132 ரன்கள் பார்ட்னர்ஷிப். டெயிலண்டர்களை வீழ்த்தமுடியாமல் இன்று வரை இந்தியா அணி திணறும் நிகழ்வுகளுக்கு விதை போடப்பட்ட போட்டி எனவும் எடுத்துக் கொள்ளலாம்.

இறுதியில் 445 ரன்கள்எடுத்துஆட்டமிழந்ததுஆஸ்திரேலியாஅணி.

Steve Waugh
Steve Waugh

யிருந்தது. ஏற்கனவே முதல் போட்டியில் தோற்று நம்பிக்கை இழந்து போயிருந்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவின் கடைசி கட்ட போராட்டத்தால் இன்னும் துவண்டு போனது இந்திய அணியின் பேட்டிங்கில் எதிரொலித்தது.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா அணி 128 / 8 என்ற பரிதாபமான நிலையில் இருந்தது. லக்ஷ்மன் மட்டும் ஆறுதலாக ஆடிக்கொண்டிருந்தார்.

மூன்றாம்நாள் : மார்ச் 13 - 2001

உணவு இடைவேளைக்கு முன்னதாகவே 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய அணி. ஆஸ்திரேலியா பாலோஆன் கொடுப்பார்களா? அல்லது மீண்டும் அவர்களே விளையாடுவார்களா? என்ற சந்தேகத்துக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில், இந்திய அணிக்குப் பாலோஆன் கொடுத்தார் ஸ்டீவ்வாக்.

மீண்டும் களமிறங்கிய இந்தியா இந்தமுறை கொஞ்சம் நிதானமாகவே விளையாடியது. 50 ரன்கள்சேர்த்த நிலையில் முதல் விக்கெட் விழுந்தது. அடுத்த உள்ளே வந்த பேட்ஸ்மேனை பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள், வர்ணனையாளர்கள் அனைவரும் அதிர்ச்சி ஆனார்கள். டிராவிட், சச்சின், கங்குலியென மூன்று தூண்களையும் தாண்டி லக்ஷ்மன் களமிறங்கினார். சென்ற நூற்றாண்டின் மிகசிறந்த களமுடிவுகளில் ஒன்றாகப் பார்க்கப்பட்ட வரலாற்று நிகழ்வு அது. இன்றளவும் அந்த முடிவுக்காகக் கங்குலியின் புகழ்பாடுபவர் ஏராளம்.

மூன்றாவது பேட்ஸ்மேனாகக் களம் புகுந்த லக்ஷ்மன் ஆரம்பத்தில் இருந்தே ருத்ரதாண்டவம் ஆடினார்.

ஆனால் அது சிவனின் ருத்ரதாண்டவம் அல்ல, ஆடல் அரசர் நடராஜரின் நளினமான ருத்ரதாண்டவம். அவரின் ஷாட்களில்ஆக்ரோஷம் இல்லை, கோபம் இல்லை, எந்தப் பந்துவீச்சாளரையும் பார்த்து முறைக்கவில்லை. ஆனால் அவரின் பேட்டில் பட்ட பந்துகள் அனைத்தும் மைதானத்தின் நாலாபுறமும் ஓடியது. எந்த ஒரு பந்துவீச்சாளரையும் விட்டு வைக்கவில்லை. வார்னேவின் லெக்ஸைடு வீசப்பட்ட பந்தை இறங்கி வந்து ஆப்சைடில் கவர் பவுண்டரி அடித்ததை பார்ப்பது எல்லாம் தெய்வீகம்.

ஆனாலும் இன்னொரு புறம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தன. சச்சின் கங்குலி அவுட்டான நிலையில் களம் புகுந்தார் டிராவிட்.

மூன்றாம் நாள் முடிவில் இந்தியா அணி 254 / 4 என்ற நிலையில் ஆட்டத்தை முடித்தது.

லக்ஷ்மன் சதம் 
லக்ஷ்மன் சதம்

நான்காம்நாள் : மார்ச் 14 2001

லக்ஷ்மன் டிராவிட் இணைக்கு பிறகு அனைவரும் டெயிலெண்டர்கள் தான் என்ற இக்கட்டான நிலையில் ஆட்டத்தைத் துவக்கியது இந்தியா. அன்று மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்களுக்கும், தொலைக்காட்சியில் நகம் கடித்தபடி ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கும், இந்த நாள் ஒரு வரலாற்று சிறப்புமிக்க பொன்னாளாக இந்திய கிரிக்கெட் அணிக்கு இருக்க போகிறது என்பது தெரியாது. நான்காம் நாளின் ஆரம்பம் முதலே இருவரும் அடித்து ஆடினார்கள். ஒவ்வொரு செஷனாகப் போட்டி இந்தியா பக்கம் திரும்பிக் கொண்டிருந்தது. லக்ஷ்மன் ஆஸ்திரேலியா அணி பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். அவரை வீழ்த்தவே முடியாது என்ற முடிவுக்கு வந்தனர் பந்துவீச்சாளர்கள். டிராவிட் தனது வழக்கமான இன்னிங்க்ஸை ஆடிக்கொண்டிருந்தார். இருவரும் எதிரணிக்கு எந்த ஒரு வாய்ப்பும் கொடுக்காமல் விளையாடினர்.

விவிஎஸ் லக்ஷ்மன் என்ற பெயர் வெரி வெரி ஸ்பெஷல் லக்ஷ்மன் என்பதாக அன்று மாற்றப்பட்டது. போட்டியைப் பார்க்காமல், அதைப் பற்றிய செய்திகளைக் கேட்காமல், நான்காம் ஆட்ட நேர முடிவில் ஸ்கொர்கார்டை பார்த்தவர்கள் கண்டிப்பாக அதிர்ச்சி அடைந்திருப்பார்கள்.

இந்தியா 589 / 4

லக்ஷ்மன் - 275 *

டிராவிட் - 155 *

270 ரன்கள் பின் தங்கியிருந்த நிலையிலிருந்து 300 ரன்கள் லீட் பெற்ற ஒரு வரலாற்று சிறப்பு மிக்க போட்டி அது.

லக்ஷ்மன் டிராவிட் இணையின் பார்ட்னர்ஷிப் அற்புதம் 
லக்ஷ்மன் டிராவிட் இணையின் பார்ட்னர்ஷிப் அற்புதம்

ஐந்தாம்நாள் : மார்ச் 15 2001

தோல்வியின் பிடியிலிருந்து மீண்ட இந்தியா இந்தப் போட்டியில் வெற்றி அடைவதற்கான வாய்ப்பை வழங்கினார்கள் லக்ஷ்மணனும் டிராவிட்டும். முந்தின நாள் இந்தியா தோல்வியிலிருந்து தப்பிக்குமா? என்று யோசித்து கொண்டிருந்த ரசிகர்கள், ஐந்தாம் நாளில் இந்தியா ஜெயிக்கறதுக்கு வாய்ப்பு இருக்குல்ல, என்று விவாதம் செய்யும் அளவுக்கு மாறிப் போனது.

ஐந்தாம் நாள் காலைப் பேட்டிங்கை துவக்கிய இந்தியா விரைவாக ரன்கள் சேர்க்கும் நோக்கில் விக்கெட்டுகளை இழந்தது. லக்ஷ்மன் 280 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் 657 / 7 என்ற ஸ்கொரில் இந்தியா டிக்ளேர் செய்தது. 384 ரன்கள் எடுத்தால் வெற்றி அல்லது நாள் முழுவதும் பேட்டிங் செய்தால் போட்டி டிரா என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்க்ஸை துவக்கியது. மிக நன்றாகவே விளையாடினர். முதல் 23 ஓவர்களுக்கு எந்த விக்கெட்டையும் இழக்காமல் 73 ரன்களை சேர்த்தனர். இந்தியா ரசிகர்கள் கொஞ்சம் நம்பிக்கை இழக்க துவங்கினர்.

அதன் பின்னர் தான் முதல் இன்னிங்சில் ஜொலித்த ஹர்பஜன்சிங் ஒரு புறம் விக்கெட் எடுக்க ஆரம்பித்தார். ஆஸ்திரேலியா 166 / 5 என்ற நிலையில் இருந்தாலும் மேத்யூ ஹெய்டன் ஒருபுறம் நங்கூரம் பாய்ச்சியதை போல் ஆடிக்கொண்டிருந்தார். எப்படியாவது விக்கெட் வீழ்த்தினால் மட்டுமே வெற்றிக்கு அருகில் செல்ல முடியும் என்ற நிலையில். கங்குலி பந்தைச் சச்சினிடம் தந்தார். மொத்த ஸ்டேடியமும் அதிர்ந்தது. முதல் ஓவரில் கில்க்ரிஸ்டையும், இரண்டாவது ஓவரில் ஹெய்டனையும், மூன்றாவது ஓவரில் வார்னேவையும் காலி செய்தார் மாஸ்டர் பிளாஸ்டர்.

சச்சினின் மூன்று விக்கெட்டுகள் 
சச்சினின் மூன்று விக்கெட்டுகள்

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியாவின் டெஸ்ட் போட்டி வெற்றிகளில் மிக முக்கியமானதொரு வெற்றியைப் பதிவு செய்தது.

கங்குலியின் கேப்டன்ஷிப்பில் மணிமகுடமாய் இந்த வெற்றி எப்போதும் பேசப்படும்.

வெற்றி வாகை சூடிய இந்திய அணியினர் 
வெற்றி வாகை சூடிய இந்திய அணியினர்

Quick Links

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications