இந்திய ரசிகர்களால் மறக்க முடியாத சிக்ஸர்கள்...

தோனியின் சிக்ஸர்
தோனியின் சிக்ஸர்

இந்திய அணி எப்போதும் சிறந்த பேட்ஸ்மேன்களை கொண்டதாகவே இருந்துள்ளது.அதில் அதிரடி மன்னர்களும் அடங்குவர்.சச்சின் ஷேவாக் யுவி தோனியெனப் பலர் சிக்ஸர் மன்னர்களாகத் திகழ்கின்றனர்.இதில் சச்சினை குறிப்பிடுவது சில ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.ஆனால் அவர்கள் 90 களிலும்,2000களின் முற்பகுதியில் சச்சின் ஆட்டத்தைப் பார்தவர்களுக்கு ஆச்சரியமாக இருக்காது."எனக்குத் தூக்கத்தில் கூடச் சச்சின் எனது பந்துவீச்சில் சிக்ஸர் விளாசுவது போல் தான் கனவு வரும்" சார்ஜாவில் சச்சின் ஆஸ்திரேலியாவை பந்தாடியாகப் பிறகு வார்னே சொன்ன வார்த்தைகள் இவை.சர்வதேச போட்டிகளில் முதன்முதலில் ஒரு வருடத்தில் 50 சிக்ஸ்ர்கள் அடித்தவர் சச்சின் தான.அவர் 1998ல் 51 சிக்ஸ்ர்களை விளாசினார்.

இவ்வாறு இந்திய வீரர்கள் அடித்த மறக்க முடியாத தொகுப்பே இது....

1.சச்சினின் அப்பர் கட்

சச்சினின் ஸ்பெஷல் அப்பர் கட்
சச்சினின் ஸ்பெஷல் அப்பர் கட்

இந்தியா-பாக்கிஸ்தான் என்றாலே ரசிகர்களின் தூக்கம் பறந்து விடும்.ஒவ்வொரு ரசிகனும் போட்டியைக் காண எல்லாவற்றையும் மறந்து போய் காத்திருப்பான்.அதுவும் உலக்கோப்பை என்றால் சொல்லவே தேவையில்லை.சச்சின் பாக் போட்டிகள் என்றாலே சிறப்பாக ஆடுவார் அதிலும் உலக கோப்பை என்றால் அவர்தான் ஆதிக்கம் செலுத்துவார்.சச்சின் 5 முறை பாக்குடன் ஆடிய உலக கோப்பை போட்டிகளில் 3 முறை ஆட்ட நாயகன் விருது வென்றிருக்கிறார் என்றால் அவரது ஆதிக்கம் புரியும்.2003ல் நடந்த அந்தப் போட்டியில் பாக்கிஸ்தான் 273 ரன்கள் குவித்தது.அக்ரம் அத்தர் வக்கார் போன்ற பவுலர்களை எதிர்த்து சேஸ்(chase) என்பது கடினம்.ஆனால் சச்சினும் சேவாக்கும் 25 ஒவர்களிலேயே சேஸ் செய்ய வேண்டும் என முடிவு செய்தது போல் பாக் பவுலிங்கை அடித்து நொறுக்கினர்.இன்று நாம் போட்டியில் ஒரு பந்து 150கீமி ல் போடப்பட்டலே ஆச்சரியாமாகப் பார்க்கிறோம் ஆனால் அக்தர் தொடர்ந்து 150+கிமீ வேகத்தில் பந்து வீசுவார்.அக்ரம் முதல் ஒவர் வீசியபிறகு இராண்டாம் ஒவரை வீசினார் அக்தர்.அக்தரை ஆடுவதை பொறுத்தே அந்த ஆட்டத்தின் முடிவு அமையும் என்ற நிலையில் அடுத்தடுத்த wide க்கு பிறகு ஒரு short ball வீச சச்சின் வேகமாகப் பின்காலுக்கு மாறி அதை கட் செய்தார் பந்து 3rd man தலைக்கு மேல் ராக்கெட் போல் பறந்தது.அதுவரை 273 என்ற பெரிய இலக்கை நிர்ணயித்த உற்சாகத்தில் ஆர்ப்பரித்த பாக் ரசிகர் கூட்டம் ஒய்ந்து போனது.என்னவாகுமோ என்ற பயத்தில் அதுவரை இருந்த இந்திய ரசிகர்கள் ஆரவாரமிட தொடங்கினர்.அப்படி பாக் பவுலர்களின் நம்பிக்கை சீர்குலைத்து ஆட்டத்தின் போக்கை மாற்றிய சிக்ஸர் அது.அதே ஒவரில் 150+ வேகத்தில் வந்த பந்துகளில் சச்சின் அற்புதமான 2 பவுண்டரிகள் அடித்தார் என்பதைவிட தொட்டுவிட்டாரெனக் கூறலாம்.பவுலரின் வேகத்தைப் பயன்படுத்தி ஒரு சிலிக்(sleek) டச் பந்து பவுண்டரியை நோக்கிச் சிறிப்பாய்ந்து.அதன்பிறகு சச்சின் 98ல் ஆட்டமிழந்தாலும் போட்டியைக் கிட்டதட்ட முடித்துவிட்டார்.பின் டிராவிட் போன்றோரின் ஆட்டத்தால் இந்தியா எளிதாக வென்றது.சச்சினின் அந்த அப்பர்கட்டை யாரும் மறந்துவிட முடியாது.இப்போது பார்த்தாலும் எப்படியொரு ஷாட்டை ஆடினாரென எண்ண தோன்றும் அப்படிப்பட்ட ஷாட் அது.இந்தியா பாக் என்றாலே சச்சின் vs அகதர் தான் முதலில் நியாபகம் வரும்.சச்சின் vs அகதர் என்றாலே அந்த அப்பர்கட் தான் நியாகம் வரும்.எந்த ஒரு ரசிகனாலும் மறக்க முடியாத சிக்‌ஸர் அது.

2.யுவராஜ் vs பிலிண்டாப் (சிக்கிய பிராட்)

England v India - Twenty20 Super Eights
England v India - Twenty20 Super Eights

யுவராஜ் இந்திய அணியின் சிக்ஸர் மன்னன்.இரண்டு உலக கோப்பை வெற்றிகளுக்குக் காரணமானவர்.2007ல் 20ஒவர் உலக கோப்பையில் எதிரணி பவுலர்களை விளாசித் தள்ளிக் கோப்பையை வெல்ல காரணயாயிருந்தவர். அந்தத் தொடரில் அவர் பிராட்டை அடித்து நொறுக்கியதை எந்த இந்திய ரசிகனும் மறக்கமாட்டான்.இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடியது இந்தியா.அப்போது 18வது ஒவரில் முடியும் தருவாயில் யுவி இதற்கு முன் அடித்த பவுண்டரிகளை மோசமான ஷாட் என் பிளிண்டாப் விமர்சிக்கக் கடுப்பான யுவி சூடாகப் பதில் சொல்ல நடுவில் நடுவரும் தோனியும் புகுந்து இருவரையும் தனியே இழுத்து வந்தனர்.அடுத்த ஒவரை போட வந்த பிராட் கோபத்தின் உச்சியில் இருந்த யுவியிடம் சிக்கினார்.ஒடி வந்து பந்தை வீசுவதும், வீசிய வேகத்தில் அது பவுண்டரியைத் தாண்டிப் பறப்பதும் மட்டுமே அந்த ஒவரில் நடந்தது.over the wicket, around the wicket எனப் பிராட் மாறி மாறிப் பந்து வீசினாலும் வீசிய வேகத்தில் பிராட்டை பவுண்டரியை நோக்கி வேடிக்கை பார்க்க வைத்தார் யுவி.இப்போது இங்கிலாந்தின் முன்னனி பவுலர் ஆகிவிட்ட பிறகும் கூட அந்தப் பேட்டியில் யுவியின் பேட்டிங்கை நினைத்தால் அச்சமாக உள்ளது என்றார் பிராட் அப்படியொரு அடி அது.அந்தப் போட்டியைப் பார்த்தவர்கள் யுவியின் சிக்ஸர்களை மட்டுமல்ல அந்தச் சிக்ஸர்கள் பறந்தபோது அதிர்ந்து போய் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நின்ற பிலிண்டாப்பையும் யாரும் மறந்துவிட மாட்டார்கள்.

3.தோனியின் பினிஷ்.

Dhoni finshes of his style
Dhoni finshes of his style

1983ல் உலக கோப்பையை வென்ற பிறகு இந்திய அணிக்கு உலக கோப்பை ஒரு கனவாகவே இருந்தது.இந்நிலையில் 2011 உலக கோப்பை இந்தியாவில் நடைப்பெற்றது. உலக கோப்பையை முதல் பால் பவுண்டரிகளுக்கு பெயர் போன அதிரடி நாயகர் சேவாக் பவுண்டரி அடித்து தொடங்கி வைத்தார்.லீக் சுற்றில் தென் ஆப்பிரிக்காவுன் தோல்வி,இங்கிலாந்துடன் ட்ராவுடன் மற்ற போட்டிகளில் வென்று, காலிறுதியில் ஆஸ்திரேலியாவையும், அரையிறுதியில் பாக்கிஸ்தானையும் வென்று இறுதியில் இலங்கையை எதிர்த்து ஆடியது.இலங்கை 275 என்ற இலக்கை நிரணயிக்க தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் ஒவரில் சேவாக்கை இழந்த்து.18 ரன்னில் சச்சின் ஆட்டமிழக்க மைதானத்தில் அப்படியொரு அமைதி.சச்சன் ஆட்டமிழந்து நான் உள்ளே சென்றபோது சுடுகாட்டில் நுழைவது போல் இருந்தது என்கிறார் கோலி.அப்படியான அமைதி.

ஆனால் ஏற்கனவே 2007 இருபது ஒவர் உலக கோப்பை இறுதியில் நிலைத்து நின்று ஆடி வெற்றிக்குக் காரணமான கம்பீர் இம்முறையும் அபாரமாக ஆடினார்.கோலியும் அவரும் இணைந்து 83 ரன்கள் குவித்து சரிவிலிருத்து அணியை மீட்டனர்.பின் கோலி ஆட்டமிழக்க அன்று யுவிக்கு பதிலாகத் தோனி உள்ளே வந்தார்.இந்திய கேப்டன், உலகின் சிறந்த பினிஷர் தனது பணியை ஆரம்பித்தார்.கம்பீரடு சேர்ந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.

மிகச்சிறப்பாக ஆடிய கம்பீர் 97க்கு ஆட்டமிழந்தாலும் யுவியோடு கைக்கோர்த்து பதற்றம் இல்லாமல் ஆடினார்.மலிங்காவின் ஒவரில் ரிஸ்க் இல்லாமல் பவுண்டரி அடித்து ரசிகர்களின் பதற்றத்தை தணித்து வெற்றியை உறுதி செய்தார்.பிறகு 48வது ஒவரில் 11 பந்துகளில் 6ரன்களே தேவைப்பட்டபோது குலசேகராவின் அந்த ஒவரில் சிக்ஸர் அடிக்க இந்திய அணிக்குக் கோப்பையை வென்றது.தொடக்க ஆட்டக்காரர் சேவாக் பவுண்டரி அடித்து தொடங்கியதை பினிஷர் தோனி சிக்ஸர் அடித்து முடித்து வைத்தார்.ஒரு பந்தில் 6 ரன்கள் வேண்டுமென்றபோது அடிக்கப்பட்ட சிக்ஸர் அல்ல அது.இருந்தாலும் இந்திய ரசிகன் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் பதிந்து விட்ட சிக்ஸர் அது.ஏனெனில் இந்திய அணியின் 28 ஆண்டு கால உலக கோப்பை கனவை நிறைவேற்றிய சிக்ஸர் அது.கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் சச்சினின் உலக கோப்பை தாகத்தை தணித்த சிக்ஸர் அது.தோனியின் கேரியரை நட்சத்திர கேரியராக மாற்றிய சிக்ஸர் அது.எல்லாவற்றுக்கும் மேலாக நாங்கள் உலக சாம்பியன் என்று மார்தட்ட வைத்த சிக்ஸர் அது.

4.தினேஷ் கார்திக்கின் சூப்பர் பினிஷ்.

தினேஷ் கார்த்திகின் த்ரில் சிக்ஸர்
தினேஷ் கார்த்திகின் த்ரில் சிக்ஸர்

இந்திய விக்கெட் கீப்பர்கள் கடைசி நேரத்தில் ஆட்டத்தின் போக்கை மாற்றி பங்களாதேஷை வீழ்த்தி அவர்களின் ரசிகர்களை அழ வைப்பது சமீபத்தில் இரண்டு முறை நடந்தது.ஒன்று 2016 t20 உலக கோப்பையில் தோனி செய்த கடைசி பந்து ரன் அவுட்.இன்னொன்னறு நிதாஷ் ட்ராபியில் தினேஷ் கார்த்திக்கின் சூப்பர் பினிஷ்.நிதாஷ் ட்ராபி இறுதிப்போட்டியில் முதலில் ஆடிய பங்களாதேஷ் 168 எடுத்தது.பின் ஆடிய இந்திய அணி விக்கெட்களை சீக்கிரம் இழந்தது. நன்றாக ஆடிய ரோகித் அரைசதம் எடுத்து ஆட்டமிழக்க அணி தடுமாறியது.அப்போது மணிஷ் பாண்டேவும் விஜய் சங்கரும் சற்று நேரம் நின்று அணியை வெற்றி பெற வைக்க முயன்றனர் ஆனால் 18வது ஒவரை வீசிய முஸ்தாபிசூர் ரகுமான் விஜய் சங்கரை ரன் அடிக்க விடாமல் அற்புதமாக வீச இந்திய ரசிக்கள் அனைவரும் இந்தியா தோற்றுவிட்டது என்று எண்ண தொடங்கினர்.அந்த ஓவரின் கடைசி பந்தில் பாண்டே ஆட்டமிழக்க தினேஷ் கார்த்திக் வந்தார்.கடைசி 2 ஒவரில் 32 ரனகள் தேவைப்பட்டபோது தன் சந்தித்த முதல் பந்தையே சிக்ஸருக்கு தூக்கினார் அடுத்தடுத்த பந்துகளில் 4,6,0,2,4 என அந்த ஒவரில் மட்டும் 22 ரனகள் குவித்தார்.20 ஒவரிலும் திணறிய சங்கர் ஒவரின் 4 வது பந்தில் பவுண்டரி அடித்து அடுத்த பந்தில் ஆட்டமிழக்க இறுதி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது.அனைவரும் பரபரப்பின் உச்சியில் 4 ரன் அடித்தால் ட்ரா 6 அடித்தால் வெற்றி என்ற நிலையில் சௌமியா சர்க்கார் வொய்டு யார்க்கார் முயற்சி செய்ய அதைக் கார்த்திக் flat சிக்ஸாக மாற்றி இந்தியாவை கோப்பையை வெல்ல வைத்தார்.நாடே இந்த த்ரில் வெற்றியைக் கொண்டாடி தீர்த்தது.தினேஷ் கார்த்தியின் கேரியரில் மட்டுமில்லாமல் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஏன் உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு சிறந்த த்ரில்லராக இப்போட்டி பதிவானது.கண்டிப்பாக இந்திய ரசிகர்களால் மறக்க முடியாத சிக்ஸர்களில் இதுவும் ஒன்று

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now