2.யுவராஜ் vs பிலிண்டாப் (சிக்கிய பிராட்)
யுவராஜ் இந்திய அணியின் சிக்ஸர் மன்னன்.இரண்டு உலக கோப்பை வெற்றிகளுக்குக் காரணமானவர்.2007ல் 20ஒவர் உலக கோப்பையில் எதிரணி பவுலர்களை விளாசித் தள்ளிக் கோப்பையை வெல்ல காரணயாயிருந்தவர். அந்தத் தொடரில் அவர் பிராட்டை அடித்து நொறுக்கியதை எந்த இந்திய ரசிகனும் மறக்கமாட்டான்.இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடியது இந்தியா.அப்போது 18வது ஒவரில் முடியும் தருவாயில் யுவி இதற்கு முன் அடித்த பவுண்டரிகளை மோசமான ஷாட் என் பிளிண்டாப் விமர்சிக்கக் கடுப்பான யுவி சூடாகப் பதில் சொல்ல நடுவில் நடுவரும் தோனியும் புகுந்து இருவரையும் தனியே இழுத்து வந்தனர்.அடுத்த ஒவரை போட வந்த பிராட் கோபத்தின் உச்சியில் இருந்த யுவியிடம் சிக்கினார்.ஒடி வந்து பந்தை வீசுவதும், வீசிய வேகத்தில் அது பவுண்டரியைத் தாண்டிப் பறப்பதும் மட்டுமே அந்த ஒவரில் நடந்தது.over the wicket, around the wicket எனப் பிராட் மாறி மாறிப் பந்து வீசினாலும் வீசிய வேகத்தில் பிராட்டை பவுண்டரியை நோக்கி வேடிக்கை பார்க்க வைத்தார் யுவி.இப்போது இங்கிலாந்தின் முன்னனி பவுலர் ஆகிவிட்ட பிறகும் கூட அந்தப் பேட்டியில் யுவியின் பேட்டிங்கை நினைத்தால் அச்சமாக உள்ளது என்றார் பிராட் அப்படியொரு அடி அது.அந்தப் போட்டியைப் பார்த்தவர்கள் யுவியின் சிக்ஸர்களை மட்டுமல்ல அந்தச் சிக்ஸர்கள் பறந்தபோது அதிர்ந்து போய் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நின்ற பிலிண்டாப்பையும் யாரும் மறந்துவிட மாட்டார்கள்.
3.தோனியின் பினிஷ்.
1983ல் உலக கோப்பையை வென்ற பிறகு இந்திய அணிக்கு உலக கோப்பை ஒரு கனவாகவே இருந்தது.இந்நிலையில் 2011 உலக கோப்பை இந்தியாவில் நடைப்பெற்றது. உலக கோப்பையை முதல் பால் பவுண்டரிகளுக்கு பெயர் போன அதிரடி நாயகர் சேவாக் பவுண்டரி அடித்து தொடங்கி வைத்தார்.லீக் சுற்றில் தென் ஆப்பிரிக்காவுன் தோல்வி,இங்கிலாந்துடன் ட்ராவுடன் மற்ற போட்டிகளில் வென்று, காலிறுதியில் ஆஸ்திரேலியாவையும், அரையிறுதியில் பாக்கிஸ்தானையும் வென்று இறுதியில் இலங்கையை எதிர்த்து ஆடியது.இலங்கை 275 என்ற இலக்கை நிரணயிக்க தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் ஒவரில் சேவாக்கை இழந்த்து.18 ரன்னில் சச்சின் ஆட்டமிழக்க மைதானத்தில் அப்படியொரு அமைதி.சச்சன் ஆட்டமிழந்து நான் உள்ளே சென்றபோது சுடுகாட்டில் நுழைவது போல் இருந்தது என்கிறார் கோலி.அப்படியான அமைதி.
ஆனால் ஏற்கனவே 2007 இருபது ஒவர் உலக கோப்பை இறுதியில் நிலைத்து நின்று ஆடி வெற்றிக்குக் காரணமான கம்பீர் இம்முறையும் அபாரமாக ஆடினார்.கோலியும் அவரும் இணைந்து 83 ரன்கள் குவித்து சரிவிலிருத்து அணியை மீட்டனர்.பின் கோலி ஆட்டமிழக்க அன்று யுவிக்கு பதிலாகத் தோனி உள்ளே வந்தார்.இந்திய கேப்டன், உலகின் சிறந்த பினிஷர் தனது பணியை ஆரம்பித்தார்.கம்பீரடு சேர்ந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.
மிகச்சிறப்பாக ஆடிய கம்பீர் 97க்கு ஆட்டமிழந்தாலும் யுவியோடு கைக்கோர்த்து பதற்றம் இல்லாமல் ஆடினார்.மலிங்காவின் ஒவரில் ரிஸ்க் இல்லாமல் பவுண்டரி அடித்து ரசிகர்களின் பதற்றத்தை தணித்து வெற்றியை உறுதி செய்தார்.பிறகு 48வது ஒவரில் 11 பந்துகளில் 6ரன்களே தேவைப்பட்டபோது குலசேகராவின் அந்த ஒவரில் சிக்ஸர் அடிக்க இந்திய அணிக்குக் கோப்பையை வென்றது.தொடக்க ஆட்டக்காரர் சேவாக் பவுண்டரி அடித்து தொடங்கியதை பினிஷர் தோனி சிக்ஸர் அடித்து முடித்து வைத்தார்.ஒரு பந்தில் 6 ரன்கள் வேண்டுமென்றபோது அடிக்கப்பட்ட சிக்ஸர் அல்ல அது.இருந்தாலும் இந்திய ரசிகன் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் பதிந்து விட்ட சிக்ஸர் அது.ஏனெனில் இந்திய அணியின் 28 ஆண்டு கால உலக கோப்பை கனவை நிறைவேற்றிய சிக்ஸர் அது.கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் சச்சினின் உலக கோப்பை தாகத்தை தணித்த சிக்ஸர் அது.தோனியின் கேரியரை நட்சத்திர கேரியராக மாற்றிய சிக்ஸர் அது.எல்லாவற்றுக்கும் மேலாக நாங்கள் உலக சாம்பியன் என்று மார்தட்ட வைத்த சிக்ஸர் அது.