சென்னை டூ இங்கிலாந்து சாதனை நாயகன் தினேஷ் கார்த்திக் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை…

Dinesh karthik
Dinesh karthik

தமிழக கிரிக்கெட் வீரர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது ஒரு சில பெயர்கள் தான் அதில் முக்கிய இடம் வகிப்பவர் தினேஷ் கார்த்திக். இன்று அவர் தனது 33 வது பிறந்தநாள் காண்கிறார். இந்த வேளையில் அவரைப் பற்றி நாம் அறியாத சில தகவல்களை இங்கு காணலாம்.

தினேஷ் கார்த்திக் பிரபலமானது கடந்தாண்டு வங்கதேச அணிக்கெதிரான கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்ததன் மூலம் தான் பலரும் கூறுகின்றனர். ஆனால் அவர் 2007 ஆம் ஆண்டு முதலே இந்திய அணிக்காக பல்வேறு சூழ்நிலைகளில் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளார். அதிலும் இந்தியாவின் முதல் டி20 போட்டியில் ஆட்ட நாயகன், ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் 500 ரன்களை கடந்த முதல் விக்கெட் கீப்பர் மற்றும் ஒற்றையாளாக தமிழகத்திற்கு 2017 ஆம் ஆண்டு விஜய் ஹசாரே கோப்பையை கைப்பற்றி தந்தது என இவரின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

விக்கெட் கீப்பராக இவர் இந்திய அணியில் அறிமுகமான இவரால் நீண்ட நாள் நீடிக்க முடியவில்லை. இருந்தாலும் பேட்ஸ்மேனாகவே உருவெடுத்து பல போட்டிகளில் தற்போது வரை இந்திய அணிக்காக விளையாடி வருகிறார் இவர். 2010 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இவரது பேட்டிங் அனைவரையும் வியக்க வைத்தது.

தினேஷ் கார்த்திக் DK வாக மாறிய தருணம்

DK 19
DK 19

தினேஷ் கார்த்திக்கை தற்போது அனைவரும் DK என்றே அழைத்து வருகின்றனர். ஆனால் ஆரம்ப காலகட்டங்களில் அவரை கிருஷ்ண குமார் தினேஷ் கார்த்திக் என்றே அழைத்து வந்தனர். இதில் கிருஷ்ண குமார் என்பது அவரின் தந்தை பெயரைக் குறிக்கும். அவருக்கு DK என்ற பெயர் முதல் முறையாக உலகிற்கு அறிமுகபடுத்திய தினம் ஏப்ரல் 4, 2013. அன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் தனது ஜெர்ஸியில் DK ஈன்ற பெயருடன் களமிறங்கினார். இதன் பின்னர் தான் இவருக்கு DK என்ற பெயர் மிதவும் பிரபலமானது.

ஜெர்ஸி நம்பருக்கு பின் ஒளிந்திருக்கும் ரகசியம்

DK 21
DK 21

தினேஷ் கார்த்திகை பொருத்த வரையில் ஆரம்ப காலகட்டத்தில் 99 என்ற ஜெர்ஸி எண்ணையே உபயோகித்தார். அதற்கு காரணம் அவருக்கு 19 என்ற ஜெர்ஸி நம்பர் கிடைக்கவில்லை. அப்போது ராகுல் டிராவிட் அந்த எண்ணை உபயோகித்து கொண்டிருந்தார். அதன் பின்னர் 19 என்ற எண்ணையே பல ஆண்டுகளாக ஜெர்ஸியின் பின்னால் சுமந்திருந்தார் தினேஷ் கார்த்திக். ஆனால் தற்போது அவர் உபயேகிக்கும் எண் 21. அதற்கு காரணம் அவரது மனைவி தீபிகா பல்லிக்கல் மீது அவர் வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு தான். தீபிகா பல்லிகலின் பிறந்த தேதி 21 என்பதனால் தனது ஜெர்ஸி எண்ணை 21 ஆக மாற்றி விட்டார் தினேஷ் கார்த்திக்.

கடைசியாக இவரை கொல்கத்தா அணி ஐபிஎல் தொடரில் ஏலத்தில் எடுத்து கேப்டனாக நியமித்துள்ளது. அதற்கேற்ப தான் கேப்டனாக பதவியேற்ற முதல் ஆண்டிலேயே அணியை ப்ளே ஆப்ஸ் வரை கொண்டு சென்றார்.

இப்பேற்பட்ட சாதனை நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் பெருமை கொள்கிறது ஸ்போர்ட்ஸ்கீடா.

App download animated image Get the free App now