கிரிக்கெட் வரலாற்றின் “அட இப்படியா” என ரசிகர்கள் வியக்கும் சில உண்மைகளை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
ஒரு ஓவரில் அதிகப்பட்சமாக அடிக்கபட்ட ரன்கள் 36 அல்ல அது 77
ஆம் இந்த சம்பவம் நடந்தது 1990 பிப்ரவரியில்ல வெல்லிங்டன் செல் கோப்பைக்கான கடைசி நாள் ஆட்டம் கேண்டர்பரி மற்றும் கிர்ஸ்சர்ச் அணிகளுக்கு நடைபெற்றது. அப்போது கேண்டர்பரிக்கு எதிராக பந்து வீசிய பெர்ட் வாண்ஸ் ஒரே ஓவரில் 77 ரன்களை வாரி வழங்கினார்.
இந்தியாவுக்கு எதிராக அடிக்கபட்ட தனி நபர் அதிகபட்ச ஸ்கோர்கள்
21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு எதிராக அடிக்கபட்ட தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் அனைத்திற்கும் இசாந் சர்மாவின் பங்களிப்பு இருக்கிறது.
அலைஸ்டர் குக் -294 ரன்கள்
மைக்கேல் க்ளார்க்- 329 ரன்கள்
ப்ரெண்டன் மெக்குலம்-302 ரன்கள்
இது மூன்றும் இந்தியாவுக்கு எதிராக அடிக்கபட்ட தனி நபர் அதிகபட்ச ஸ்கோர்கள், இம்மூன்று பேட்ஸ்மேன்களின் கேட்ச்களையும் ஆட்ட நேர ஆரம்பத்தில் இசாந்த் சர்மா தவறவிட்டிருந்தார்.
தொடர்ச்சியாக 21 மெய்டன் ஓவர்
1964 ஜனவரி 12 ல் சென்னையில் நடபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான பாபு நாத்கரணி இங்கிலாந்ந்துக்கு எதிராக தொடர்ச்சியாக 21 மெய்டன் ஓவர்களை வீசி சாதனை படத்துள்ளார்.அவரின் பந்து வீச்சு விகிதம் ஒரு ஓவருக்கு வெறும் 0.15 ரன் இன்று வரை யாராலும் முறியடிக்கபடாத சாதனைகளில் ஒன்று.
ரன்களை விட விக்கெட்டுகள் அதிகம்.
கிரிஸ் மார்டின் மற்றும் பி எஸ் சந்திரசேகரன் அவர்களின் டெஸ்ட் வரலாற்றின் அடித்த ரன்களை விட எடுத்த விக்கெட்டுகளே அதிகம்
71 மேட்சுகள் ஆடிய மார்டின் மொத்தம் 123 ரன்கள் அடித்துள்ளார், ஆனால் அவர் எடுத்துள்ள விக்கெட்டுகளின் எண்ணிக்கை 233
அதே போல சந்திரசேகரன் மொத்தம் 167 ரன்கள் அடித்துள்ளார் அவர் எடுத்துள்ள விக்கெட்டுகளின் எண்ணிக்கை 242.
174 பந்த்களில் 36 ரன்கள்
1975 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இந்தியா மற்றும் இங்கிலாந்ந்துக்கான ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஓவர் முடிவில் 335 ரன்கள்
குவித்தது. பின்னர் களம் இறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர் 175 பந்துகள் ஆடி வெறும் 36 ரன்களே அடித்திருந்தார், 60 ஓவர் முடிவில் இந்தியா 132 ரன்களே அடித்து தோல்வியடைந்தனர்.
உலக கோப்பை போட்டிகளில் அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில் சதம் அடித்த ஒரே வீரர் இலங்கையை சேர்ந்த ஜெயவர்தனா.
இவர் 2007 ல் நடந்த உலககோப்பை அரை இறுதி போட்டி நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் இலங்கை அணி வீரர் ஜெயவர்தனா 109 பந்துகளில் 115 ரன்கள் அடித்தார்.
அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு நடந்த இந்தியா மற்றும் இலங்கை பங்குபெற்ற இறுதி போட்டியில் 88 பந்துகளில் 103 ரன்கள் அடித்தார் இதன் மூலம் உலககோப்பை அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை தன் வசம் கொண்டுள்ளார்.
சர் டான் ப்ராட்மேன் தன் கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தம் 6 சிக்ஸ்களே அடித்துள்ளார்.