கிரிக்கெட் என்பது அனைவராலும் ரசிக்கக்கூடிய விளையாட்டாகத் தற்போது பார்க்கப்படுகிறது. முக்கியமாக உலகக்கோப்பை கிரிக்கெட் என்றால் கிரிக்கெட் பார்க்காதவர்களை கூடப் பார்க்கத் தூண்டும் ஒரு விருவிருப்பான போட்டியாக இருக்கும். ஏனெனில் உலகக் கோப்பை அவ்வளவு சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். லீக் போட்டிகளில் ஏற்படும் ஒரு சிறு தோல்வியைக் கூட அந்நாட்டு ரசிகர்களால் பொறுத்துக்கொள்ள முடியாமல் தங்களது உணர்ச்சியை மைதானத்திலேயே வெளிக்காட்டி கொள்வார்கள் ரசிகர்கள்.
உலகக்கோப்பை போட்டிகளில் சில முறியடிக்கப்பட முடியாத, நம்ம முடியாத பல சாதனைகளைக் கிரிக்கெட் வீரர்கள் செய்து அசத்தியுள்னர்.உதாரணத்திற்கு பாப் பீமோன்ஸ் லீப் வருடத்தில் சதத்தை விளாசியுள்ளார்.இது ஒரு வேடிக்கையான சாதனையாகும்.யாருக்கும் தெரியாத நிறைய சாதனைகள் உள்ளன. ஆனால் நாம் புகழ்பெற்ற வீரர்களின் சாதனைகளை மட்டுமே கொண்டாடுகிறோம்.யாரலும் முறியடிக்கப்படாத உலகக்கோப்பை சாதனைகளும் சில உள்ளன. உலகக்கோப்பையில் மெக்ராத்தின் சிறந்த பந்துவீச்சு 7/15, ஜாகிர் கான் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் 27, ஆன்டி இராபர்ட்ஸ் எகனாமி 3.24 குறைந்தபட்சம் 1000 பந்துகளில். இது போன்ற பல்வேறு சாதனைகள் உலகக்கோப்பையில் உள்ளன.
உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை முறியடிக்கப்படாத 5 சாதனைகளை இங்கு காணலாம்.
#5. அதிக50+ ரன்கள் - சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர் பெயரில் நிறைய சாதனைகள் உள்ளன. அதனைக் கண்டறிவது மிகவும் கடினம். நிதனமான ஆட்டம், ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் இந்த இரு திறன்களும் அவரைக் கிரிக்கெட்டில் மேலும் வலு சேர்க்கிறது.
இவர் 6 உலகக்கோப்பையில் 44 போட்டிகளில் விளையாடி 21 50+ ரன்களை விளாசியுள்ளார். 2007 உலகக்கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேறாமல் இருந்திருந்தால் இது இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.
அதுமட்டுமல்லாமல் சச்சின் டெண்டுல்கர் ஒரு உலகக் கோப்பையில் தனி ஒருவராக 673 ரன்களையும் இதுவரை ஆடிய 44 உலகக்கோப்பை போட்டிகளிலும் சேர்த்து 15 அரை சதம் 6 சதங்களை இந்தியா சார்பில் விளாசியவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ரிக்கி பாண்டிங் சச்சினை விட ஒரு போட்டிகள் அதிகமாக விளையாடி 1150+ ரன்களை விளாசியுள்ளார்.
இதேபோல் இலங்கை வீரர்களான குமார் சங்கக்காரா, மகேல்லா ஜெயவர்த்தனே தனித்தனியாக 850+ ரன்களை குவித்துள்ளனர். ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் மைக்கேல் கிளார்க் 650+ ரன்களை விளாசியுள்ளார். 2007 உலகக் கோப்பையில் மேத்யூவ் ஹைய்டன் 659 ரன்களை குவித்தார்.ஆனால் இந்தச் சாதனையை அவரால் முறியடிக்க முடியவில்லை.
#4. உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் - க்ளன் மெக்ராத்
வாசிம் அக்ரம், முத்தையா முரளிதரன் மட்டுமே 5 கடைசி உலகக்கோப்பையில் சிறப்பான பந்துவீச்சாளர்கள் என்று அனைவராலும் அறியப்பட்ட உண்மையாகும். 3வது பந்தவீச்சாளராக டேனியல் வெட்டோரியை சேர்பார்கள். ஆனால் 99 போட்டிகளில் மாற்று ஆட்டக்காரராக அணியிலிருந்து பின் கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி அருமையான சாதனையை வைத்துள்ள க்ளன் மெக்ராத்தைப் பற்றி அறியாதோர் நிறைய பேர் உள்ளனர். இவர் நான்கு உலகக் கோப்பையில் பங்கு பெற்று குறைந்தது 18 விக்கெட்டுக்களாவது ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டிகளிலும் எடுத்து விடுவார். இந்த அரிய சாதனை இதுவரை முறியடிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது.
இவர் 4 உலகக்கோப்பை போட்டிகளில் மொத்தம் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சராசரி 20ம் எகனாமி ரேட் நான்கிலும் வைத்துள்ள ஒரே உலகக் கோப்பை ஹிரோ ஆவார். முத்தையா முரளிதரன் அதே 4 உலகக்கோப்பையில் பங்கேற்று 68 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
மலிங்கா 33 விக்கெட்டுகளை உலகக் கோப்பையில் வீழ்தத்தியுள்ளார். அவருக்கு மேலும் உலகக்கோப்பையில் வாய்ப்பு வழங்கப்பட்டால் இச்சாதனையை சமன் செய்ய வாய்ப்புள்ளது. இல்லாவிடில் இச்சாதனை மெக்ராத் சாதனையாகவே இறுதி வரை இருக்கும்.
#3. கேப்டனாக மூன்று உலகக்கோப்பைகள் - ரிக்கி பாண்டிங்
உலகக்கோப்பை நாயகன் ரிக்கி பாண்டிங் உலகக் கோப்பையில் 29 போட்டிகளில் 23 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.வெற்றி சதவீதம் 92.85%. இவருக்கு அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் க்ளைவ் லாயட் 88.23 % சதவீதத்தினை கொண்டுள்ளார்.
இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி உலகக் கோப்பை இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றபோது வெற்றி சதவீதம் 80 பெற்றிருந்தார். ஆனால் அதனைத் தகர்த்தெரிந்தார் ரிக்கி பாண்டிங். அவருடைய கேப்டன் நோக்கம் மற்றும் திறன் தனித்தன்மையுடன் காணப்படுகிறது.
இவருக்கு முன் லாயட் 2 உலகக் கோப்பையையும், ஃப்ளம்மிங் 2 உலகக் கோப்பையையும் வென்று சாதனையை வைத்திருந்தனர்.பின்னர் வந்த பாண்டிங் மூன்று உலகக்கோப்பைகளை வென்று சிறந்த கேப்டனாக ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தியுளளார். இந்தச் சாதனையை முறியடிப்பது மிகவும் அரிதான ஒன்றாகும். 2003 & 2007 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் போட்டிகளில் தோற்பது என்பது அரிய நிகழ்வில் ஒன்றாகும்.
#2. அதிக எக்னாமிக்கல் கொண்ட சிறப்பான பந்துவீச்சாளர்
பிஷன் சிங் பேடி 1975ல் முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கெதிராக 12 ஓவர் வீசி வெறும் 6 ரன்களை மட்டுமே கொடுத்து அதிக எகனாமி ரேட் பெற்ற பந்துவீச்சாளர் என்ற சாதனையை 40 வருடங்களாகத் தம் வசம் வைத்துள்ளார். ரிச்சர்ட் ஹர்ட்லி இதே உலகக் கோப்பையில் 10 ரன்களை மட்டும் கொடுத்து ஒரு சாதனையை வைத்துள்ளார்.
சி.எம் ஓல்ட் இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபௌலர் 1979லும்,1999ல் மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த கர்ட்லி ஆம்ரோஸ் 10 ஓவரில் 8 ரன்களை மட்டுமே கொடுத்து சாதனை படைத்துள்ளனர்.ஆனால் தற்போதைய பேட்ஸ்மேன்கள் மிகவும் பலமடைந்து காணப்படுகின்றனர். இனிவரும் காலங்களில் இது போன்ற வரலாற்று சாதனைகளைக் காண்பது மிகவும் அரிதானது ஆகும். 20ஆம் நூற்றாண்டில் இச்சாதனை போல் கிளிஸ்பி என்பவர் 10 ஓவரில் 13 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவே தற்காலத்தில் உலகக்கோப்பையில் அதிக எக்னாமிக்கல் பந்துவீச்சாகப் பார்க்கப்படுகிறது.
#1.உலகக்கோப்பையில் அதிக ரன்கள்-சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கரின் மொத்த ஒருநாள் போட்டியின் பேட்டிங் சராசரியை விட உலகக் கோப்பை போட்டியில் சச்சினின் மொத்த பேட்டிங் சராசரி அதிகமாகும். இந்தச் சராசரி டான் ஃபிராட்மேனின் சராசரிக்கு கிட்டத்தட்ட சமமாக அமையும். சச்சின் டெண்டுல்கர் 44 உலகக் கோப்பை போட்டியில் 2278 ரன்களுடனும் 56.75 சராசரியுடனும் பெரும் சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனையை முறியடிப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே உள்ளது.1743 ரன்களுடன் ரிக்கி பாண்டிங் இரண்டாவதாக உள்ளார். ரிக்கி பாண்டிங் மட்டுமே இவருக்கு ஒரு போட்டியாளராக இருந்தார். ரிக்கி பாண்டிங் 5 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்று 3 உலகக் கோப்பையை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு அடுத்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த குமார் சங்கக்காரா 991 ரன்களுடனும், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஏ.பி.டிவில்லியர்ஸ் 725 ரன்களுடனும் உள்ளனர்.
எழுத்து: கிரிஸ்
மொழியாக்கம்: சதீஸ்