ராகுல் டிராவிட் "இந்திய தடுப்புச்சுவர்" என்று அனைவராலும் கருதப்பட்டு இந்தியா கண்டெடுத்த சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார்.டெஸ்ட் மற்றும் ஒருநாள்போட்டியென இரண்டிலும் 10,000+ ரன்களை எடுத்த சில கிரிக்கெட் வீரர்களில் டிராவிட் ஒருவர்.அவருடைய மிக நுணுக்கமாக ஆட்டத்திறனும், ஆட்டத்தின் சூழ்நிலைக்கேற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் திறன் என எதிரணியை அணி விரர்களை கலங்கடித்தார்.2000 ஆம் ஆண்டுகளில் சேவாக், சச்சின், கங்குலி, லட்சுமண் ஆகியோருடன் டிராவிடும் இந்திய அணிக்கு ஒரு தூணாக இருந்தார்.டிராவிட்டை ஏன் விக்கெட் கீப்பராகத் தேர்வு செய்கிறிற்கள் என முன்னாள் கேப்டன் கங்குலியிடம் கேட்டபோது அவர் சொன்னார் " அவர் கிளவுஸ் உடன் வந்தால்தான் இந்திய அணிக்குக் கூடுதல் பேட்ஸ்மேன் கிடைப்பார்" எனக் கூறினார்
கர்நாடக மாநிலத்தின் சிறந்த நட்சத்திர பேட்ஸ்மேனாகத் திகழ்ந்தவர் ராகுல் டிராவிட்.அவர் தனது பெருமையைப் பொருட்படுத்தாமல் எளிமையாகவும் அமைதியின் சிகரமாகவும் திகழ்வார்.
ராகுல் டிராவிட் பற்றி நமக்குத் தெரியாத அவருடைய சகவீரர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்ட சில இரகசியங்களை இங்குக் காணலாம்.
#1.கெவின் பீட்டர்சன் : ராகுல் சுழற்பந்து வீச்சை எவ்வாறு கையாள்வது என்று எனக்குக் கற்றுக்கொடுத்தார்.
கெவின் பீட்டர்சன் தனது சுயசரிதையில் ராகுல் டிராவிட் பற்றிக் கூறியதாவது: எனக்கு ஒரு கடிதம் ஒன்று இந்தியாவிலிருந்து வந்தது.அக்கடிதத்தில் சுழற்பந்து வீச்சை எவ்வாறு கையாள்வது என்று இந்திய வீரர் ராகுல் டிராவிட் தனக்கு எழுதியிருந்தார் என்று தனது சுயசரிதையில் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து கண்டெடுத்த சிறந்த வீரர்களும் ஒருவராவார்.இவர் வெறும் 104 டெஸ்ட் போட்டிகளில் 8000 ரன்களை விளாசியுள்ளார்.கெவின் பீட்டர்சன் மற்றும் ராகுல் டிராவிட் ஐ.பி.எல் 2009-10 ல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இணைந்து விளையாடியபோது கெவின் பீட்டர்சன் ராகுல் டிராவிட்டிடம் சுழற்பந்து வீச்சை எவ்வாறு கையாள்வது என்பதைப் பற்றிக் கேட்டார்.அவர் கடிதத்தின் மூலம் தனக்கு சுழற்பந்து வீச்சை கையாளும் வித்தையைக் கெவின் பீட்டர்சனுக்கு எழுதியனுப்பி வைத்தார்.
கெவின் பீட்டர்சன்னிற்கு ராகுல் டிராவிட் எழுதிய கடிதம் :
அவருடைய பரிந்துரையின்படி சுழற்பந்து வீச்சை கையாண்டு அனைத்து சூழ்நிலைகளிலும் சுழற்பந்துவீச்சில் அதிக ரன்களை குவித்ததாகவும் கெவின் பீட்டர்சன் தனது சுயசரிதையில் கூறியுள்ளார்.
#2.விரேந்தர் சேவாக்: ராகுல் டிராவிட் டிரஸிங் அறையில் ஒருமுறை நாற்காலியை எறிந்தார்
ராகுல் எப்பொழுதும் அமைதியாகவே, புன்னகையுடனும் இருப்பார்.ஆனால் சில தவிர்க்கமுடியாத சில சமயங்களில் தனது அமைதியை இழந்து விடுவார்.ஒரு சமயம் ராகுல் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் கோபமடைந்து டிரஸிங் அறையில் இருந்த நாற்காலியை எடுத்து எறிந்துவிட்டார்.
இறுதியில் அவரும் ஒரு மனிதரே என்பதை நிறுபித்தார்.இந்த நிகழ்வைப் பற்றி ராகுல் டிராவிட்டிடம் அவரது மனைவி விஜிதா ராகுல் கேட்டபோது அவர் கூறியதாவது: " நான் அவ்வாறு செய்திருக்க கூடாது.அச்சமயத்தில் எனது பொறுமையை இழந்து விட்டேன்"எனக் கூறினார்.
சில மாதங்களுக்குப் பிறகு நாற்காலி வீசப்பட்ட சம்பவத்தைப் பற்றி அவரிடம் கேட்டறிந்தார் சேவாக்.இந்நிகழ்வானது இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய மைதானத்தில் இந்தியாவின் மோசமான ஆட்டத்தால் டெஸ்ட் தொடர் டிரா ஆனது.டிராவிட் கேப்டனாக இருந்ததால், தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் அந்தப் போட்டியில் ஒன்பது ரன்கள் மட்டுமே விளாசினார். இந்தியா மொத்தமாக 100 ரன்கள் மட்டுமே எடுத்தது.
#3.சச்சின் டெண்டுல்கர் : என்னைத் தனியாக விடுமாறு ராகுலிடம் கூறினேன்
சச்சின் மற்றும் ராகுல் டிராவிட் இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்துள்ளனர்.டிராவிட் & சச்சின் மட்டும் ஜோடியாக 6000 ரன்களை தனது கிரிக்கெட் வாழ்நாட்களில் குவிந்துள்ளனர்.சச்சின் ஆரம்பம் முதலே ரன் குவிப்பில் ஈடுபட ஆரம்பித்துவிடுவார்.ஆனால் டிராவிட் ஆட்ட நுட்பத்தைக் கணித்து ரன் அடிக்கத் தயாராவதற்கு நிறைய பந்தினை எடுத்துக்கொள்வார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர்களது இருவரின் பங்கு மகத்தானது ஆகும்.
சில சம்பவங்கள் இருவரிடையே சில மனகசப்புகளை ஏற்படுத்தியுள்ளது.ஒரு முறை முல்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சச்சின் 194 ரன்கள் எடுத்திருந்தபோது கேப்டன் ராகுல் டிராவிட் டிக்ளெர் செய்தார்.இதனால் சச்சின் டெண்டுல்கரின் இரட்டை சதம் எடுக்க முடியாமல் போனது.இதனைத் தனது சுயசரிதையில் சச்சின் என்னை என் வழியில் விளையாட விடுங்கள் என்று வெளிப்படுத்தியுள்ளார். எனினும், இந்தச் சம்பவம் இருவருக்கும் இடையேயான நட்புறவுகளை மாற்றியமைக்கவில்லை, இருவருமே இன்றுவரை நல்ல நண்பர்களாகவே உள்ளனர்.
எழுத்து
அபிஷேக் பஜியா
மொழியாக்கம்
சதிஷ் குமார்