ஒரு அணியின் வெற்றி என்பது சிறப்பான பேட்டிங் மற்றும் சிறப்பான பந்து வீச்சு ஆகிய இரண்டையும் தான் சார்ந்துள்ளது. அதில் மிக முக்கியமானது தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான விளையாட்டுதான். தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடி, நல்ல தொடக்கத்தை கொடுத்தால் மட்டுமே அந்த அணி பெரிய ஸ்கோரை எட்ட முடியும்.
எனவே தொடக்க ஆட்டக்காரர்களின் சிறப்பான விளையாட்டு என்பது அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அனைத்து அணிகளிலும் சிறப்பான தொடக்கம் ஜோடிகள் உள்ளன. அவற்றுள் எந்த ஜோடி, மிக ஆபத்தான தொடக்க ஜோடியாக உள்ளது என்பதை பற்றி இங்கு காண்போம்.
#3) அம்லா – டி காக்
தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த அம்லா மற்றும் டி காக் தொடக்க ஜோடி, மிக ஆபத்தான தொடக்க ஜோடிகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இவர்கள் இருவருக்கும் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், டி காக் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடக் கூடியவர். அதே சமயத்தில் அம்லா தனது விக்கெட்டை பறிகொடுக்காமல் நிலைத்து நின்று ரன்களை சேர்க்கக் கூடியவர். இவர்கள் இருவரும் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வருகின்றனர்.
#2) வார்னர் – பின்ச்
ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த இவர்கள் இருவரும் மிக ஆபத்தான தொடக்க ஜோடிகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்திருக்கின்றனர். ஆனால் இதில் சோகம் என்னவென்றால், கடந்த ஒரு வருடமாக வார்னர் ஆஸ்திரேலிய அணிக்கு விளையாடுவதில்லை. கடந்த வருடம் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில், செய்த தவறால் தற்போது ஒரு வருடமாக அணிக்கு விளையாட முடியாமல் தடை செய்யப் பட்டிருக்கிறார்.
தற்போது இவரது தடைக்காலம் முடிந்து விட்டது. கூடிய விரைவில் உலக கோப்பை தொடர் நெருங்க உள்ளது. இந்த சூழ்நிலையில் இவர் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்ப உள்ளதால், அந்த அணிக்கு கூடுதல் பலமாக அமையும். இவர்கள் இருவரும் டி-20 போட்டியாக இருந்தாலும், ஒரு நாள் போட்டியாக இருந்தாலும், எப்பொழுதும் அதிரடியாக மட்டும்தான் விளையாடுவார்கள்.
#1) ரோகித் – தவான்
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் நமது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் மற்றும் தவான். இவர்கள் இருவரும் தான், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனைத்து தொடக்க ஆட்டக்காரர்களின் சாதனைகளை முறியடித்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக ரோகித் சர்மா போட்டியின் இறுதி வரை விளையாடக் கூடிய அளவிற்கு வல்லமை படைத்தவர். இவர் ஒருநாள் போட்டிகளிலும், டி-20 போட்டிகளிலும் பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார். இவருடன் களமிறங்கும் தவான் தொடக்கத்திலேயே பவுண்டரிகளை விளாச ஆரம்பித்துவிடுவார்.
ஆனால் ரோகித் சர்மா முதல் 10 ஓவர்களில் மிகப் பொறுமையாக விளையாடுவார். பின்பு களத்தில் நிலைத்துவிட்டால், மைதானத்தில் சிக்ஸர்களுக்கு பஞ்சம் இருக்காது. அதுமட்டுமின்றி ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரோகித் சர்மா. இவ்வாறு சிறப்பாக விளையாடும் இவர்கள் இருவரும் தான், மிக ஆபத்தான தொடக்க ஜோடியாக கருதப்படுகிறது.