ரஞ்சி கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்றது விதர்பா

ரஞ்சி கோப்பை வென்ற சந்தோஷத்தில் விதர்பா அணியினர்
ரஞ்சி கோப்பை வென்ற சந்தோஷத்தில் விதர்பா அணியினர்

நாக்பூரில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில், ஆதித்யா சர்வேட்டின் அற்புதமான சுழற் பந்துவீச்சின் உதவியால் சவுராஷ்டிரா அணியை வென்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ரஞ்சி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது விதர்பா அணி.

ஏற்கனவே ஐந்து விக்கெட்டுகளை இழந்து, இன்னும் வெற்றிக்கு 148 ரன்கள் தேவை என்ற நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடங்கியது சவுராஷ்டிரா. கோப்பையை வெல்ல வேண்டுமானால் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் இருந்தது சவுராஷ்டிரா. ஆனால் விதர்பாவிற்கு இப்படியான எந்த சிக்கலும் இல்லை. முதல் இன்னிங்ஸில் சவுராஷ்டிராவை விட அதிகமான ரன்கள் பெற்றுள்ளதால் இந்த போட்டியை டிரா செய்தாலே போதுமானது.

இப்படியொரு இக்கட்டான சூழலில் ஆடத் தொடங்கிய கம்லேஷ் மக்வானாவும், விஷ்வராஜ் ஜடேஜாவும் விதர்பா பந்துவீச்சாளர்களுக்கு ஆரம்பத்திலேயே நெருக்கடி கொடுக்க முடிவு செய்தனர். சர்வேட் மற்றும் உமேஷ் யாதவின் ஓவர்களில் தொடர்ச்சியாக பவுண்டரிகள் விளாசப்பட்டது. மக்வானா தொடர்ந்து அதிரடியாக ஆடி ரண்களை சேர்த்து கொண்டிருந்த நிலையில், சர்வேட்டின் சுழற்பந்து வீச்சில் தனது ஸ்டம்பை பறி கொடுத்தார். கீப்பரிடம் செல்லும் என்று அந்த பந்தை அடிக்காமல் விட்டார் மக்வானா. ஆனால் பந்தோ நேராக சென்று ஸ்டம்பை பதம் பார்த்தது.

விதர்பா அணியின் வெற்றிக்கு வித்திட்ட சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா சர்வேட்
விதர்பா அணியின் வெற்றிக்கு வித்திட்ட சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா சர்வேட்

அதன்பிறகு சரியான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் 88 ரன்களுக்கு ஐந்து விக்கெட் என்ற நிலையிலிருந்த சவுராஷ்டிரா கண் இமைக்கும் நேரத்தில் 91 ரன்களுக்கு ஏழு விக்கெட் என்று தள்ளாடியது சவுராஷ்டிரா. ஒரு பக்கத்தில் விக்கெட் விழுந்து கொண்டிருந்தாலும், மறு முனையில் ஆடிக் கொண்டிருந்த ஜடேஜா அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து அணிக்கு நம்பிக்கை ஊட்டினார். ஜடேஜாவின் பேட்டிங்கை பார்க்கும் போது நிச்சியம் சவுராஷ்டிரா அணியை வெற்றி பெற வைத்துடுவார் என தோன்றியது.

ஆனால் சுழற்பந்து வீச்சாளர் சர்வேட் தொடர்ந்து சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்தது அவருக்கு நல்ல பலனை கொடுத்தது. நம்பிக்கையோடு ஆடிக் கொண்டிருந்த ஜடேஜா, சர்வேட்டின் பந்தை சரியாக கணிக்காமல் ஸ்வீப் ஷாட் அடிக்க முயற்சித்து முழுவதுமாக அதை தவறவிட்டார். அது நேராக காலில் பட்ட போது, ஜடேஜாவின் கால் நேராக ஸ்டம்பை மறைத்து இருந்தது. நடுவர் உடனடியாக LBW முறையில் அவுட் கொடுக்க, என்ன நடக்கிறது என்ற திகைப்பில் சற்று நேரம் அங்கேயே நின்றார் ஜடேஜா. தாங்கள் எதிர்பார்த்த விக்கெட் கிடைத்த மகிழ்ச்சியில் விதர்பா அணியினர் துள்ளி குதித்தனர்.

கோப்பையுடன் விதர்பா அணி கேப்டன் ஃபைஸ் ஃபாஸல்
கோப்பையுடன் விதர்பா அணி கேப்டன் ஃபைஸ் ஃபாஸல்

சர்வேட்டின் சுழலும், கணிக்க முடியாத பிட்ச்சின் தன்மையும் சவுராஷ்டிரா அணிக்கு மிகப்பெரும் இடராக இருந்தது. அடுத்த வந்த சவுராஷ்டிரா கேப்டன் உனத்கட் 15 பந்துகள் மட்டுமே தாக்குப் பிடித்தார். இவரும் சர்வேட்டின் பந்தில் ஸ்வீப் ஷாட் அடிக்க முற்பட்டு தனது விக்கெட்டை பறி கொடுத்தார். முடிவில் வாக்கரே பந்துவீச்சில் தர்மேந்திரசிங் ஓங்கி அடிக்க, விதர்பா அணியின் வெற்றிக்கு வித்திட்ட சாவேட் மிட் விக்கெட் திசையில் இருந்து கேட்ச் பிடிக்க, போட்டி கன கச்சிதமாக முடிவடைந்தது.

முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளும் என விதர்பா அணியின் வெற்றிக்கு முக்கிய தூணாக விளங்கினார் ஆதித்யா சர்வேட். இரண்டு இன்னிங்ஸிலும் சவுராஷ்டிரா அணியின் நட்சத்திர வீரர் புஜாராவை வீழ்த்தியது சர்வேட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் கடந்த முறை தங்கள் அணி அதிர்ஷடத்தால் வெல்லவில்லை என்றும் மற்ற அணிகளை விட தங்கள் அணி தான் பலமிக்கது என்பதையும் மீண்டும் நிரூபித்துள்ளது விதர்பா.

சுருக்கமான ஸ்கோர்:

விதர்பா: 312 & 200

சவுராஷ்டிரா: 307 & 127

Quick Links

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications