இந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது இந்தியா. இந்த ஒருநாள் தொடரின் முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் வெற்றிக்குப் பின்னர் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவிற்கு பீட்டர்சன் கேலி செய்யும் விதமாக பதிலளித்திருந்தார். இதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.
இந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் 3 டி - 20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது இந்தியா. இந்த ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி கடந்த ஜனவரி 21-ம் தேதி நடைபெற்றது. அந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி 38 ஆவது ஓவரின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் அடித்தது. நியூசிலாந்து அணி சார்பில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் அரை சதம் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முகமது சமி தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா மற்றும் தவான் களம் இறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரோகித் சர்மா அவுட் ஆகி வெளியேறினார். பின்பு தவானும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 46 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினார்.
இறுதியில் தவான் மட்டும் நிலைத்து நின்று விளையாடி அரை சதம் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 35 ஆவது ஓவரின் முடிவில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களை அவுட் ஆக்கிய முகமது சமி இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தப் போட்டி நடைபெறும் பொழுது அதிகமாக சூரிய வெளிச்சம் இருந்ததால் போட்டி சிறிது நேரம் தள்ளிவைக்கப்பட்டது. இதனால் இந்த போட்டியின் வெற்றிக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டுவிட்டரில் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தின் கீழ் “நாங்கள் வெயிலில் குளிர் காய்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவிற்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் “நீங்கள் அதிகமாக நிழலில் தான் இருக்கிறார்கள்” என்று கேலி செய்யும் விதமாக பதிலளித்திருந்தார். இதற்கு உடனே விராட் கோலி “உங்களின் முதல் பதிவு அதைவிட மோசமானது” என்று கூறினார். இவ்வாறு இருவரும் கேலி செய்யும் விதமாக மாறி மாறி மோதிக்கொண்டனர். இவர்களின் இந்த உரையாடல் தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது.