கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக தற்போது திகழ்ந்து வருகிறார் விராட் கோலி. டெல்லியில் பிறந்து வளர்ந்த இவர் 2008-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்து வைத்தார்.
2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் நாள் தனது முதல் சர்வதேச போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்டார்.
இவரது இளமை காலத்தில் ரஞ்சி டிராபி போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் பொழுது தனது தந்தையை இழந்தார், இருப்பினும் டெல்லி அணிக்காக விளையாட முடிவு செய்தார், இப்போட்டியை டெல்லி அணி டிரா செய்தனர். இவரது தந்தை பதினெட்டாம் நாள் இறந்ததால் தனது ஜெர்செயின் நம்பரை 18 ஆக தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2008ஆம் ஆண்டு முதல் இன்று வரை சர்வதேசப் போட்டிகளில் 18,000 ரன்களைக் குவித்துள்ளார், 60க்கும் மேற்பட்ட சதங்களை விளாசியுள்ளார்.
இவற்றில் விராட் கோலியை பற்றி 7 சுவாரஸ்யமான உண்மைகளை பற்றி பார்க்கலாம்.
#7 இருதரப்பு தொடரில் 500 ரன்களை குவித்த ஒரே வீரர் :
பல ரன்களை குவித்து தனது 30 வயதிலேயே ஏராளமான சாதனைகளை செய்துள்ளார் விராட் கோலி, இன்னும் 6-7 வருடங்கள் விளையாட இருக்கும் இவர் வருங்காலத்தில் அனைத்து சாதனையையும் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கோலி 500 ரண்களுக்கும் மேல் கடந்து ஒரே தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்து முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்தார். இவர் இத்தொடரில் 558 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தொடாரை இந்தியா அணி 5-1 என்ற கணக்கில் வெற்றியும் பெற்றது.
#6 ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டியை வென்ற ஒரே ஆசிய கேப்டன் ஆவார் விராட் கோலி :
விராட் கோலி 2014-ஆம் ஆண்டு முதல் இந்தியா டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார், அதன் முன்பு இந்திய அணியை வழிநடத்தி வந்த தோனியை விட சிறப்பாகவே வழிநடத்தி வருகிறார் என்றும் கூறலாம்.
இதற்கு ஆஸ்திரேலியா இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் வெற்றி பெற்ற டெஸ்ட் போட்டிகளே சான்று, இவற்றை அடைந்த முதல் ஆசிய கேப்டனும் இவரே.
2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற தொடரில் ஒரு போட்டியும், இங்கிலாந்து தொடரில் ஒரு போட்டியிலும் இந்திய அணி வென்றது, இதுமட்டுமன்றி, சமீபத்தில் ஆஸ்திரேலியா மண்ணில் கோலி தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக தொடரை வென்று சாதித்தது.
விராட் கோலி விளையாடிய அனைத்து நாடுகளிலும் இவரே ராஜா என்று நிரூபித்துள்ளார், ஆம், இவர் விளையாடிய அனைத்து நாடுகளிலும் அதிக ரன்களைக் குவித்து இந்திய அணியை பல முறை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
#5 ஒருநாள் போட்டியில் அதிவேக சதம் :
இப்பேர்ப்பட்ட வீரரான இவர் அதிவேக சதத்தையும் விட்டுவைக்கவில்லை, 2013ஆம் ஆண்டில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இத்தொடரில் விராட் கோலி 52 பந்துகளில் 100 ரன்களை எடுத்து சாதனை படைத்தார். இந்திய வீரர்களின் சார்பில் இதுவே அதிவேக சதம் ஆகும்.