#4 உலகக்கோப்பையின் அறிமுகப் போட்டியில் சதமடித்த முதல் வீரர் விராட் கோலி :
அதே போட்டியில் விரேந்தர் சேவாக் 175 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் சச்சின் படைக்காத ஒரு சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி, உலகக்கோப்பையின் அறிமுகப் போட்டியில் சதமடித்த முதல் வீரர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது. 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக 83 பந்துகளில் சதம் கடந்தார். விராட் கோலி இதுவரை 39 சதங்களை கடந்து உள்ளார், டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க இன்னும் 11 சதங்களை தேவை.
#3 விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டு முறை விக்கெட் கீப்பிங் செய்துள்ளார் :
வங்காளதேசம் அணிக்கு எதிராக தாக்காவில் நடைபெற்ற போட்டியில் மகேந்திர சிங் தோனி உடல்நிலை காரணமாக சிறிது நேரம் வெளியேறினார் அந்த இடைவெளியில் விராட் கோலி கீப்பிங் செய்தார். தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்ற வந்தது, ஜோகன்ஸ்பெர்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி பந்துவீசினார் இந்த ஓவரில் விராட் கோலி கீப்பிங் செய்தார்.
#2 ஐபிஎல் ஏலத்துக்கு செல்லாத ஒரே வீரர் விராட் கோலி :
விராட் கோலி 2008 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான 'டிரப்ட்' இன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவற்றில் விராட் கோலியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தேர்வு செய்தது. அப்போதிலிருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விராட் கோலியை அந்த அணியில் இருந்து எந்த வருடமும் விடுவிக்கபடவில்லை.சீராக ரன் சேர்ப்பதில் வல்லவர் விராட் கோலி, பதினோரு வருடங்களாக ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக விளையாடி வருவதே இதற்குச் சான்று.
#1 ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக பத்தாயிரம் ரன்களை கடந்த வீரர்
கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் சச்சின் டெண்டுல்கர், அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலிக்கு முன்பு வைத்து இருந்தவர் இவரே, சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தச் சாதனையை முறியடித்தார் விராட் கோலி.
259 இன்னிங்சில் சச்சின் டெண்டுல்கர் பத்தாயிரம் ரன்களை கடந்தார், ஆனால் விராட்கோலி 205 இன்னிங்சில் 10000 ரன்களை கடந்து சச்சின் சாதனையை முறியடித்தார், இதுமட்டுமின்றி சச்சினின் 49 ஒருநாள் சதத்தையும் விரைவில் முடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.