12வது உலகக் கோப்பை சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2019 உலகக் கோப்பை தொடரானது மே 30 அன்று தொடங்க உள்ளது. இதன் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலபரிட்சை நடத்த இருக்கின்றன. இவ்வருட உலகக் கோப்பை தொடரில் அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் ஒரு போட்டியில் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை புள்ளி பட்டியலில் பிடிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாக இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச், இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானிற்கு எதிரான தொடரை 4-0 என கைப்பற்றியதன் மூலம் இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 அணியாக வலம் வருகிறது. உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக கடந்த மாதத்தில் நடந்த இந்த தொடரில் இங்கிலாந்து அணி அனைத்து போட்டிகளிலும் 300க்கும் மேலான ரன்களை குவித்ததே அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணி கடந்த 11 ஒருநாள் தொடர்களை முழுமையாக கைப்பற்றியுள்ளது. இதில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடர்களும் அடங்கும்.
"இங்கிலாந்து அணி மிகவும் வலிமையான அணியாகும், தற்போது உலகக்கோப்பையில் இடம்பெற்றுள்ள 10 அணிகளும் சிறப்பான அணிகளாக உள்ளது. என 2019 உலகக் கோப்பை அணிகளின் கேப்டன்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளதாவது,
"உலகக் கோப்பை மிகவும் சவாலான ஐசிசி கிரிக்கெட் தொடராகும். உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 2019 உலகக் கோப்பை மிகவும் அதிக போட்டியாளர்களை கொண்ட தொடராக இருக்கிறது என நான் நினைக்கிறேன்"
ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளதாவது,
"இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்திறனுடன் உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அந்த அணிக்கு அடுத்ததாக உள்ளது. இங்கிலாந்து அணி கண்டிப்பாக ஒரு சிறப்பான அணியாக உலகக் கோப்பை தொடரில் திகழும்"
இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கனும் கேப்டன்கள் சந்தீப்பில் கலந்து கொண்டு ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணியை புகழ்ந்து தள்ளியுள்ளார். மிகவும் சிறந்த போட்டியாளர்களை கொண்ட உலகக் கோப்பை தொடரில் எந்த அணி உலகக் கோப்பையை கைப்பற்றும் என நாம் இப்போது எதுவுமே சொல்ல முடியாது. அனைத்து அணிகளுமே மிகவும் வலிமை வாய்ந்த வீரர்களை கொண்டு விளங்குகிறது.
இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் கூறியதாவது,
"இப்போது நாம் எந்த அணி உலகக் கோப்பை தொடரை கைப்பற்றும் என கூற முடியாது. மிகவும் சிறந்த போட்டியாளர்களை கொண்ட ஐசிசி தொடராக இவ்வருட உலகக் கோப்பை தொடர் திகழ்கிறது. 2019 உலகக் கோப்பை தொடரில் நடக்க உள்ள அனைத்து போட்டிகளிலும் விறுவிறுப்பிற்கு சிறிது கூட பஞ்சமிருக்காது."
இங்கிலாந்து அணி இதுவரை உலகக் கோப்பையை வென்றது கிடையாது. ஆனால் அந்த கூற்றை மாற்றியமைக்க இவ்வருட உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இங்கிலாந்து அணி இதுவரை 3 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பங்கேற்று தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.