கதை என்ன ?
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மொத்தம் 338 ரன்கள் இலக்கை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது இந்திய அணி. இதில் விராட் கோலி 66 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மாவுடன் ஒரு உறுதியான கூட்டணியை இணைத்தார். இதன் மூலம் உலகக் கோப்பையின் ஒரு பதிப்பில், ஒரு கேப்டன் தொடர்ச்சியான ஐந்து அரைசதங்களை அடித்த சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முறியடித்தார்.
உங்களுக்குத் தெரியாவிட்டால்…
இந்த உலகக் கோப்பையில் விராட் கோலி மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார், தொடர்ச்சியாக தனது அணிக்கு அதிக ரன்கள் குவிக்க உதவுகிறார். அவர் முன்னணியில் இருந்து ஒரு கேப்டனாக தனது அணியை வழிநடத்துகிறார், மேலும் டாப் ஆர்டரில் எந்தவிதமான விக்கெட்டுகளும் விழாமல் உறுதிப்படுத்தினார்.
ஒரு கேப்டன் தொடர்ச்சியாக உலகக் கோப்பையில் அதிக அரைசதம் எடுத்த சாதனையை முன்னதாக கிரேம் ஸ்மித் (2007) மற்றும் ஆரோன் பிஞ்ச் (2019) ஆகியோர் இணைந்து வைத்திருந்தனர், அவர்கள் தலா நான்கு அரைசதங்கள் அடித்திருந்தனர்.
கதைக்கரு
இங்கிலாந்து அணிக்கு எதிரான மகத்தான இலக்கை துரத்தலில், ரன் மிசின் என்றழைக்கப்படும் விராட் கோலிக்கு தொடக்க வரிசையில் விளையாடும் சூழ்நிலை ஏற்ப்பட்டது, ஏனெனில் கே.எல்.ராகுல் மூன்றாவது ஓவரில் எந்தவொரு ரன்களும் அடிக்காமல் தனது விக்கெட்டை இழந்தார். 20 வது ஓவர்கள் முடிவில் விராட் கோலி தனது அரைசதத்தை எட்டினார், அவரும் ரோஹித்தும் சேர்ந்து 138 ரன்கள் தங்களது கூட்டணியில் குவித்தனர்.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் கூட்டணி இலகை துரத்துவதற்கு பக்கபலமாக இருந்தது, ஆனால் இந்திய கேப்டன் 29 வது ஓவரில் வீழ்ந்தார், உலகக் கோப்பை அறிமுக வீரர் ரிஷாப் பண்ட் ரோகித் சர்மாவுடன் இணைத்தார்.
ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்களை அடித்த இரண்டாவது வீரராக விராட் கோலி உள்ளார். இந்தப் பட்டியலில் முதலில் ஸ்டீவ் ஸ்மித் - 2015 உலகக் கோப்பையில் இந்த சாதனையை நிகழ்த்தினார். ஆனால் ஸ்மித் அப்போது கேப்டன் அல்ல. தற்போது கேப்டனாக இந்த சாதனையை நிகழ்த்தியவர் என்று முதல் இடத்தை பிடித்துள்ளார் விராட் கோலி. இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய கேப்டன் தனது அரைசதங்களில் எதையும் சதமாக மாற்ற முடியவில்லை. விராட் கோலி இந்த உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 5 அரைசதம் அடித்துள்ளார். இருப்பினும் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. தற்போது இந்திய அணி தங்களது 5 போட்டியில் வெற்றியும் ஒரு போட்டியில் மட்டும் தோல்வியும் பெற்றுள்ளது. இன்னும் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்து விடும்.
அடுத்தது என்ன ?
இந்திய அணி தனது அடுத்த போட்டியை பங்களாதேஷ் அணிக்கு எதிராக எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் மோதவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு நுழைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.