நடந்தது என்ன?
வியாழனன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாராவின் அதிவேக 20,000 சர்வதேச ரன்கள் சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளார்.
உங்களுக்கு தெரியுமா...
மேற்கிந்திய தீவுகளின் பிரைன் லாரா மற்றும் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் இந்தச்சாதனையை நீண்ட வருடங்களாக தங்கள் வசம் வைத்திருந்தனர். விராட் கோலி இவர்கள் இருவரை விட சற்று அதிவேகமாக 417 சர்வதேச போட்டிகளிலேயே இந்த மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளார்.
கதைக்கரு
இந்திய அணி தற்போது நடந்துவரும் 2019 உலகக்கோப்பை தொடரில் பேராதிக்கத்தை செலுத்தி வருகிறது. இத்தொடரில் ஒரு பேட்டியில் கூட தோல்வியை தழுவாமல் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. புள்ளிபட்டியலில் மிகக்குறைந்த போட்டிகளில் மட்டுமே இந்தியா பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். கேமர் ரோஜ்ஜின் சாதூரியமான பந்தில் ரோகித் சர்மா, மேற்கிந்தியத் தீவுகள் விக்கெட் கீப்பர் ஷை ஹோப்பிடம் கேட்ச் ஆனார். இதனால் விராட் கோலி ஆட்டத்தின் 6வது ஓவரிலே ஆடுகளத்திற்கு வரவழைக்கப்பட்டார்.
சிறப்பான மற்றும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தி தான் எதிர்கொண்ட பந்துகளை ரன்களாக மாற்றி அணியின் ரன்களை உயர்த்தினார். ஜேஸன் ஹோல்டரின் சிறப்பான பந்தில் கே.எல்.ராகுல் தனது விக்கெட்டை இழக்கும் முன்பு வரை விராட் கோலியுடன் கைகோர்த்து சிறந்த வலிமையான பார்ட்னர் ஷீப் அமைத்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். பின்னர் விஜய் சங்கருடன் கைகோர்க்க ஆரமித்தார் விராட் கோலி. பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய விராட் கோலி 25வது ஓவரில் பெரிய மைல்கல்லை அடைந்து சாதனை படைத்தார்.
இப்போட்டியில் களமிறங்குவதற்கு முன்பு விராட் கோலி மொத்தமாக 19,963 ரன்களை அடித்திருந்தார். இமாலய சாதனையை படைக்க 37 ரன்கள் விராட் கோலிக்கு தேவைப்பட்டது. இவர் விளையாடிய 417 சர்வதேச இன்னிங்ஸில் 131 டெஸ்ட் போட்டிகள், 224* ஒருநாள் போட்டிகள், 62 டி20 போட்டிகள் அடங்கும். இந்த சாதனை கண்டிப்பாக நீண்ட வருடங்கள் முறிக்கபடாத சாதனைகளாக வலம் வரும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் வீரர்களில் விராட் கோலியை தவீர எந்த வீரரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டுமே இப்பட்டியலில் உள்ளனர்.
அடுத்தது என்ன?
விராட் கோலி, கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, மகேந்திர சிங் தோனி ஆகியோரின் பங்களிப்பால் இந்திய அணி 268 ரன்களை முதல் இன்னிங்ஸில் குவித்துள்ளது. 269 என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் பயணத்தை தொடங்கியுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி ஒரு தோல்வி கூட 2019 உலகக்கோப்பை தொடரில் பெறாமல் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.