கோலி குடிக்கும் குடிநீர் பிரான்சிலிருந்து இறக்குமதி செய்யப்டுகிறது

விராட் கோலி
விராட் கோலி

உலகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில் நமது இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி அருந்தும் பாட்டில் குடிநீர் பேசு பொருளாக மாறியுள்ளது. அது பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

உடல் தகுதிக்கு ஆரோக்கியமான டயட் என்பது அனைவரும் கடை பிடிக்க வேண்டிய ஒன்று தான். அதிலும் விளையாட்டு வீரர்கள் மிகச் சரியாக கடைபிடிப்பார்கள். பெரும்பாலானோர் டயட் என்றால் உணவுக் கட்டுப்பாட்டையே பெரிதும் கடைபிடிக்கின்றனர். ஆனால் இந்த டயட் கடைபிடிப்பவர்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவர் குடிநீரிலும் டயட் மேற்கொள்கிறார். ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுப்பவர்கள் பலரும் இது போன்று செய்வதில்லை. பிரான்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஏவிஎம் நிறுவனத்தின் தண்ணீரை மட்டுமே குடிக்கிறார் விராட். இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் இவர் ஒருவர் தான் இந்த தண்ணீரை பயன் படுத்துகிறார்.

விளையாடும் போது மட்டுமல்லாமல் எங்கு சென்றாலும் ஏவிஎம் தண்ணீர் பாட்டிலுடன் தான் சொல்கிறார்கள். அப்படி என்ன அந்த தண்ணிரில் உள்ளது என்ற ஆர்வம் மேலோங்க செய்யும் போது அதில் இருக்கும் சத்துக்கள் நமக்கு வியப்பளிப்பதாக உள்ளது.

பொதுவாக நீரை பில்டர் செய்யும் போது அதிலுள்ள மினரல் சத்துகள் அதிகளவு வெளியேற்றப்படுகிறது. ஆனால் ஏவிஎம் குடிநீர் நேர்த்தியான மினரல் சத்துகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கையான முறையில் மலைகளில் உற்பத்தியாகும் நீரை சுத்திகரித்து தரமான குடி நீராக மாற்றப்படுகிறது. இது மட்டுமின்றி அங்கு உற்பத்தியாகும் தண்ணிரில் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் என அனைத்து மினரல் சத்துக்களும் இயற்கையாகவே உள்ளன. அதனால் தான் ஒரு லிட்டர் மினரல் வாட்டர் 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுமட்டுமல்ல இந்த குடிநீர் அடைக்கப்படும் பாட்டில்களும் பிரத்தியேகமானது ஸ்மார்ட் போன்களை போல ஸ்பெஷல் எடிசன்களில் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது இந்த நிறுவனம்.

பிரான்சின் மெடிக்கல் அகாடமியில் சிறந்த தரச் சான்றிதழ் பெற்றது இந்த குடிநீர். இயற்கையின் குணநலன்கள் அதிகம் கொண்டிருப்பதால் விளையாட்டு வீரர்களுக்கு உடல்நல ஆலோசனையாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். இந்த தண்ணீர் அருந்துவதால் உடலுக்கு நல்லது என்பதெல்லாம் சரி ஒரு நாளைக்கு 4 லிட்டர் என எடுத்துக்கொண்டால் ஆண்டுக்கு 12 லட்சத்திற்கு மேல் விராட் கோலி தண்ணிருக்காக மட்டும் செலவழிக்கிறார் என்பது நம்மை மலைக்க வைக்கிறது.

அபராதம் செலுத்திய கோலி

குடிக்கும் தண்ணிருக்காக இவ்வளவு செலவலிக்கிறார் என இது ஒரு புறமிறுக்க குடிநீரை கொண்டு கார் கழுவியதாக புதிய பிரச்சனை கிளம்பியுள்ளது. விராட் கோலி வீடு டெல்லியில் டிஎல்எஃப் குடியிருப்பு அருகே உள்ளது. விராட் கோலிக்கு சொந்தமான சொகுசு கார்கள் அவரது வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அவரது உதவியாளர்கள் சுத்தப்படுத்துவதற்காக குடி தண்ணீரை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து விராட் கோலி வீட்டின் அருகில் உள்ள நபர்கள் மாநகராட்சியிடம் புகார் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வீடுகளில் விசாரணை நடத்தியதில் அந்த பகுதியில் விராட் கோலி உட்பட 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கார் கழுவுவதற்கு குடி நீரை பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து குடிநீரை முறையற்ற வழியில் பயன்படுத்தியதற்காக விராட் கோலி உட்பட அனைத்து நபர்களுக்கும் மாநகராட்சி சார்பில் ரூபாய் 500 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Quick Links