ஒரு சாம்பியன் தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு சரியான வாய்ப்பு தேவைப்படுகின்றது என்பது அவசியமான ஒன்றாகும். அந்த சாதனை என்றும் வரலாற்றில் நினைவுகூரும் ஒன்றாக கருதப்படும். உதாரணமாக, ஆடம் கில்கிறிஸ்ட் 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை இறுதிப் போட்டியில் குவித்த 149 ரன்கள் அணியின் வெற்றியை நிர்ணயித்தது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாது , 28 ஆண்டுகளுக்கு பின்னர் 2011-ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை வென்றது. இந்த போட்டியில் மகேந்திர சிங் தோனி 91 ரன்கள் விளாசி வெற்றியை தேடி தந்தார். இவ்வாறாக, தற்போது நடக்கவிருக்கும் உலக கோப்பையில் திருப்புமுனை அமைக்கும் வகையில் விளையாடவிருக்கும் மூன்று வீரர்களைப் பற்றி காணலாம்.
#3. டேவிட் வார்னர்:
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், எல்லா சூழ்நிலைகளிலும் தன்னுடைய அசாத்திய பேட்டிங் திறனால் அணிக்கு வெற்றியை தேடித் தரக்கூடிய ஒரு சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். இடதுகை பேட்ஸ்மேனான இவர், தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் போட்டி 2019-ல் வெறும் 12 போட்டிகளில் விளையாடி 692 ரன்களை(69.20 ஆவரேஜுடன்) விளாசினார். மேலும், இவற்றுள் 1 சதமும் , 8 அரை சதங்களும் அடங்கும். அதுமட்டுமன்றி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து தன்னுடைய தனித் திறமையை நிரூபித்து வருகிறார். உலகக் கோப்பையில் விளையாடவுள்ள அனைத்து அணிகளுக்கும் இவர் பெரும் சவாலாக இருப்பார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெரிவிக்க வேண்டிய முக்கியமான கருத்தாகும்.
#2.ஆந்திரே ரசல்:
இந்த 12 வது உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆண்ட்ரே ரசல் மிகப்பெரிய துருப்புச் சீட்டாக இருப்பார். அதுமட்டுமல்லாது , இங்கிலாந்து மைதானத்திற்கு ஏற்ப நன்கு விளையாடக்கூடிய ஒரு நல்ல ஆல்ரவுண்டரும் ஆவார். அதிரடி ஆட்டத்தையே பெரிதும் வெளிப்படுத்தும் ரஸ்ஸல், மோசமான சூழ்நிலைகளில் கூட எளிதாக சிக்ஸர்களை விளாச கூடிய ஒரு நல்ல ஆட்டக்காரரும் ஆவார். மேலும், பேட்ஸ்மேன்களுக்கு இடையூராக நல்ல வேகத்தில் பந்து வீசக் கூடிய திறன் கொண்டவர்.
இந்தாண்டு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியின் ரஸ்ஸல் தனது தனித்திறமையை வெளிப்படுத்தினார். ரஸ்ஸலின் அனைத்து விதமான பங்களிப்பும் நடக்கவிருக்கும் உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கூடுதல் வலிமையாக இருக்கும். இவரின் பங்களிப்போடு வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றி வாய்ப்பானது அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
#1. விராட் கோலி:
இன்றைய , நவீன யுகத்தில் தொடர்ந்து எல்லா போட்டிகளிலும் ரன்களைக் குவித்து உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார், விராட் கோலி. சச்சின் டெண்டுல்கருக்கு பின்னர், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 41 சதங்களை கடந்த ஒரே வீரர் இவரே.
கடந்த 50 ஒருநாள் இன்னிங்சில், கோலி 14 சதம் மற்றும் 11 அரைசதங்கள் உட்பட 3151 ரன்களை எடுத்தார். இவரின் விக்கெட்டை வீழ்த்துவதே ஒவ்வொரு பந்து வீச்சாளர்களுக்கு ஒரு கடுமையான சவாலாக கருதப்படுகின்றது. இந்த உலக கோப்பை தொடருக்கு முன்னர், குறிப்பிட்டது போல ஒரு முன்னணி வீரராக கோலி விளங்குவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவர் அதை செய்ய முடியும் என்றால், கோலி நிச்சயமாக அதிக ரன்களை குவித்த வீரருக்கான விருதை கண்டிப்பாக இந்த உலக கோப்பையில் பெறுவார் என்பது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களாலும் உறுதி செய்ய இயலும்.