ஷேன் வார்னே தற்போது இந்திய அணியில் விளையாட வந்தால் நன்றாக இருக்கும் எனக் கூறிய விராட் கோலி

Virat kholi & Shane warnae
Virat kholi & Shane warnae

நடந்தது என்ன?

கடந்த தலைமையில் விளையாடிய வீரர்களை தற்போதுள்ள அணிகளில் இனைந்து விளையாட வாய்ப்பளித்தால், பொற்கை வேந்தர், முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே-வை இந்திய அணியில் விளையாடுமாறு வேண்டுகோள் விடுப்பேன்.

உங்களுக்கு தெரியுமா...

ஷேன் வார்னே அதிக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முத்தையா முரளிதரனிற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு உள்ளார்.

வார்னே 194 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 293 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இவருடைய சராசரி 25 ஆகும். 1999 உலகக் கோப்பை தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணியில் ஷேன் வார்னே இடம்பெற்று முக்கிய பங்களிப்பினை அளித்தார்.

கதைக்கரு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2007ல் விடைபெற்ற ஷேன் வார்னே ஒரு அருமையான பௌலிங் லெஜன்ட். சுழற்பந்து வீச்சில் மிகுந்த திறமை கொண்ட இவரது சிறப்பான "கூக்ளி" எதிரணி வீரர்களை தடுமாறச் செய்யும். இவர் ஒரு டாப் ஸ்பின்னர் மற்றும் ஃபிலிப்பர்ஸ். தான் யோசித்தவாறு சிறப்பான பந்துவீச்சை மேற்கொள்வார். இந்த சிறப்பான ஆட்டத்திறனுடன் திகழும் ஒரு சுழற்பந்து வீச்சாளரையே விராட் கோலி விரும்புகிறார்.

இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தவதாவது,

கடந்த தலைமுறையில் சர்வதேச கிரிக்கெட்டில் வலம் வந்த வீரரை தங்களது அணியில் தேர்வு செய்து கொள்ளலாம் என்ற வாய்ப்பு கிடைத்தால் நான் ஷேன் வார்னே-வை தேர்வு செய்வேன். நாங்கள் இருவரும் ஒரே அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் அவரது பந்துவீச்சை அதிகம் விரும்பி ரசிப்பேன். எதிரணி பேட்ஸ்மேன்களை எவ்வாறு ஷேன் வார்னே தனது மாயாஜால பௌலிங்கில் தடுமாறச் செய்கிறார் என்பதை காண மிகவும் ஆசையாக உள்ளது. இவ்வாறு நடந்தால் அது மிகப்பெரிய நிகழ்வாக என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் பார்பேன்.

சுழற்பந்து வீச்சாளர்களின் மாயாஜால ரகசியம் விராட் கோலிக்கு மிகவும் பிடிக்கும். இவர் இந்திய அணியின் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். அதன்மூலம் இந்திய அணிக்கு யுஜ்வேந்திர சகால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரை கண்டெடுத்தார்.

இதன் மூலம் இந்திய அணி தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய வெளிநாடுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி தனது ஆதிக்கத்தை நிருபித்தது. எனவே விராட் கோலிக்கு சுழற்பந்து வீச்சு மிகவும் பிடிக்கும் என்பதால் ஷேன் வார்னே-வை தனது அணியில் இனைத்தில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

அடுத்தது என்ன?

2019 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் யுஜ்வேந்திர சகால் மற்றும் குல்தீப் யாதவ் ஒரு முண்ணனி வீரர்களாக செயல்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. 1999 உலகக் கோப்பை தொடரில் ஷேன் வார்னே வெளிபடுத்திய அதே ஆட்டத்தை இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் எதிர்வரும் உலகக் கோப்பையில் செயல்படுத்தினால் விராட் கோலி மிகவும் மகிழ்ச்சி அடைவார்.

Quick Links

App download animated image Get the free App now