இன்று நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பத்திரிக்கையாளர்களிடம் எங்களது வெற்றிக்கு காரணம் இவர்கள்தான் என்று சிலரை குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியவர்களை பற்றி இங்கு காண்போம்.
இந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி கடந்த ஜனவரி 23ஆம் தேதி நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஒரு நாள் தொடரின் இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நியூசிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் தவான் மிகச் சிறப்பாக விளையாடினர். அதிரடியாக விளையாடிய இருவரும், 150 ரன்களுக்கும் மேலாக அடித்தனர். அதன் பின்பு சிறப்பாக விளையாடிய தவான் அரைசதம் அடித்து விட்டு சில நிமிடங்களில் அவுட்டாகி வெளியேறினார்.
தவான் அவுட் ஆகிய சில நிமிடங்களில் ரோகித் சர்மாவும் 87 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பின்பு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், ராயுடுவும் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் 40 ரன்களை அடித்து விட்டு அவுட் ஆகினர். இறுதியாக தோனி மற்றும் கேதர் ஜாதவ் அதிரடியாக விளையாடினர். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்களை குவித்தது.
325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி. 40 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்களை மட்டுமே எடுத்தது. எனவே இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி சார்பில் பிரேஸ்வெல் மட்டும் அரைசதம் விளாசினார். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்தப் போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பத்திரிக்கையாளர்களிடம் கூறியது என்ன என்றால், எங்கள் அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். முக்கியமாக எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். முதல் ஒருநாள் போட்டியில் முகமது சமியும், இந்த போட்டியில் குல்தீப் யாதவும் சிறப்பாக பந்து வீசியதே எங்களது வெற்றிக்கு முக்கிய காரணம். இவ்வாறு முகமது சமியையும், குல்தீப் யாதவையும் புகழ்ந்துள்ளார் விராட் கோலி. முதல் ஒரு நாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய முகமது சமி ஆட்டநாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.