நடந்தது என்ன?
2019 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்னும் 2 நாட்களில் வெளியிட உள்ளது. இந்த நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக் தனது உத்தேச இந்திய அணியை அறிவித்துள்ளார். 2015 உலகக் கோப்பை இந்திய அணியிலிருந்து ஒப்பிட்டு தற்போதைய உத்தேச இந்திய அணியை அறிவித்துள்ளார். அந்த வகையில் பார்க்கும்போது 8 மாற்றங்கள் இதில் நிகழ்ந்துள்ளது.
பிண்ணனி
2019 உலகக் கோப்பை மே மாத இறுதியில் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ ஏப்ரல் 15 அன்று வெளியிடுவதாக தெரிவித்திருந்தது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது 15 பேர் கொண்ட உத்தேச அணிகளை அறிவித்து வருகின்றனர். முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக் தனது பங்கிற்கு 15 பேர் கொண்ட இந்திய அணியை இன்று(ஏப்ரல் 13) வெளியிட்டுள்ளார்.
கதைக்கரு
விரேந்தர் சேவாக் தனது 15 பேர் கொண்ட 2019 உலகக் கோப்பை அணியை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இதில் 2015 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கும் இவர் அறிவித்துள்ள இந்திய அணிக்கும் வேறுபாடு காட்டுவது போல வெளியிட்டுள்ளார.
விரேந்தர் சேவாக்-இன் உத்தேச உலகக் கோப்பை அணி: விராட் கோலி, ரோகித் சர்மா, ஷீகார் தவான், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, ஜாஸ்பிரிட் பூம்ரா, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஜ்வேந்திர சகால், விஜய் சங்கர், ரிஷப் பண்ட்.
விரேந்தர் சேவாக் தேர்ந்தெடுத்துள்ள 15 பேர் கொண்ட இந்திய அணியில் 5 பேட்ஸ்மேன்கள், 2 விக்கெட் கீப்பர்கள், 3 ஆல்-ரவுண்டர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்கள், 2 சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அனுபவ வீரர்கள் அம்பாத்தி ராயுடு மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இவர் தேர்ந்தெடுத்த அணியில் இல்லை. இவர்களுக்கு பதிலாக இளம் கிரிக்கெட் வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுலை சேவாக் தனது உத்தேச உலகக் கோப்பை இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். அத்துடன் ரவீந்திர ஜடேஜா மற்றும் விஜய் சங்கர் ஆகிய இருவரையுமே தேர்வு செய்துள்ளார். வேகப் பந்து வீச்சில் முன்னணி 3 வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளார் சேவாக்.
அடுத்தது என்ன?
இம்மாத ஆரம்பத்தில் 2019 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏப்ரல் 15 அன்று அறிவிப்பதாக தெரிவித்திருந்தது. பெரும்பாலும் அதிகப்படியான இந்திய வீரர்கள் 2019 ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய அணியில் ஒருசில மாற்றங்கள் 2019 உலகக் கோப்பை அணியில் இருக்கும் என இந்திய கேப்டன் மற்றும் துணைக் கேப்டன் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இன்னும் 2 நாட்களில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட உள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்க்கும் வீரர்கள் அணியில் இடம்பெற வேண்டும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.