ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு தற்போது காயம் குணமடைந்து வருகிறது. இவர் விரைவில் அணிக்கு திரும்ப உள்ளார் என்ற செய்தி வெளியாகியது. இந்நிலையில் இவரது காயமும் இன்னும் மூன்று வாரங்களில் முழுமையாக குணமடைந்து விடும் என்று அவரது மேனேஜர் கிரேக் தெரிவித்துள்ளார். இதைப் பற்றி இங்கே விரிவாக காண்போம்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஸ் என்ற கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தார் ஸ்டீவன் ஸ்மித். அவ்வாறு விளையாடி வரும் பொழுது ஒரு போட்டியில் அவருக்கு முழங்கையில் பலத்த காயம் ஏற்பட்டது. எனவே அவரால் விளையாட முடியாமல் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதுமட்டுமின்றி பிக் பாஸ் தொடரில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்து இருந்தார்.
ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய இரு நாடுகளும் கடந்த ஆண்டு டெஸ்ட் தொடர் ஒன்றில் விளையாடியது. அந்த தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது. அப்போது பந்துவீசிய ஆஸ்திரேலிய அணியின் பான்கிரிப்ட் தனது கையில் இருந்த உப்புத்தாள் கொண்டு பந்தை சேதப்படுத்தினார். இதனை அறிந்த தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளசிஸ் நடுவரிடம் முறையிட்டார்.
அதன் பின்பு விசாரணை நடத்தப்பட்டது அந்த விசாரணையில் பந்து சேதபட்டிருப்பதை உறுதி செய்தது கிரிக்கெட் வாரியம். அதன்பிறகு ஆஸ்திரேலிய அணியின் பான் கிரிப்டிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோரின் ஒப்புதலுடன் தான் இது நடைபெற்றது என்று ஆஸ்திரேலிய அணியின் ஸ்கிரிப்ட் கூறினார்.
அதன்பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வார்னரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வார்னர் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டனர். அதன்பிறகு கிரிக்கெட் வாரியம் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஒரு வருடம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதித்தது. ஆஸ்திரேலிய அணியின் பான் கிரிப்டிற்கு 9 மாதம் விளையாட தடை விதித்தது.
எனவே ஸ்மித்ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று வரும் பிக் பாஸ் என்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தார். அப்போது முழங்கையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த சிகிச்சைக்கு பிறகு ஆறு வாரங்கள் விளையாடாமல் தொடர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ஸ்மித் விளையாடுவாரா என்று சந்தேகம் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடமும் எழுந்திருந்தது. அந்த சந்தேகங்களுக்கு தற்போது ஒரு தீர்வு கிடைத்துள்ளது.
ஸ்மித் குறித்து அவரது மேனேஜர் வாரன் கிரேக் கூறியது என்னவென்றால், ஸ்மித்திற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இன்னும் மூன்றே வாரங்களில் அவரது முழங்கை முழுமையாக சரியாகிவிடும். அடுத்து இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரிலும் உலக கோப்பையிலும் முழு உடல்தகுதியுடன் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக அவர் தெரிவித்தார்.