2019 உலகக் கோப்பை தொடரின் பயிற்சி போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி !

CRICKET WORLD CUP
CRICKET WORLD CUP

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை ஆனது இந்த வருடத்தின் மே 31 ஆம் நாள் முதல் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இவற்றில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற 10 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த உலகக்கோப்பை ஆனது 'ரவுண்ட்-ராபின்' முறையில் நடைபெற உள்ளது. உலகக் கோப்பையில் அனைத்து அணிகளும் உடன் தலா ஒரு போட்டியில் பங்கேற்க உள்ளது, இவற்றின் இறுதியில் அனைத்து அணிகளும் ஒன்பது போட்டிகளுடன் புள்ளிகளின் அடிப்படையில் சிறந்த 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். புள்ளிப் பட்டியலில் முதல் இடம்பிடித்த அணியும் நான்காம் இடம் பிடித்த அணியும் முதல் அரையிறுதி போட்டியில் பங்கேற்கும், புள்ளி பட்டியலில் இரண்டாமிடம் பிடித்த அணியும் 3 இடம் பிடித்த அணியும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பங்கேற்கும். வெற்றி பெற்ற அணிகள் உலகக் கோப்பையை பெற இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

அனைத்து உலக கோப்பை தொடர்களுக்கு முன்பும் பயிற்சி ஆட்டங்கள் ஆடுவது வழக்கம். இந்த வருடத்தில் நடைபெற உள்ள ஐசிசி உலகக் கோப்பைக்கான அட்டவணையை தற்போது ஐசிசி வெளியிட்டுள்ளது

.

மே 24 ஆம் நாள் முதல் மே 28ம் நாள் வரை, ஐந்து நாட்களுக்கு பயிற்சி போட்டிகள் நடைபெற உள்ளன. அனைத்துப் போட்டிகளும் கர்டிஃப், பிரிஸ்டோல் மற்றும் ஓவல் போன்ற மைதானங்களில் நடைபெற உள்ளன.

பயிற்சி போட்டிகள் அனைத்திலும் அணியில் உள்ள அனைத்து 15 வீரர்களும் பங்கேற்கலாம். அனைத்து பயிற்சி போட்டிகளுக்கும் சர்வதேச ஒருநாள் போட்டி அந்தஸ்து வழங்கப்படவில்லை.

அட்டவணை:

ஆப்கானிஸ்தான் :

மே 24ஆம் நாள் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், மே 27ஆம் நாள் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளன.

ஆஸ்திரேலியா:

மே 25ஆம் நாள் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் மே 27ம் நாள் இலங்கைக்கு எதிராகவும் விளையாட உள்ளன.

வங்காளதேசம்:

மே 26ஆம் நாள் பாகிஸ்தானுக்கு எதிராகவும் மே28 ஆம் நாள் இந்தியா அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளன.

இங்கிலாந்து:

மே 25ஆம் நாள் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் மே 27ஆம் நாள் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளன.

இந்தியா:

மே 25ஆம் நாள் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் மே 28 ஆம் நாள் வங்காளதேசம் அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளன.

நியூசிலாந்து:

மே 25 ஆம் நாள் இந்தியா அணிக்கு எதிராகவும் மே 28ஆம் நாள் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளன.

பாகிஸ்தான்:

மே 24ஆம் நாள் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் மே 26 ஆம் நாள் வங்காளதேசம் அணிக்கு எதிராக விளையாட உள்ளன.

தென்னாப்பிரிக்கா:

மே 24ஆம் நாள் இலங்கை அணிக்கு எதிராகவும் மே 26ஆம் நாள் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளன.

இலங்கை:

மே 24ஆம் நாள் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராகவும் மே 27 ஆம் நாள் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளன.

மேற்கிந்திய தீவுகள்:

மே 26ஆம் நாள் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராகவும் மே 28ஆம் நாள் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளன.

Quick Links

App download animated image Get the free App now