வார்னேவின் உலககோப்பை அணியில் இடம்பெறாத கவாஜா 

Usman Khawaja
Usman Khawaja

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே உலக கோப்பையில் விளையாடப் போகும் 15 பேர் கொண்ட தன்னுடைய கனவு ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளார். அவருடைய அணியில் உஸ்மான் கவாஜா இடம் பெறாமல் போனது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மே மாத இறுதியில் இங்கிலாந்தில் தொடங்கும் உலக கோப்பை போட்டிகளுக்காக அனைத்து அணிகளும் கடுமையாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில் உலக கோப்பையில் பங்கேற்கும் அணிகள் தங்கள் அணியில் விளையாட போகும் வீரர்களை ஏப்ரல் 23ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்துள்ளது. அந்த கெடு முடிய இன்னும் 14 நாட்களே உள்ளன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்னும் ஒரு வாரத்தில் தங்களுடைய உலககோப்பை அணியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து அணி ஏற்கனவே உலககோப்பை அணியை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் இடம் பிடிப்பார்களா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் . நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி கடைசியாக நடந்த 2 ஒருநாள் தொடரிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி சரியான நேரத்தில் ஃபார்முக்கு திரும்பியுள்ளது.

இந்நிலையில் உலகக் கோப்பையில் விளையாட போகும் தன் கனவு ஆஸ்திரேலிய அணியை முன்னாள் வீரர் ஷேன் வார்னே அறிவித்துள்ளார். அவர் தன்னுடைய அணியில் உஸ்மான் கவாஜாவுக்கு பதில் டார்சி ஷாட்டை சேர்த்துள்ளது ஆச்சரியம் அளிக்கும் விதமாக உள்ளது. ஏனென்றால் உஸ்மான் கவாஜா தற்போது நல்ல பார்மில் உள்ளார். மற்றபடி எல்லோரும் எதிர்பார்த்த அணியையே அவர் அறிவித்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களாக டார்சி ஷாட், டேவிட் வார்னர் , ஆரோன் பின்ச் நடுநிலை பேட்ஸ்மேன்களாக ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ் ஆகியோரையும் ஆல்ரவுண்டர்கள் ஆக கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ் இந்திய தொடரில் கவனம் பெற்ற ஆஷ்டன் டர்னர் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக மிச்செல் ஸ்டார்க், ஜய் ரிச்சர்ட்சன் , பேட் கம்மின்ஸ், நாதன் கவுல்டர்-நைல் ஆகியோரையும் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆக ஆடம் ஜாம்பா மற்றும் நாதன் லயன் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். விக்கெட் கீப்பராக அலெக்ஸ் கேரியை தேர்வு செய்துள்ளார்.

Shane Warne
Shane Warne

ஷேன் வார்னேவின் உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி பின்வருமாறு:

ஆரோன் பின்ச்(C) , டார்சி ஷாட், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ், மார்க்ஸ் ஸ்டோய்னிஸ், அஷ்டன் டர்னர், ஆடம் ஜாம்பா, நாதன் லயன், மிச்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஜய் ரிச்சர்ட்சன், நாதன் கவுல்டர் நைல், அலெக்ஸ் கேரே(WK).

உலக கோப்பையை மனதில் கொண்டு மேக்ஸ்வெல் ஆரோன் பின்ச் உட்பட பல ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இந்தாண்டு ஐபிஎல்லில் பங்கேற்கவில்லை. ஐபிஎல்-லில் விளையாடிக் கொண்டிருக்கும் அனைத்து வீரர்களும் மே 10ஆம் தேதிக்குள் பயிற்சி முகாமுக்கு திரும்ப வேண்டும் என அந்தந்த அணி நிர்வாகங்கள் வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. ஆஸ்திரேலியா அணி தனது முதல் லீக் போட்டியில் ஜூன் 1 அன்று ஆப்கானிஸ்தான் அணியை பிரிஸ்டாலில் எதிர்கொள்கிறது.

Quick Links

Edited by Fambeat Tamil