இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது நியூசிலாந்தின் மவுண்ட் மாங்குனிய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல வேண்டும் என்ற தீர்மானத்தில் களமிறங்கியது.
மறுபுறம் நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் ஆடுவதால் முதல் இரண்டு போட்டிகளில் தோற்று விட்டு இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று தொடரை இழந்துவிடக் கூடாது என கடுமையாக போராடும் முனைப்பில் இறங்கியது. இந்தியாவின் சார்பில் அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டது.
மகேந்திர சிங் தோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக களமிறக்கபட்டார். மேலும் விஜய் சங்கர் வெளியேற்றப்பட்டு ஹர்திக் பாண்டியா அந்த இடத்தை பிடித்தார். பல சர்ச்சைகளுக்கு பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா ஆடுகளத்தில் தனது இருப்பை அடிக்கடி காட்டிக்கொண்டே இருந்தார்.
துருதுருவென இருப்பது, அற்புதமாக பந்து வீசுவது என ஆடுகளத்தில் தான் இருப்பதை அனைவருக்கும் அறிவித்துக் கொண்டிருந்தார். இந்த போட்டியில் அபாரமாக ஆடி வந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 48 பந்துகளில் 28 ரன் அடித்தார்.
சுழற்ப்பந்து வீச்சாளர் யுஜவேந்திர சகாலின் 17வது ஓவரின் 2-வது பந்தை மிட் ஆனில் தட்டிவிட்டு ஒரு ரன் ஓட முயற்சித்தார் கேன் வில்லியம்சன். ஆனால் அந்த பந்து சற்று மேல் எழுந்து செல்ல அங்கு பீல்ட்ராக இருந்த ஹர்திக் பாண்டியா தனது இடப்புறம் ஒரு பெரிய டைவ் அடித்து ஒரு அற்புதமான கேட்ச் பிடித்தார்.
இந்த வருடத்தில் இப்படி ஒரு கேட்ச் இன்னும் பிடிக்கப்பட்டது இல்லை. இந்த வருடத்தின் சிறந்த கேட்ச் எனவும் கூறலாம் இப்படியாக நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் வெளியேற்றினார் பாண்டியா.
பல சர்ச்சைகளுக்கு பின்னர் தற்போது நியூசிலாந்து வந்து சேர்ந்த ஹர்திக் பாண்டியா தான் எப்போதும் அற்புதமான வீரர் என்பதை நிரூபித்துள்ளார். அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சொதப்பினாலும் அவரது ஃபீல்டிங் அவரை எந்த நாளிலும் கைவிட்டதில்லை. மைதானத்தின் 360 டிகிரியில் எந்த இடத்தில் நிற்க வைத்தாலும் அதற்கேற்றது போல் தனது உடம்பை வளைத்து சர்வதேச தரத்தில் பீல்டிங் செய்து செய்வதில் அவர் வல்லவர்.
ஒரு இளம் வீரர் பல சர்ச்சைகளை சந்தித்த பின்னர் பல ஆயிரம் மைல்கள் கடந்து மற்றொரு நாட்டிற்கு வந்து மீண்டும் தனது சரியான நிலையில் மீண்டும் ஆடுவது என்று எளிதான காரியம் இல்லை. ஆனால் ஹர்திக் பாண்டியா அதை அனாசயமாக செய்து அசத்தி வருகிறார்.
தற்போது 25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி நியூசிலாந்து அணி 95 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து ஆடிவருகிறது ராஸ் டெய்லர் 50 பந்துகளில் 23 ரன்களிலும், டாம் லேத்தம் 30 பந்துகளில் 22 ரன்கள் களத்தில் உள்ளனர். இந்தியாவின் சார்பில் புவனேஸ்வர் குமார், முகமது சமி, சஹால் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர் ஹர்திக் பாண்டியா 5 ஓவர்கள் வீசி வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.