வீடியோ: சரியான என்டில் த்ரோ அடிக்காத ஷிகர் தவான், கடுப்பான ஹர்திக் பாண்டியா!!

New Zealand v India - ODI Game 3
New Zealand v India - ODI Game 3

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மூன்றாவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை அடித்து துவம்சம் செய்து எளிதாக வென்றது. பெரிதாக எதிர்ப்பு இல்லாமல் நியூசிலாந்து அணியும் சரணடைந்தது. தற்போது திங்கட்கிழமையன்று மூன்றாவது போட்டியில் இரு அணிகளும் எதிர்கொண்டு விளையாடி வருகிறது.

நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்த மைதானத்தில் 330 ரன்கள் அடித்து விடலாம் என்ற இலக்குடன் அவர் இந்த முடிவை எடுத்தார். பல சர்ச்சைகளுக்கு பின்னர் இந்திய அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா நேரடியாக விஜய் சங்கரின் இடத்தை பிடித்தார். மேலும் மகேந்திர சிங் தோனிக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் ஒரு போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அழைக்கப்பட்டுள்ளார்.

மன அழுத்தங்கள் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகு மீண்டும் அணிக்குள் நுழைந்த ஹர்திக் பாண்டியா தனது வேலையை கச்சிதமாக செய்தார். கடந்த 2018ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.அதற்கு பின்னர் காயத்திலிருந்து குணமடைந்தது சர்வதேச போட்டியில் மீண்டும் களம் இறங்கியவர் ஆஸ்திரேலிய தொடரில் விளையாட முடியாமல் ஒரு சில சர்ச்சை காரணமாக நாடு திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் இவை அனைத்தையும் தாண்டி இன்றைய போட்டியில் மீண்டும் அணிக்குள் நுழைந்த ஹர்திக் பாண்டியா களத்தில் அற்புதமாக செயல்பட்டார். முதல் 5 ஓவர்கள் வீசி அவர் வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இருந்தார். ஆனால் முதல் சில ஓவர்கள் வீசும் போது அவருடைய பழைய நிலையில் அவர் இல்லாததை அனைவரும் உணர்ந்தே இருந்தனர். இதனால் தன்மேல் அழுத்தத்தை போட்டுக் கொண்ட அவர் ஷிகர் தவான் ஒரு பந்தினை பிடித்து வீசும்போது சரியான இடத்தில் வீசாததால் அவர்மீது கடுப்பானார்.

ஹர்திக் பாண்டியா வீசிய ஒரு ஓவரின், ஒரு பந்தில் ஷிகர் தவான் மிட் ஆன் திசையில் இருந்து பிடித்தார். பிடித்தவுடன் ஹர்திக் பாண்டியா தன்னிடம் வீசுமாறு வேகமாக சத்தம் போட்டார். ஆனால் குழப்பமடைந்த ஷிகர் தவான் எந்த என்ட் வீசுவது என தெரியாமல் பந்தை கையில் இருந்து நழுவ விட்டார். இதனால் விக்கெட் கீப்பருக்கும் இல்லாமல் பந்துவீச்சாளரான பாண்டியாவிற்கும் செல்லாமல் நட்டநடுவில் இடையில் சென்றது. இதன் காரணமாக ஒரு ரன் அதிகமாக எக்ஸ்ட்ரா ரன்னும் சென்றது. தவான் வீசிய அந்த தவறான த்ரோவினால் கடுப்பான ஹர்திக் பாண்டியா 'Come On Yaar' என்று கத்தினார்.

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது..

தற்போது இந்திய அணி வெற்றியை நோக்கி மிக எளிதாக சென்று கொண்டிருக்கிறது.30 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 160 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா 62 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். தவான் 28 ரன்கள் அடிக்க கேப்டன் விராட் கோலி 57 ரன்கள் எடுத்துள்ளார். அம்பட்டி ராயுடு உடன் விராட் கோலி தற்போது ஆடி வருகிறார். இன்னும் 20 ஓவர்களில் 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆடி வருகிறது.

Quick Links