உலகக்கோப்பையில் சில நட்சத்திர வீரர்களுக்கு அதிகபடியான வாய்ப்புகள் அளிக்கப்பட்டிருந்தும் அதனை பயன்படுத்தி கொள்ளாமல் சொதப்பி வருகின்றனர். அத்துடன் கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் தாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டிகளையும் மழையினால் இழந்துள்ளது. டாப் 4 அணிகளுக்கும் மற்ற அணிகளுக்கும் உள்ள வேறுபாடு கடினமான சூழ்நிலையில் போட்டியை கையாளும் விதம் தான். 2019 உலகக்கோப்பை தொடர் மே 30 அன்று தொடங்கி ஏற்கனவே தொடரின் பாதியை நெருங்கியுள்ளது. அரையிறுதி மற்றும் இறுதி போட்டியுடன் சேர்த்து மொத்தமாக 20 போட்டிகள் தான் இருக்கும். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை 2019 உலகக் கோப்பையில் ஒரு தோல்வியை கூட தழுவியது இல்லை. ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும், இங்கிலாந்து 2 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.
தொடரின் ஆரம்பத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்துவார்கள் என்று நம்பிய நட்சத்திர வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நாம் இங்கு 2019 உலகக்கோப்பையின் முதல் பாதியில் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்திய வீரர்கள் XI பற்றி காண்போம். இந்த XI ஒவ்வொரு அணியின் முதல் 5 ஆட்டங்களை பொறுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளது.
#1 தொடக்க ஆட்டக்காரர்கள்: ஹாசிம் அம்லா, கிறிஸ் கெய்ல்

இந்நூற்றாட்டில் டாப் ஆர்டரில் தென்னாப்பிரிக்க அணியின் முதுகெலும்பாக இருந்தவர் ஹாசிம் அம்லா. ஒருநாள் தொடரில் இவரை பார்க்கும் போது தனது பெரும் பங்களிப்பை அளித்து சிறந்த வீரராக வலம் வந்தார். 176 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 27 சதங்களுடன் 8000ற்கும் மேலான ரன்களை குவித்துள்ளார். ஹாசிம் அம்லா தன்னுடைய மூன்றாவது உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளார். எதிர்பார விதமாக இவர் விளையாடிய முதல் 4 போட்டிகளில் 13,6,6 மற்றும் 41* ஆகிய ரன்களை அடித்துள்ளார். தென்னாப்பிரிக்கா மீண்டும் தனது பழைய ஆட்டத்திற்கு திரும்ப கண்டிப்பாக இவரது ஆட்டத்திறன் முக்கியம்.
கிறிஸ் கெய்ல் தனி ஒருவராக நின்று ஆட்டத்தின் போக்கை தன் அணி வசம் மாற்றும் திறமை படைத்துள்ளார். இவரது பயமறியா அதிரடி பேட்டிங் சிறந்த பௌலர்களின் பந்துவீச்சையும் சிதைக்கும் வகையில் இருக்கும். தன் நாட்டிற்காக 5 உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ள இவர் 2 சதங்களுடன் 1000ற்கும் மேலான ரன்களை அடித்துள்ளார். ஆனால் தற்போது நடந்து வரும் உலகக்கோப்பையில் எதிர்பார்த்தபடி இவரிடமிருந்து அதிரடி ஆட்டம் வெளிப்படவில்லை. முதல் 5 போட்டியில் பாகிஸ்தானிற்கு எதிராக மட்டும் அரைசதம் விளாசியுள்ளார். மற்ற போட்டிகளில் மிகவும் மோசமான தடுமாற்றத்தை சந்தித்துள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 13 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆனார். இங்கிலாந்திற்கு எதிராக தனது சொந்த மண்ணில் வெளிபடுத்திய ஆட்டத்திறன் எங்கு சென்றது என தெரியவில்லை.
#2 மிடில் ஆர்டர்: லஹீரு திரமன்னே, ஆன்ஜீலோ மேத்திவ்ஸ்

இலங்கை அணியின் டாப் ஆர்டரில் லஹீரு திரமன்னே ஒரு முன்னணி வீரர் ஆவார். தனது ஆரம்ப காலத்தில் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தியிருந்தாலும் பின்னர் படிப்படியாக தனது ஆட்டத்தை மேம்படுத்திக் கொண்டார். 100 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 3000 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார். ஆனால் உலகக்கோப்பை தொடரில் இந்த ஆட்டத்திறன் வெளிப்படவில்லை. தான் விளையாடிய முதல் 3 உலகக்கோப்பை போட்டிகளில் 4, 25, மற்றும் 16 ஆகிய ரன்களை குவித்து அணியின் பேரழிவிற்கு காரணமாக இருந்து வருகிறார். இலங்கை அணிக்காக களத்தில் சிறிது நேரம் நிலைத்து விளையாட ஆரம்பித்தால் கண்டிப்பாக இலங்கை டாப் அணிகளுக்கு எதிராக கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
ஆன்ஜீலோ மேத்திவ்ஸ் கடந்த நூற்றாண்டிலிருந்து இலங்கை அணியின் ஒரு நிலையான ஆல்-ரவுண்டர். ஒருநாள் கிரிக்கெட்டில் 5000ற்கும் மேலான ரன்களையும், 100க்கும் மேலான விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். உலகக்கோப்பையில் இவரது ஆட்டம் மிகவும் மோசமடைந்து உள்ளது. மூன்று உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள இவர் தான் விளையாடிய 18 போட்டிகளில் ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். லெஜன்ட்ரி இலங்கை வீரர்களான குமார் சங்கக்காரா மற்றும் மஹேல்லா ஜெயவர்த்தனே போன்றோர் ஓய்வு பெற்ற பின் அவர்களது பொறுப்பிலிருந்து ஆன்ஜீலோ மேதிவ்ஸ் தற்போதைய இலங்கை அணியை நிர்வகித்திருக்க வேண்டும். ஆனால் இவர் விளளையாடிய 3 போட்டிகளிலும் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளார். இலங்கை அணி தனது வெற்றி பயணத்தை தொடர வேண்டுமெனில் ஆன்ஜீலோ மேதீவ்ஸ் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்த வேண்டும்.
#3 ஆல்-ரவுண்டர் & விக்கெட் கீப்பர்: ஆன்ரிவ் ரஸல் & சஃப்ராஸ் அகமது

2019 ஐபிஎல் தொடரில் ஆன்ரிவ் ரஸல் தனது அதிரடி பேட்டிங் மூலம் பெரும் ஆதிக்கத்தை செலுத்தினார். தனது 3வது உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ள ஆன்ரிவ் ரஸல் தனது அதிரடி பேட்டிங் மற்றும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக சிறந்த பௌலிங்கை வெளிபடுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் உலகக்கோப்பையின் ஆரம்பத்தில் இவரது மோசமான ஆட்டத்தால் மேற்கிந்தியத் தீவுகள் விளையாடியுள்ள 5 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. 4 போட்டிகளில் பங்கேற்ற இவர் 36 ரன்களை பேட்டிங்கிலும், 5 விக்கெட்டுகள் பௌலிங்கிலும் தன் பங்களிப்பாக அணிக்கு அளித்து கவலையடையச் செய்துள்ளார். ரஸல் ஐபிஎல் தொடரில் வெளிபடுத்திய ஆட்டத்தை இனிவரும் உலகக்கோப்பை போட்டிகளில் வெளிபடுத்தினால் கண்டிப்பாக மேற்கிந்தியத் தீவுகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
அஷார் அலி பிப்ரவரி 2017 அன்று பாகிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு சஃப்ராஸ் அகமது அப்பொறுப்பை ஏற்றார். தனது கேப்டன்ஷீப்பை உலகிற்கு நியாயப்படுத்தும் வகையில் 2017 சேம்பியன் டிராபியை வென்றார். மேலும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர்களில் இவரது கேப்டன்ஷீப் சிறப்பாக இருந்துள்ளது. தனது இரண்டாவது உலகக்கோப்பை தொடரில் விளையாடி வரும் இவரது கேப்டன்ஷீப் 2019 உலகக்கோப்பை தொடரின் முதல் பாதியில் மிகவும் மோசமாக உள்ளது. இதன் விளைவாக பாகிஸ்தான் 1 வெற்றி மற்றும் 3 தோல்விகளை தழுவியுள்ளது. இதைத் தவிர மோசமான பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பங்கை செய்து வருகிறார்.
#4 சுழற்பந்து வீச்சாளர்கள்: ரஷீத் கான் மற்றும் அடில் ரஷீத்

அடில் ரஷீத் கடந்த 5 ஆண்டுகளாக இங்கிலாந்தின் வழக்கமான சுழற்பந்து வீச்சாளராக உள்ளார். லெக் ஸ்பின்னரான இவர் 90 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 130 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் முதல் முறையாக உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளார். எதிர்பாரா விதமாக இவர் பங்கேற்ற அனைத்து உலகக்கோப்பை போட்டியிலும் தனது பௌலிங்கில் அதிக ரன்களை வாரி வழங்கியுள்ளார். அத்துடன் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தாத வகையில் இவரது பந்துவீச்சு உள்ளது. 5 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 6.50 எகானமி ரேட்டுடன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்தின் பந்துவீச்சில் எதிரணிக்கு மிடில் ஓவரில் தடுமாற்றத்தை ஏற்படுத்த இவரது ஆட்டத்திறன் மிகவும் அவசியம்.
குறிப்பிட்ட ஒவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் ரஷீத் கான் தனி ஒருவராக ஆட்டத்தை தான் விளையாடும் அணிக்கு ஆதரவாக மாற்றும் திறமை உடையவர் என்பது அனைத்து ஐபிஎல் ரசிகர்களுக்கும் தெரிந்த ஒன்றே. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மட்டுமல்லாமல் தனது சொந்த நாட்டிற்காகவும் சில சிறப்பான சாதனைகளை படைத்துள்ளார் ரஷீத் கான். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை கொண்டுள்ள ரஷீத்கான் ஆப்கானிஸ்தான் அணியின் தூணாக உள்ளார். தனது முதல் உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ள ரஷீத்கான் 5 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி ஒரு சிறப்பான தொடக்கத்தை அளிக்கவில்லை. இங்கிருந்திற்கு எதிரான போட்டியில் 9 ஓவர்களை வீசி 110 ரன்களை பௌலிங்கில் அளித்து இவரது மிக மோசமான பந்துவீச்சை வெளிபடுத்தியுள்ளார்.
#5 வேகப்பந்து வீச்சாளர்கள்: ஹாசன் அலி, வஹாப் ரியாஜ் மற்றும் மஸ்ரஃப் மொர்டாஜா

ஹாசன் அலி 2019 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்காக 4 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 4 போட்டிகளிலுமே இவரது பந்துவீச்சில் அதிக ரன்களை கசிய விட்டுள்ளார். அதிகம் மதிப்பிடப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் ஹாசன் அலி தன் பந்துவீச்சில் 80 ரன்களை அளித்தார். ஒரு அனுபவ வீரரின் பங்களிப்பு சரியாக இல்லாத காரணத்தால் பாகிஸ்தான் புள்ளிபட்டியலில் கடை நிலையில் உள்ளது.
வஹாப் ரியாஜ் பற்றி பேசினால் கண்டிப்பாக அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் முதலில் நியாபகம் வருவது 2015 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானிற்கு எதிராக அவரது அதிரடி அனல் பறக்கும் பந்துவீச்சுதான் காரணம். அத்துடன் 2011 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிற்கு எதிராக 46 ரன்களை அளித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் வஹாப் ரியாஜ். இந்த அனைத்து சிறப்பான ஆட்டத்திறனும் அவரை ஒரு பெரிய பௌலராக எடுத்துரைக்கும். ஆனால் 2019 உலகக்கோப்பையின் முதல் பாதியில் இவரது ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இவர் எடுத்துள்ள சில விக்கெட்டுகளிலும் அதிக ரன்களை அளித்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் மிகவும் மோசமான பந்துவீச்சை வெளிபடுத்தியது குறிப்பிடத்தக்கது. இவ்வருட உலகக்கோப்பை சீசனில் தனது சிறப்பான பௌலிங்கை வஹாப் ரியாஜ் அளிக்கவில்லை.
2007 உலகக்கோப்பை தொடரில் மஸ்ரஃப் மொர்டாஜாவின் பந்துவீச்சு இந்திய அணியை நிலை குலையச் செய்தது. இவரது சிறந்த ஆட்டத்தின் மூலம் அப்போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்றார். 12 வருடங்கள் கழிந்தும் மஸ்ரஃப் மொர்டாஜா வங்கதேச அணியில் விளையாடி வருகிறார். தற்போது வங்கதேச அணியின் கேப்டனாகவும் உள்ளார். ஆனால் இவர் தனது பந்துவீச்சின் மூலம் ரசிகர்களை கவரவில்லை. உலகக்கோப்பையில் 5 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். இனிவரும் போட்டிகளில் இவரது ஆட்டத்தை பொறுத்தே வங்கதேச அணி அரையிறுக்கு தகுதி பெறும் நிலை உள்ளது.