#3 ஆல்-ரவுண்டர் & விக்கெட் கீப்பர்: ஆன்ரிவ் ரஸல் & சஃப்ராஸ் அகமது

2019 ஐபிஎல் தொடரில் ஆன்ரிவ் ரஸல் தனது அதிரடி பேட்டிங் மூலம் பெரும் ஆதிக்கத்தை செலுத்தினார். தனது 3வது உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ள ஆன்ரிவ் ரஸல் தனது அதிரடி பேட்டிங் மற்றும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக சிறந்த பௌலிங்கை வெளிபடுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் உலகக்கோப்பையின் ஆரம்பத்தில் இவரது மோசமான ஆட்டத்தால் மேற்கிந்தியத் தீவுகள் விளையாடியுள்ள 5 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. 4 போட்டிகளில் பங்கேற்ற இவர் 36 ரன்களை பேட்டிங்கிலும், 5 விக்கெட்டுகள் பௌலிங்கிலும் தன் பங்களிப்பாக அணிக்கு அளித்து கவலையடையச் செய்துள்ளார். ரஸல் ஐபிஎல் தொடரில் வெளிபடுத்திய ஆட்டத்தை இனிவரும் உலகக்கோப்பை போட்டிகளில் வெளிபடுத்தினால் கண்டிப்பாக மேற்கிந்தியத் தீவுகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
அஷார் அலி பிப்ரவரி 2017 அன்று பாகிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு சஃப்ராஸ் அகமது அப்பொறுப்பை ஏற்றார். தனது கேப்டன்ஷீப்பை உலகிற்கு நியாயப்படுத்தும் வகையில் 2017 சேம்பியன் டிராபியை வென்றார். மேலும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர்களில் இவரது கேப்டன்ஷீப் சிறப்பாக இருந்துள்ளது. தனது இரண்டாவது உலகக்கோப்பை தொடரில் விளையாடி வரும் இவரது கேப்டன்ஷீப் 2019 உலகக்கோப்பை தொடரின் முதல் பாதியில் மிகவும் மோசமாக உள்ளது. இதன் விளைவாக பாகிஸ்தான் 1 வெற்றி மற்றும் 3 தோல்விகளை தழுவியுள்ளது. இதைத் தவிர மோசமான பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பங்கை செய்து வருகிறார்.