சனிக்கிழமையன்று சவுத்தாம்டனில் நடந்து உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானின் சவாலை சமாளித்து இந்திய அணி உலகக்கோப்பையில் ஒரு தோல்வியை கூட தழுவாத அணியாக வலம் வருகிறது. இரு அணிகளின் சிறந்த ஆட்டத்திறனை இப்போட்டியில் வெளிபடுத்தியுள்ளன. பெரும்பாலானோர் இப்போட்டியில் இந்திய அணியின் ஆட்டத்திறனை நகைப்பிற்கு உள்ளாக்கினர். இந்திய அணி குறைந்த இலக்கை அடித்திருந்தாலும் ஆப்கானிஸ்தானை சமாளித்து அணியின் கூட்டு முயற்சியால் வென்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணிக்கு பெரும் சவாலை அளித்து 50 ஓவர்களில் 224 ரன்களுக்குள்ளாகவே சுருட்டியது. பின்னர் இறுதி ஓவர் வரை சென்ற இந்த போட்டியில் ஜாஸ்பிரிட் பூம்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோரின் அனல்வேக பந்துவீச்சு மூலம் ஆப்கானிஸ்தானை சமாளித்து இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
8 மணி நேரம் நடந்த இந்த ஒருநாள் போட்டியில், சில முண்ணனி தருணங்கள் இடம்பெற்றன. இந்த தருணங்களில் சில இழப்பிடாகவும் அல்லது மகிழ்ச்சி தரும் விதமாகவும் அதன் மாற்று விகிதத்தை பொறுத்து அமைந்தது. இந்த விகித மாற்றங்கள் இரு அணிகளில் ஒரு அணிகளுக்கு சாதகமாக திரும்பி அமைந்துள்ளது.
இரு ஆசிய அணிகளும் சவுத்தாம்டனில் பல நம்பமுடியாத தருணங்கள் மற்றும் மாயவித்தை செயல்கள் போன்றவற்றை இந்திய அணி சரியாக பயன்படுத்தி கொண்டு வெற்றியை தன்வசம் மாற்றிக் கொண்டது. நாம் இங்கு ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணி மோதிய போட்டியில் நிகழ்ந்த வெற்றி மற்றும் தோல்விக்கான தருணங்களை பற்றி காண்போம்.
#1 46வது ஓவரில் இந்திய அணியின் பாரத்தை குறைத்த கேதார் ஜாதவ்
தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய பேட்ஸ்மேன்கள் அனுபவமில்லா ஆப்கானிஸ்தான் பௌலர்களுக்கு எதிராகவும் சிறப்பான பங்களிப்பை இந்திய பேட்ஸ்மேன்கள் அளிப்பார்கள் என எதிர்பார்த்தனர். ஆனால் நடந்தது முழுவதும் வேறாக இருந்தது. 44 ஓவர்களுக்கு இந்திய அணி 192 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது. 45வது ஓவர்களில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணியின் ஃபினிஷர் எம்.எஸ்.தோனி தன் விக்கெட்டை இழந்தார்.
மிடில் ஓவரில் தோனியுடன் நிலைத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய ரன்களை தன்னால் முடிந்த அளவிற்கு உயர்த்தினார். 34 வயதான கேதார் ஜாதவ் ஆட்டத்தின் தன்மைக்கேற்றவாறு நிலைத்து விளையாடி வேகப்பந்து வீச்சாளர் ஆஃப்தப் ஆலம் ஓவரை பயன்படுத்தி கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
இவர் வீசிய ஆட்டத்தின் 46வது ஓவரில் தனி ஒருவராக சிக்ஸர் மற்றும் பவுண்டரியை லெக் திசையில் விளாசி 11 ரன்களை குவித்தார். இந்த சமயத்தில் ரன் வருவது கடும் சிரமமாக இருந்தது. இந்த ஓவர் இந்திய அணிக்கு சற்று நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. டெத் ஓவரில் இந்த ஓவர் ஒரு திருப்புமுனையாக இருந்தார்.
ஆச்சரியமளிக்கும் விதத்தில் இந்திய அணி கடைசி ஓவர் வரை சென்று வென்றது. இவர் அடித்த அந்த 11 ரன்கள் ஆப்கானிஸ்தானிற்கு இழப்பிடாக இருந்தது. கேதார் ஜாதவ் வெளிபடுத்திய இந்த ஆட்டத்தை ஆப்கானிஸ்தான் டெத் ஓவரில் வெளிபடுத்த தவறியது.
#4 கடைநிலை ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களை தங்களது தந்திரமான பௌலிங்கால் வீழ்த்திய யுஜ்வேந்திர சகால் மற்றும் ஹர்திக் பாண்டியா
கடந்த 18 மாதங்களாக இந்திய அணியின் பௌலிங் திறன் பெருமளவில் மெருகேறியுள்ளது. இவர்கள் தனி ஒருவராக நின்று சிறந்த அடித்தளமிட்டு பல போட்டிகளில் வெற்றி வாய்ப்பை தேடித் தந்துள்ளனர். புவனேஸ்வர் குமார், ஜாஸ்பிரிட் பூம்ரா மற்றும் முகமது ஷமி ஆகிய மூவரும் இனைந்து ஆட்டத்தின் தொடக்க மற்றும் இறுதி ஓவர்களை சிறப்பாக வீசி சிறப்பான பௌலிங்கை வெளிபடுத்தி பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்துள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் மிடில் ஓவரில் சிறப்பான பந்துவீச்சை வெளிபடுத்துகின்றனர். தற்போது ஹர்திக் பாண்டியாவும் தனது பௌலிங்கை சிறப்பாக மேம்படுத்தி பந்துவீச்சை மேற்கொண்டு வருகிறார்.
இந்திய அணி குறைவான ரன்களை குவித்த பொழுது, இந்திய அணி தொடர்ந்து தனது ஆதிக்கத்தை உலகக் கோப்பையில் செலுத்த பெரும்பாலும் பந்துவீச்சாளர்களையே நம்பியிருந்தது. அனைத்து பௌலர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி சிறு கால இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டத்தின் இறுதி நேரத்தில் யுஜ்வேந்திர சகால் மற்றும் ஹர்திக் பாண்டியா வீழ்த்திய விக்கெட்டுகள் மூலம் இந்திய அணிக்கு போட்டி வசம் மாறியது.
இருவரும் ஆரம்பத்தில் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர், இருப்பினும் கடைநிலையில் இவர்கள் வீழ்த்திய விக்கெட் மிகச் சிறப்பாக இந்தியாவிற்கு அமைந்தது. நஜீபுல்லா ஜாட்ரான் ஒரு சிறப்பான அதிரடி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். இவர் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் நிலைத்திருந்தால் ஆட்டத்தின் வசம் இந்தியாவின் கையை விட்டு போயிருக்கும்.
42வது ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டக்காரர் ஆஃப்கானை குறைவான வேகத்தில் பந்துவீசி வீழ்தினார். ரஷீத்கான் ஒரு சுமாரான ரன் குவிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த சமயத்தில் யுஜ்வேந்திர சகால் தந்திரமாக வீசினார். அதனை ரஷீத் கான கணிக்காமல் ஒரு படி முன்னோக்கி களமிறங்கி அடிக்க முயன்றபோது பந்து பேட்டில் படாமல் மகேந்திர சிங் தோனியிடம் சென்றது. அவர் உடனே ஸ்டம்பில் அடித்து ரஷீத் கானின் விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்த விக்கெட் ஆட்டத்தின் முதல் திருப்புமுனையாக இருந்தது. முகமது நபிக்கு ஒரு சரியான மற்றும் நிலையான ஆதரவு ஆட்டக்காரர் மறுமுனையில் இல்லாமல் போனது.
#3 ஜாஸ்பிரிட் பூம்ராவின் அனல்வேக டெத் ஓவர்
ஜாஸ்பிரிட் பூம்ராவின் பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றியை பல போட்டிகளில் தீர்மானித்துள்ளது. மிகவும் இயல்பாக சிறிது கூட பதற்றமில்லாதவாறு தனது யார்கர் பந்துவீச்சை செயல்படுத்துவதில் வல்லவர் பூம்ரா. தனது வெவ்வேறு கோண வேகப்பந்து வீச்சின் மூலம் பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்வதில் பூம்ராவைப் போல் ஒரு பௌலரை காண்பது கடினமாகும்.
25 வயதான இவர் மீண்டுமொரு முறை தான் உலகின் நம்பர் 1 பௌலராக இருப்பதற்கான காரணத்தை நிறுபித்துள்ளார். பேட்ஸ்மேன்களை வீழ்த்த இவர் ஒரு மிகப்பெரிய ஆயுதம். எவ்வளவு கடினமான மைதானமாக இருந்தாலும் டெத் ஓவரில் அவரது சிறப்பான பந்துவீச்சை வெளிபடுத்த தவறவிடமாட்டார்.
விராட் கோலி 44, 47, 49 ஆகிய ஓவர்களை பூம்ரா வசம் ஒப்படைத்தார். உலகின் நம்பர் 1 பௌலர் கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் சிறந்த பந்துவீச்சை வீசினார். அத்துடன் 125 கோடி மக்களின் நன் நம்பிக்கையையும் காப்பாற்றும் வகையில் மேற்குறிப்பிட்ட ஓவர்களில் மொத்தமாக 17 ரன்களை மட்டுமே அளித்தார். குறிப்பாக 49 ஓவரில் 6 பந்தையும் யார்கராக வீசி 5 ரன்களை மட்டுமே அளித்தார்.
பூம்ராவின் பந்துவீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்துவதுடன், அந்த அணியின் ரசிகர்களுக்கும் பதட்டத்தை ஏற்படுத்துகிறார். இவரது பந்துவீச்சை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள் எப்போதுமே கடும் தடுமாற்றத்தை சந்திக்கிறார்கள். இவரது சிறந்த பந்துவீச்சால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டபோது முகமது ஷமி அதனை சமாளித்து இந்தியா வசம் வெற்றியை முழுவதுமாக திருப்பினார்.
#2 சவுத்தாம்டனில் முகமது ஷமி-யின் சிறப்பு - 2019 உலகக்கோப்பை தொடரின் முதல் ஹாட்ரிக்
முகமது ஷமி 2019 உலகக்கோப்பையில் தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானிற்கு எதிராக விளையாடினார். அத்துடன் இப்போட்டியின் டெத் ஓவர் நாயகனாகவும் திகழ்ந்தார். பூம்ராவின் மின்னல் வேக பந்துவீச்சு மூலம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி ஓவரில் 16 ரன்கள் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற தேவைப்பட்டது.
அந்த போட்டியில் 48வது ஓவரில் ஷமி 3 ரன்கள் அளித்திருந்தார். 50வது ஓவரை சற்று வேகத்தை கூட்டி விசினார், முதல் பந்தை பவுண்டரிக்கு தட்டிவிட்டார் முகமது நபி. அந்த சமயத்தில் ஆட்டத்தின் போக்கு மாறி விடுமோ என ரசிகர்கள் நினைத்த போது, மாஸ்டர் மூளைக்காரர் மகேந்திர சிங் தோனி, பௌலர் முகமது ஷமியிடம் சென்று ஆட்டத்தின் தன்மை மற்றும் பேட்ஸ்மேனின் பலவீனத்தை கணித்து தெரவித்தார். அடுத்த பந்திலேயே முகமது நபி, ஹர்திக் பாண்டியாவிடம் பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார்.
இறுதியாக ஆப்கானிஸ்தான் வெற்றி பெற 3 பந்துகளுக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. ஆப்கானிஸ்தான் 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கம்-பேக் ஹீரோ முகமது ஷமி அடுத்த இரண்டு பந்தையும் சிறப்பாக வீசி 2019 உலகக்கோப்பையில் முதல் ஹாட்ரிக் வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்திய உலகக்கோப்பை வரலாற்றில் ஹாடரிக் எடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் முகமது ஷமி என்பது குறிப்பிடத்தக்கது.
#1 ஒரே ஓவரில் பூம்ராவின் இரு விக்கெட்டுகள்
இந்திய பௌலர்கள் ஆட்டத்தின் ஆரம்பத்தில் மிகவும் கணித்து பந்துவீசினர். பேட்ஸ்மேன்களை அடித்து விளையாட விட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆப்கானிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டை வீழ்த்திய பின் மிடில் ஆர்டரில் நிலைத்து விளையாடும் திறமை கொண்ட சிறந்த அனுபவமுள்ள பேட்ஸ்மேன்கள் ஹஸ்மதுல்ல ஷஹீடி மற்றும் ரஃக்மத் ஷா ஆகியோர் களமிறங்கினர்.
மிகவும் இயல்பாக பெரிய ஷாட்களை விளாச முயற்சிக்காமல் ஒவ்வொரு ரன்களாக குவித்து 42 ரன்களை பார்டனர் ஷீப் செய்து விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த சூழ்நிலையில் இந்திய அணி விக்கெட் வீழ்த்தினால் மட்டுமே வெற்றி வாய்ப்பு நீடித்திருக்கும் என்ற நிலை ஏற்பட்டது.
இந்த நேரத்தில் விராட் கோலி, பூம்ராவிடம் பந்து வீச அழைத்தார். அவர் தனது மாஸ்டர் கிளாஸ் பந்துவீச்சை தொடர்ந்தார். இரு அணிகளின் சிறந்த வீரர்களுக்கு இடையேயான இப்போட்டியில் பூம்ரா தனது அதிரடியை வெளிபடுத்தி இரு நிலையான பேட்ஸ்மேன்களையும் ஓய்வறைக்கு அனுப்பினார்.
பூம்ரா வீசிய ஷார்ட் பந்தில் ரஹக்மத் ஷா பேட் கொண்டு அடித்ததில் டிப் திசையில் இருந்த சகாலிடம் சென்று விக்கெட்டை இழந்தார். அத்துடன் தனது மிதவேக பந்தின் மூலம் மோசமான ஸ்ட்ரோக் செய்த போது பூம்ராவிடமே கேட்ச் ஆனார். நம்பர் 1 பௌலர் ஆப்கானிஸ்தான் பேட்டிங்கிற்கு கடும் நெருக்கடியை அளித்தார்.
இதன் மூலம் இந்தியா வசம் போட்டி மாறியது. கடைநிலை பேட்ஸ்மேன்கள் பேட் செய்ய களமிறக்கப்பட்டனர். 25 வயதான இவர் உலகின் சிறந்த பௌலர் என தன்னை மீண்டும் மீண்டும் நிறுபித்து வருகிறார். போட்டியின் கடினமான சூழ்நிலையில் இவரது பந்துவீச்சு மிகவும் அதிரடியாக உள்ளது. இவர் இந்த போட்டியில் 10 ஓவர்களை வீசி 39 ரன்களை அளித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.