உலகக் கோப்பை 2019: இந்தியா vs ஆப்கானிஸ்தான்: இப்போட்டி த்ரில்லாக சென்றதற்கான 5 முக்கிய தருணங்கள்

The Men in Blues came out on top in the thriller
The Men in Blues came out on top in the thriller

#2 சவுத்தாம்டனில் முகமது ஷமி-யின் சிறப்பு - 2019 உலகக்கோப்பை தொடரின் முதல் ஹாட்ரிக்

Mohammed Shami became the second Indian to take a World Cup hat-trick
Mohammed Shami became the second Indian to take a World Cup hat-trick

முகமது ஷமி 2019 உலகக்கோப்பையில் தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானிற்கு எதிராக விளையாடினார். அத்துடன் இப்போட்டியின் டெத் ஓவர் நாயகனாகவும் திகழ்ந்தார். பூம்ராவின் மின்னல் வேக பந்துவீச்சு மூலம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி ஓவரில் 16 ரன்கள் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற தேவைப்பட்டது.

அந்த போட்டியில் 48வது ஓவரில் ஷமி 3 ரன்கள் அளித்திருந்தார். 50வது ஓவரை சற்று வேகத்தை கூட்டி விசினார், முதல் பந்தை பவுண்டரிக்கு தட்டிவிட்டார் முகமது நபி. அந்த சமயத்தில் ஆட்டத்தின் போக்கு மாறி விடுமோ என ரசிகர்கள் நினைத்த போது, மாஸ்டர் மூளைக்காரர் மகேந்திர சிங் தோனி, பௌலர் முகமது ஷமியிடம் சென்று ஆட்டத்தின் தன்மை மற்றும் பேட்ஸ்மேனின் பலவீனத்தை கணித்து தெரவித்தார். அடுத்த பந்திலேயே முகமது நபி, ஹர்திக் பாண்டியாவிடம் பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார்.

இறுதியாக ஆப்கானிஸ்தான் வெற்றி பெற 3 பந்துகளுக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. ஆப்கானிஸ்தான் 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கம்-பேக் ஹீரோ முகமது ஷமி அடுத்த இரண்டு பந்தையும் சிறப்பாக வீசி 2019 உலகக்கோப்பையில் முதல் ஹாட்ரிக் வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்திய உலகக்கோப்பை வரலாற்றில் ஹாடரிக் எடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் முகமது ஷமி என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Links