உலகக் கோப்பை 2019: இந்தியா vs ஆப்கானிஸ்தான்: இப்போட்டி த்ரில்லாக சென்றதற்கான 5 முக்கிய தருணங்கள்

The Men in Blues came out on top in the thriller
The Men in Blues came out on top in the thriller

#1 ஒரே ஓவரில் பூம்ராவின் இரு விக்கெட்டுகள்

Bumrah swung the game in India's favour by dismissing both set batsmen in the 29th over
Bumrah swung the game in India's favour by dismissing both set batsmen in the 29th over

இந்திய பௌலர்கள் ஆட்டத்தின் ஆரம்பத்தில் மிகவும் கணித்து பந்துவீசினர்‌. பேட்ஸ்மேன்களை அடித்து விளையாட விட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆப்கானிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டை வீழ்த்திய பின் மிடில் ஆர்டரில் நிலைத்து விளையாடும் திறமை கொண்ட சிறந்த அனுபவமுள்ள பேட்ஸ்மேன்கள் ஹஸ்மதுல்ல ஷஹீடி மற்றும் ரஃக்மத் ஷா ஆகியோர் களமிறங்கினர்.

மிகவும் இயல்பாக பெரிய ஷாட்களை விளாச முயற்சிக்காமல் ஒவ்வொரு ரன்களாக குவித்து 42 ரன்களை பார்டனர் ஷீப் செய்து விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த சூழ்நிலையில் இந்திய அணி விக்கெட் வீழ்த்தினால் மட்டுமே வெற்றி வாய்ப்பு நீடித்திருக்கும் என்ற நிலை ஏற்பட்டது.

இந்த நேரத்தில் விராட் கோலி, பூம்ராவிடம் பந்து வீச அழைத்தார்‌. அவர் தனது மாஸ்டர் கிளாஸ் பந்துவீச்சை தொடர்ந்தார். இரு அணிகளின் சிறந்த வீரர்களுக்கு இடையேயான இப்போட்டியில் பூம்ரா தனது அதிரடியை வெளிபடுத்தி இரு நிலையான பேட்ஸ்மேன்களையும் ஓய்வறைக்கு அனுப்பினார்.

பூம்ரா வீசிய ஷார்ட் பந்தில் ரஹக்மத் ஷா பேட் கொண்டு அடித்ததில் டிப் திசையில் இருந்த சகாலிடம் சென்று விக்கெட்டை இழந்தார்‌‌. அத்துடன் தனது மிதவேக பந்தின் மூலம் மோசமான ஸ்ட்ரோக் செய்த போது பூம்ராவிடமே கேட்ச் ஆனார். நம்பர் 1 பௌலர் ஆப்கானிஸ்தான் பேட்டிங்கிற்கு கடும் நெருக்கடியை அளித்தார்.

இதன் மூலம் இந்தியா வசம் போட்டி மாறியது. கடைநிலை பேட்ஸ்மேன்கள் பேட் செய்ய களமிறக்கப்பட்டனர். 25 வயதான இவர் உலகின் சிறந்த பௌலர் என தன்னை மீண்டும் மீண்டும் நிறுபித்து வருகிறார். போட்டியின் கடினமான சூழ்நிலையில் இவரது பந்துவீச்சு மிகவும் அதிரடியாக உள்ளது. இவர் இந்த போட்டியில் 10 ஓவர்களை வீசி 39 ரன்களை அளித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Quick Links

App download animated image Get the free App now