2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் தோல்வியை இங்கிலாந்திற்கு எதிராக 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. ஜாஸ்பிரிட் பூம்ராவின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் ரோகித் சர்மாவின் பொறுப்பான சதங்களுக்கிடையில் இந்திய அணி தேவையான ரன் ரேட்டை சரியாக கடைபிடிக்காத காரணத்தால் தோல்வியுற்றுள்ளது. அத்துடன் கடைநிலையில் சில தவறான செயல்களை இந்திய மேற்கொண்டுள்ளது.
இப்போட்டியில் அதிகப்படியான சாதனைகளை இந்திய வீரர்கள் படைத்துள்ளனர். 2003 உலகக்கோப்பை தொடரில் ஒரே தொடரில் 3 சதங்களை விளாசி சாதனை படைத்த கங்குலியின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்தார். விராட் கோலி உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 5 அரைசதங்களை குவித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். எதிர்பாராத விதத்தில் சில சிறப்பான சாதனைகள் குவிக்கப்பட்டாலும், சில மோசமான சாதனைகளும் குவிக்கப்பட்டுள்ளன.
28 வயதான லெக் ஸ்பின்னர் யுஜ்வேந்திர சகால் இப்போட்டியில் 10 ஓவர்களை வீசி 88 ரன்களை பௌலிங்கில் அளித்து, இந்திய உலகக்கோப்பை வரலாற்றில் பௌலிங்கில் அதிக ரன்களை குவித்த முதல் இந்தியர் என்ற மோசமான சாதனையை முறியடித்துள்ளார். அத்துடன் இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் 5வது மோசமான பௌலிங்கை வீசி மோசமான சாதனையை படைத்துள்ளார்.
நாம் இங்கு உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர்களின் 3 மோசமான பந்துவீச்சை பற்றி காண்போம்.
#1 கர்ஸன் கவ்ரி - 83 ரன்கள் vs இங்கிலாந்து
கர்ஸன் தேவ்ஜீபாய் கவ்ரி இந்திய அணியின் இடதுகை மிதவேக பந்துவீச்சாளராக 1970ன் இறுதியிலிருந்து 1980ன் ஆரம்பம் வரை இருந்தார்.
இவர் ஆரம்ப உலகக்கோப்பை தொடரான 1975லும், 1979 உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். இந்திய அணியின் முதல் உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து லண்டனில் உள்ள மைதானத்தில் எதிர்கொண்டது. இங்கிலாந்து கேப்டன் மைக் டெனேஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பான பேட்டிங்கை மேற்கொண்டு 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 60 ஓவர்களுக்கு 334 ரன்களை குவித்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் டெனிஷ் அமீஸ் 137 ரன்களை விளாசி ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
இங்கிலாந்தின் அதிரடி பேட்டிங்கிற்கு எதிராக இந்திய பௌலர்கள் மிகவும் மோசமாக தடுமாறினர். கவ்ரி மிகவும் அதிகமாக தடுமாறி தான் வீசிய 11 ஓவர்களில் 1 மெய்டனுடன் விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 88 ரன்களை அளித்தார்.
#2 ஜவஹால் ஶ்ரீ நாத் - 87 ரன்கள் vs ஆஸ்திரேலியா
உலகக்கோப்பை வரலாற்றில் இந்த மோசமான சாதனையை கடந்த முறை தன் வசம் வைத்திருந்த இந்திய பௌலர் ஜவஹால் ஶ்ரீ நாத். 2003 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் 10 ஓவர்களை வீசி 83 ரன்களை அளித்தார்.
மார்ச் 23, 2003ல் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இப்போட்டி ஆடம் கில்கிறிஸ்ட் 48 பந்துகளில் 57 ரன்களை குவித்து அதிரடி தொடக்கத்தை ஆரம்பித்தார். ரிக்கி பாண்டிங் (148*) மற்றும் டேமின் மார்டின் (88*) ஆகியோரது பொறுப்பான பங்களிப்பு மூலம் இந்திய பந்துவீச்சு சிதைக்கப்பட்டு அதிரடி பேட்டிங் வெளிபட்டது.
இந்திய கேப்டன் சவ்ரவ் கங்குலி அந்த போட்டியில் 8 பௌலர்களை பயன்படுத்தினார். இருப்பினும் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங்கை சிறிது கூட கட்டுபடுத்த இயலவில்லை. ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 359 ரன்களை குவித்தது.
இந்திய பௌலர் ஜவஹால் ஶ்ரீ நாத் ஆஸ்திரேலிய பேட்டிங்கால் மிகுந்த நெருக்கடியை சந்தித்தார். இவர் வீசிய 10 ஓவர்களில் 12 பவுண்டரிகளை அளித்து 87 ரன்களை வாரி இறைத்தார்.
#1 யுஜ்வேந்திர சகால் - 88 ரன்கள் vs இங்கிலாந்து
பிர்மிங்காம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை அதிக அளவு சுழல வைக்கவில்லை. இதனால் இந்திய லெக் ஸ்பின்னர் யுஜ்வேந்திர சகால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டார்.
இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. காயம் காரணமாக அணியிலிருந்து விலகியிருந்த ஜேஸன் ராயால் இங்கிலாந்து வெற்றி அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது. எனவே இந்தியாவிற்கு எதிரான போட்டியில் களமிறக்கப்பட்ட அவர் பேர்ஸ்டோவுடன் இனைந்து அதிரடி தொடக்கத்தை அளித்து முதல் பவர் பிளே ஓவரில் (1-10 ஓவர்கள்) 47 ரன்களை குவித்தனர். இரண்டாவது பவர் பிளே ஆரம்பமான உடன் மிகவும் அதிரடி ஆட்டத்தை இருவரும் வெளிபடுத்த ஆரம்பித்தனர். இந்த அதிரடி தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஜ்வேந்திர சகால்.
எதிர்பார விதமாக சகால் 10 ஓவர்களை வீசி 88 ரன்களை தனது பௌலிங்கில் அளித்தார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். இவரது இந்த மோசமான பந்துவீச்சினால் இவ்வுலககக் கோப்பை தொடரில் சகால் மட்டும் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே இதே மைதானத்தில் கடந்த வாரத்தில் நடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து மோதிய போட்டியில் ஆப்கானின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் 9 ஓவர்கள் வீசி 110 ரன்களை இங்கிலாந்து பௌலர்களிடம் வாரி வழங்கினார். இதுவே உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு பௌலரின் அதிகபட்ச பௌலிங் ரன்களகும்.