#1 யுஜ்வேந்திர சகால் - 88 ரன்கள் vs இங்கிலாந்து
பிர்மிங்காம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை அதிக அளவு சுழல வைக்கவில்லை. இதனால் இந்திய லெக் ஸ்பின்னர் யுஜ்வேந்திர சகால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டார்.
இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. காயம் காரணமாக அணியிலிருந்து விலகியிருந்த ஜேஸன் ராயால் இங்கிலாந்து வெற்றி அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது. எனவே இந்தியாவிற்கு எதிரான போட்டியில் களமிறக்கப்பட்ட அவர் பேர்ஸ்டோவுடன் இனைந்து அதிரடி தொடக்கத்தை அளித்து முதல் பவர் பிளே ஓவரில் (1-10 ஓவர்கள்) 47 ரன்களை குவித்தனர். இரண்டாவது பவர் பிளே ஆரம்பமான உடன் மிகவும் அதிரடி ஆட்டத்தை இருவரும் வெளிபடுத்த ஆரம்பித்தனர். இந்த அதிரடி தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஜ்வேந்திர சகால்.
எதிர்பார விதமாக சகால் 10 ஓவர்களை வீசி 88 ரன்களை தனது பௌலிங்கில் அளித்தார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். இவரது இந்த மோசமான பந்துவீச்சினால் இவ்வுலககக் கோப்பை தொடரில் சகால் மட்டும் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே இதே மைதானத்தில் கடந்த வாரத்தில் நடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து மோதிய போட்டியில் ஆப்கானின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் 9 ஓவர்கள் வீசி 110 ரன்களை இங்கிலாந்து பௌலர்களிடம் வாரி வழங்கினார். இதுவே உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு பௌலரின் அதிகபட்ச பௌலிங் ரன்களகும்.