உலகக்கோப்பை போட்டிகளில் சிறப்பான செயல்பாட்டை அளிக்கும் அணிகளில் ஒன்றாக உள்ளது, இந்திய அணி. இதுவரை 11 உலக கோப்பை தொடர்களில் விளையாடியுள்ள இந்திய அணி 1983 மற்றும் 2011ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டங்களை வென்று உள்ளது. அதுமட்டுமல்லாது, ஆறு முறை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது, இந்திய அணி. 2007ஆம் ஆண்டு தவிர மற்ற உலக கோப்பை தொடர்களில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளது, இந்தியா. இந்திய அணியில் பல்வேறு திறமையான கிரிக்கெட் வீரர்கள் இருந்தாலும் உலகக் கோப்பை தொடர் போன்ற பெரிய தொடர்களில் வெகு சிலருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும். எனவே, பல்வேறு ஆண்டுகளாக இந்திய அணியில் அங்கம் வகித்தாலும் உலக கோப்பை தொடரில் வாய்ப்பளிக்கப்படாத 7 கிரிக்கெட் வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#7.பிரவீன்குமார்:
எந்த ஒரு கிரிக்கெட் மைதானத்திலும் தனது அபார ஸ்விங் பந்து வீச்சு தாக்குதலால் விக்கெட்டை வீழ்த்தும் திறன் பெற்றவர், பிரவீன்குமார். இவரது பந்துவீச்சில் பந்து அதிவேகமாக வீசப்படாமல் இருந்தாலும் ஸ்விங் தாக்குதலில் சிறப்பாக செயல்பட்டு உள்ளது. இதுவரை 68 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பிரவீன்குமார் அவற்றில் 27 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும், இவரது பௌலிங் எகனாமி 5.13 என்ற அளவில் சிறப்பாக அமைந்துள்ளது. 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர், துரதிஷ்டவசமாக இவருக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் சிறப்பாக அமையவில்லை. இறுதியாக 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒருநாள் கிரிக்கெட்டில் இடம் பிடித்திருந்தார், பிரவீன்குமார். அதன் பின்னர், கடந்த ஆண்டு அனைத்து தரப்பு போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
#6.இசாந்த் சர்மா:
இந்திய டெஸ்ட் அணியின் பந்துவீச்சில் முதுகு தூணாக விளங்கிவருகிறார் இசாந்த் சர்மா. ஆனால், இவரின் பங்களிப்பு ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக அமையவில்லை. இதுவரை 80 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 115 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட காரணங்களால் இவர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஒதுக்கப்பட்டார். 2011 மற்றும் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களில் காயம் காரணமாக இடம்பெறாமல் போனார். அதன்பின்னர், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு இன்னும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார், இசாந்த் சர்மா.
#5.வினய் குமார்:
கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல்லில் சிறப்பாக பங்காற்றும் பந்துவீச்சாளர்களில் ஒருவராக வினய் குமார் இருந்து வருகிறார். இருப்பினும், இவர் சர்வதேச போட்டிகளில் அவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்த முற்படவில்லை. மணிக்கு 130 முதல் 135 கிலோ மீட்டர் வேகம் வரை பந்துவீசும் ஆற்றல் பெற்ற இவர், அதிவேக பந்து வீச்சு தாக்குதலை வெளிப்படுத்தியதில்லை. இதுவரை 31 நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 38 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் ஒரு போட்டியில் 9 ஓவர்கள் வீசி 100 ரன்களை வாரி வழங்கினார். அதன் பின்னர், இந்திய அணியில் இருந்து இவர் காணாமல் போனார். மேலும், எந்த ஒரு உலக கோப்பை தொடரிலும் இவர் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.