#4.அம்பத்தி ராயுடு:
போதிய திறமை மற்றும் தகுதி இருந்தும் சர்வதேச கிரிக்கெட்டில் தடம்பதிக்க சற்று சிரமப்பட்ட வீரர்களில் ஒருவர், அம்பத்தி ராயுடு. 2013ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் கண்டார். அதன் பின்னர், இந்திய அணியில் அவ்வப்போது இடம்பெற்று இருந்தார். 2015ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இடம்பெற்ற போதிலும் ஒரு போட்டியில் கூட இவர் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. கடந்த ஓராண்டு காலமாக இந்திய அணியின் நான்காம் இடத்திற்கு உரிய பேட்ஸ்மேனாக காணப்பட்டார். அதன் பின்னர், இந்திய அணியின் தேர்வாளர்கள் இவருக்கு பதிலாக விஜய் சங்கரை உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் இணைத்து இவரின் உலக கோப்பை கனவை பறித்தனர். இதுவரை 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 47 என்ற பேட்டிங் சராசரியுடன் 1694 ரன்களை குவித்துள்ளார்.
#3.அமித்மிஸ்ரா :
2010ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் அதிர்ஷ்டமில்லாத வீரர்களில் ஒருவராக வலம் வருகிறார், அமித் மிஸ்ரா. இந்திய அணியில் அவ்வப்போது இடம் பெற்று அதன் பின்னர், வெளியேறியும் நிலையில்லாமல் இருந்தார், அமித் மிஸ்ரா. 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இவரை விட இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்தது. 2015ஆம் ஆண்டிலும் இவர் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அதன் பின்னர், 2017 ஆம் ஆண்டு குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் போன்ற ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர்களின் வருகையால் அமித் மிஸ்ராவின் சர்வதேச வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இதுவரை 36 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 64 விக்கெட்களை கைப்பற்றினார். மேலும், இருமுறை ஒரே ஆட்டத்தில் தலா 5 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.