நடந்தது என்ன?
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள அலிபூர்தூர் மாவட்டத்தில் "எம்.எஸ்.தோனி ஹோட்டல்" என்ற உணவகம் இயங்கி வருகிறது. அந்த உணவகத்திற்கு வருகை தரும் ஒவ்வொரு தோனி ரசிகர்களுக்கும் இலவச உணவை வழங்கி வருகிறது. அந்த உணவகத்தின் உரிமையாளர் ஷேம்பி போஸ் தோனியின் தீவிர ரசிகர்.
உங்களுக்கு தெரியுமா...
எம்.எஸ்.தோனி விளையாட்டின் மிகப்பெரிய தூதராக வலம் வருகிறார். இந்திய கிரிக்கெட் அணிக்காக பெரும் பங்களிப்பை அளித்த வீரர்களுள் முன்னணி வீரராக தோனி உள்ளார். இவரது கேப்டன் ஷீப் திறனின் மூலம் இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஐம்பது ஓவர் உலகக் கோப்பையை வென்றது. 2019 உலகக் கோப்பையானது தோனியின் கடைசி முக்கிய ஐசிசி தொடராக இருக்கலாம். முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி 2019 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு ஓய்வு பெறுவார் என தெரிகிறது.
கதைக்கரு
மேற்கு வங்கத்தில் உள்ள இந்த உணவகத்தில் தினமும் பெங்காலி உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த உணவத்தில் பரிமாறப்படும் உணவு மற்றும் அந்த உணவகம் முழுவதும் தோனியின் புகைப்படங்கள் சிறு சிறு இடங்களில் இடம்பெற்றுள்ளன.
IANS என்ற தனியார் பத்திரிகை சந்திப்பில் அந்த உணவகத்தின் 32 வயதான உரிமையாளர் கூறியதாவது, தற்போது துர்கா பூஜை திருவிழா நடைபெற்று வருகிறது. இரு நாட்கள் கோலாகலமாக நடைபெறும். அனைவருக்குமே இந்த உணவகத்தை நன்கு தெரியும், மற்றும் எல்லோரும் வந்து சாப்பிட்டு விட்டு செல்கின்றனர். தோனி ஹோட்டல் பற்றி யாரிடம் கேட்டாலும், உங்களுக்கு இந்த உணவகத்திற்கு தக்க வழியை காண்பித்து விடுவார்கள்.
இந்திய முன்னாள் கேப்டனை புகழ்ந்து தள்ளிய ஷேம்பி போஸ் குறிப்பிட்டுள்ளதாவது, தோனியை வெறுப்பவர்கள் என யாரும் இல்லை. என்னுடைய குழந்தை பருவத்திலிருந்தே தோனி மீது அளவுகடந்த அன்பு உள்ளது. இவர் தேர்ந்தெடுக்கும் சரியான முடிவுகள் மற்றும் அந்த முடிவில் இவர் வெளிபடுத்தும் சிறப்பான ஆட்டத்திறனே தோனியை பெரிய லெஜன்டாக மாற்றியமைத்துள்ளது. இவர் எனது வழிகாட்டியாக உள்ளார்.
என்னுடைய கனவு நனவாகாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் ஒருவேளை நனவாகினால் எம்.எஸ்.தோனியை என்னுடைய உணவகத்தில் வந்து உணவருந்த அழைப்பேன். இதனை ஒரு வேண்டுகோளாக அவரிடம் தெரிவிப்பேன். மகேந்திர சிங் தோனிக்கு சாதத்துடன் கூடிய மீன் குழம்பு மிகவும் பிடிக்கும் என்பதை நான் அறிவேன். கண்டிப்பாக ஒருநாள் என்னுடைய நீண்ட கால கனவு நனவாகும் என நம்பிக்கைபட ஷேம்பி போஸ் கூறி தன்னுடைய உரையை முடித்தார்.
அடுத்தது என்ன?
இந்திய 2019 உலகக் கோப்பை தொடரை அதிரடி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. அதும் மிகப்பெரிய கிரிக்கெட் அணிகளான தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய நாட்டு அணிகளுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி ஜீன் 13 அன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட உலகக் கோப்பை போட்டியான இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஜீன் 16 அன்று ஓல்ட் டஃபோர்ட் மைதானத்தில் மோத உள்ளது.