கதை என்ன?
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றப்பட்டார், மேலும் தற்போது நடைபெற்று வரும் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் பங்கேற்க மாட்டார். அவருக்கு மாற்றாக, 26 வயதான சுனில் ஆம்ப்ரிஸ் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவார் என்று தகவல் வெளிவந்துள்ளது.
உங்களுக்குத் தெரியாவிட்டால்…
ஆண்ட்ரே ரஸ்ஸல் வெஸ்ட இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் மற்றும் நட்சத்திர வீரர் ஆவார். தற்போது ஆண்ட்ரே ரஸ்ஸல் முழங்கால் காயத்தால் சில காலமாக அவதிப்பட்டு வருகிறார். ஐ.பி.எல்லில் கூட, ஆண்ட்ரே ரஸ்ஸல் தனது ஆட்டத்தை பேட்டிங்கில் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதற்காக சில ஆட்டங்களில் பந்து வீச வேண்டாம் என்று விரும்பினார்.
கதைக்கரு
31 வயதான வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் தனது அணிக்கு மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க மாட்டார். ஆண்ட்ரே ரஸ்ஸல் போட்டியின் தொடக்கத்திலிருந்து இடது முழங்காலில் காயத்துடன் போராடி வந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி அமைப்பின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தார் இவர். ஆண்ட்ரே ரஸ்ஸல் உலக கோப்பை மெகா நிகழ்வில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான ஒருநாள் போட்டிகளில் மீண்டும் விளையாடி வந்து கொண்டிருந்தார். தற்போது இவரின் காயத்தைக் கருத்தில் கொண்டு அவரது பங்கேற்பு எப்போதும் சந்தேகத்தில் இருக்கிறது.
இந்த உலகக் கோப்பை தொடரில் கூட, மூன்றாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடுவதற்கு முன்பு அவர் முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடினார். ரஸ்ஸல் ஆல்ரவுண்டர் அடுத்த இரண்டு போட்டிகளில் மீண்டும் முன்னேறினார்.
ஆனால் மான்செஸ்டரில் நியூசிலாந்திற்கு எதிரான மோதலுக்கு அவர் மீண்டும் வெளியேறுவதற்கு முன்பு தனது முழு ஓவர்களையும் கூட முடிக்கவில்லை. நான்கு போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஆண்ட்ரே ரஸ்ஸல், ஆனால் இவர் பேட்டிங்கில் எந்தொரு சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்த வில்லை. தற்போது இவரின் இழப்பு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரும் பாதிப்பாக இருக்கிறது.
இந்நிலையில் இவரின் இடத்திற்கு 26 வயதான சுனில் ஆம்ப்ரிஸ் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவார் என்று தகவல் வெளிவந்துள்ளது. சுனில் ஆம்ப்ரிஸ் வலது கை பேட்ஸ்மன் ஆவார். இவர் குறைவாக ஓடிஐ தெடர்களில் அதிக ரன்கள் குவித்துள்ளார். சுனில் மொத்தம் ஓடிஐ தெடரில் 316 ரன்கள் குவித்துள்ளார். இவரின் அதிகபட்ச ஸ்கோர் 148 ஆகும். எனவே, இந்த வாய்ப்பை சுனில் பயன்படுத்தி இந்த உலகக் கோப்பையில் தனது திறமையை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.
அடுத்து என்ன?
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த உலகக் கோப்பையில் 6 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்று பெற்றுள்ளது. ஜூன் 27 அன்று மான்செஸ்டரில் இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த போட்டியில் விளையாட உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தற்போது புள்ளிகள் அட்டவணையில் 3 புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்தில் அமர்ந்துள்ளனர்.